Published:Updated:

அவள் சினிமா: ரியல் சிங்கப்பெண்!

டாப்ஸி
பிரீமியம் ஸ்டோரி
டாப்ஸி

‘அவரு என் புருஷன்ங்க... என்னை அடிக்க அவருக்கு உரிமை இருக்கு!’ - இப்படித்தான் திரைப்படங்களில் பெண்கள் இதுவரை பேசியிருக்கிறார்கள். ஆனால்...

அவள் சினிமா: ரியல் சிங்கப்பெண்!

‘அவரு என் புருஷன்ங்க... என்னை அடிக்க அவருக்கு உரிமை இருக்கு!’ - இப்படித்தான் திரைப்படங்களில் பெண்கள் இதுவரை பேசியிருக்கிறார்கள். ஆனால்...

Published:Updated:
டாப்ஸி
பிரீமியம் ஸ்டோரி
டாப்ஸி
அம்ரிதாவின் வாழ்வில் எல்லாம் சரியாக இருக்கின்றன. இல்லத்தில் எப்போதும் சிரிப்பொலியும், இல்லறத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கின்றன.

அம்மாவைப்போலவே பார்த்துக்கொள்ளும் மாமியார், அன்பான கணவன், எப்போது வேண்டுமானாலும் போய்வர பிறந்த வீடு, பாசமான தம்பி, மகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு சுதந்திரம் அளிக்கும் அப்பா... இப்படி இன்னும் இன்னும் அவள் வாழ்வின் வரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சொல்லப்போனால், அம்ரிதாவின் வாழ்க்கை நம் எல்லோருடையதும்தான்.

அம்ரிதா, டாப்ஸி
அம்ரிதா, டாப்ஸி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலை எழுந்ததும் வெளியே ஒழுங்கற்றுக் கிடக்கும் செய்தித் தாள்கள் மற்றும் பால் பாட்டிலை எடுத்து வந்து டீ போடுகிறாள். செடிகளுக்குத் தண்ணீர்விட்டுக்கொண்டே சூடான டீயுடன் அந்தக் காலைப் பொழுதை ரசிக்கிறாள். பக்கத்துவீட்டுப் பெண்ணும் இவளும் நட்புடன் ஒரு புன்னகையைப் பகிர்ந்துகொள்கின்றனர். அந்த நிமிடம்... அந்த நொடியை மிகவும் விரும்புகிறாள். கணவன் விக்ரம் அலுவலகம் கிளம்புகிறான். அவனின் வாலட் வரை ஞாபகப்படுத்தி, அலுவலக அவசரத்தில் காரில் சென்று அமர்ந்தவனுக்குச் சப்பாத்தியையும் ஊட்டுகிறாள் அம்ரிதா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருமணத்துக்குப் பிறகு குடும்பத் தலைவியாக மட்டும் இருக்க வேண்டுமென்பது முழுக்க முழுக்க அவள் எடுத்த முடிவுதான். `இது முழுக்க முழுக்க நான் காதலுடன் செய்யும் ஒரு செயல்' என்பது அம்ரிதாவிடமிருந்தே வரும் வார்த்தைகள்.

‘அவரு என் புருஷன்ங்க... என்னை அடிக்க அவருக்கு உரிமை இருக்கு!’ - இப்படித்தான் திரைப்படங்களில் பெண்கள் இதுவரை பேசியிருக்கிறார்கள். ஆனால், ‘தப்பட்’ திரைப்படத்தில் அம்ரிதாவாக டாப்ஸி எடுக்கும் அந்தத் துணிச்சலான முடிவில் அத்தனை அறம் !

எல்லாம் சரியாக இருக்கும் அந்த சந்தோஷமான வாழ்க்கையில் ஒரு சம்பவம். கார்ப்பரேட் அரசியலுக்கு பலியாகும் கணவன் விக்ரமின் மூன்று வருட உழைப்பு, அதனால் ஏற்படும் கோபம், ஏமாற்றம், பார்ட்டியில் குடித்த மது காரணமாக அவன் தன் சுயத்தை இழந்த அந்த ஒற்றை நொடி... யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தேறிவிடுகிறது. அனைவரின் முன்னிலையிலும் மனைவி அம்ரிதாவை ‘பளார்’ என அறைந்துவிடுகிறான் விக்ரம். தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் செய்த தவறுதான் அது. இன்றைய இந்தியாவில் மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக இங்கே அரங்கேறும் ஒரு செயல்தான் அது. இப்படி ஆயிரமாயிரம் சமாதானங்கள் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அம்ரிதா ஒரு முடிவெடுக்கிறாள். விவாகரத்து! யாரிடம் அதைச் சொன்னாலும் ‘ஒரு தடவை தெரியாம அறைஞ்சதுக்கு விவாகரத்தா?’ என்று வருத்தம் கொள்கிறார்கள். ஒரு மனைவி தன் கணவனை விட்டுப் பிரிந்து செல்ல, `ஓர் அறை’ என்பது போதுமான காரணமா... `போதும்' என்கிறாள் அம்ரிதா!

