Published:Updated:

`இந்த