‘அவரு என் புருஷன்ங்க... என்னை அடிக்க அவருக்கு உரிமை இருக்கு!’ - இப்படித்தான் திரைப்படங்களில் பெண்கள் இதுவரை பேசியிருக்கிறார்கள். ஆனால், ‘தப்பட்’ திரைப்படத்தில் அம்ரிதாவாக டாப்ஸி எடுக்கும் அந்தத் துணிச்சலான முடிவில் அத்தனை அறம். கொலைகூட ஒரு நொடியில் எடுக்கப்படும் முடிவு ஒன்றின் நீட்சிதான். அதற்குப் பெரிய பெரிய தண்டனைகள் இருக்கும்போது, தன் தனிப்பட்ட பிரச்னை, அதனால் ஏற்பட்ட கோபம்... அவற்றை மனைவியின் கன்னத்தில் இறக்கிவைக்கும் கணவன்மார்களின் ஆணாதிக்க மனோபாவத்துக்கு விவாகரத்து என்பது சரியான தண்டனைதானே எனக் கேட்கிறது அனுபவ் சின்ஹா இயக்கியிருக்கும் ‘தப்பட்.’

‘ரா ஒன்’ போன்ற கமர்ஷியல் சினிமாக்களில் தன் கரியரைத் தொடங்கிய அனுபவ் சின்ஹா, ‘முல்க்’, ‘ஆர்டிகள் 15’, இப்போது ‘தப்பட்’ என மத அரசியல், சாதி அரசியல், பாலின அரசியல் என வேறு தளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார். அம்ரிதாவாக டாப்ஸி அத்தனை சிறப்பானதொரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். விவாகரத்து, நீதிமன்றம், வழக்கு என்றாகிவிட்டபோது, `எதிர்த்தரப்பு நடந்த சம்பவத்தை எப்படி வேண்டுமானாலும் திரித்துக்கூறுவார்கள்... ஜீவனாம்சத்தை முன்னரே கேட்டு வைப்போம்' என்று அறிவுறுத்தும் வக்கீலிடம், `I want to play fair!' என்று கூறிவிட்டு, `பணம் ஏதும் தேவையில்லை. என் கணவரிடம் இப்போது எனக்குக் காதல் இல்லை. அதனால் விவாகரத்து மட்டும் போதும்' என்று சொல்லும் அம்ரிதாவின் துணிச்சல் அப்ளாஸ் அள்ளுகிறது. எதிர்பார்த்தபடியே எதிர்த்தரப்பு இல்லாத கதைகளை எடுத்துக் கொண்டு வந்து பெண்ணின் மீதே களங்கம் ஏற்படுத்த முயல, அப்போதும் உடையாமல், வளைந்து கொடுக்காமல், `I still want to play fair!' என்று அம்ரிதா கூறுவது பிகில்!

ஒரு ‘ரியல் சிங்கப்பெண்’ணின் கதை!

`ஓர் அறை’... அதைத் தொடர்ந்து விவாகரத்து முடிவு என ஒற்றை வரிக்கதையை இரண்டு மணி நேரப் படமாக்குவது சிரமமான ஒன்றுதான். அதை ஈடுகட்ட, இதை அம்ரிதாவின் கதையாக மட்டும் கட்டமைக்காமல் நிறைய பெண் கதாபாத்திரங்களை உள்ளே புகுத்தி, அவர்களின் வாழ்வியலையும் நமக்குக் கடத்தி நெகிழச் செய்திருக்கிறார் இயக்குநர். கணவனை இழந்தாலும் வேறு யாரையும் விரும்பாமல் தன் மகளை வைராக்கியத்துடன் வளர்க்கும் சிங்கிள் மதர், சுயநலமிக்க தன் கணவனைப் புன்னகையுடன் சகித்துக்கொள்ளும் அம்ரிதா வின் வக்கீல், விவாகரத்து முடிவுக்குத் துணை நிற்கும் அம்ரிதாவின் தம்பியின் கேர்ள் ஃபிரெண்ட், இன்னமும் குழந்தையாகச் சுற்றித் திரிந்து கொடுமைக்காரக் கணவனிடம் சித்ரவதை அனுபவிக்கும் அந்தப் பணிப்பெண், பழங்கதைகள் பேசும் அம்ரிதாவின் அம்மா மற்றும் பிரச்னைகளை சகித்துக்கொண்டு பொறுமையாக வாழும் அம்ரிதாவின் மாமியார் என ஒவ்வொரு பெண் பாத்திரத்திலும் அத்தனை நேர்த்தி, அத்தனை இயல்பு!

ஒரேயொரு பிரச்னை... அம்ரிதா எடுக்கும் விவாகரத்து முடிவு அறமானதுதான் என்றாலும், அது எல்லாப் பெண்களாலும் எடுக்கக்கூடிய முடிவுதானா என்ற கேள்வி எழாமலில்லை. நடுத்தர மற்றும் மேல்தட்டுப் பெண்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமான ஒன்றாக இருக்கலாம். ‘குடும்ப வன்முறை, கணவன் கொடுமைப்படுத்தினால் தண்டனை உண்டு என்பதுகூட அறியாத பெண்கள் இருக்கும் இந்தச் சமுதாயத்தில் இந்த ‘தப்பட்’ சாத்தியமான ஒன்றுதானா... விவாகரத்து பெற்றால் கணவன் இங்கே வேறு திருமணம் செய்துகொள்ளலாம். பெண்களுக்கு அப்படி நேர்ந்தால் அவள் இறுதிவரை தனியாகக் காலத்தை ஓட்ட வேண்டும் என்ற நிலைதானே இங்கே பெரும்பாலும் இருக்கிறது... ஆனால், அது மாற வேண்டும். பிடிக்காத வாழ்வைவிட விவாகரத்து நல்லது என்ற எண்ணம் இங்கே ஏற்பட வேண்டும். அதை உணர்ந்துகொள்ளும் வகையில் இந்த ஆணாதிக்கக் கட்டமைப்புக்கு விழுந்த முதல் அடிதான் இந்த ‘தப்பட்'. அந்த வகையில் இது ஒரு ‘ரியல் சிங்கப்பெண்’ணின் கதை!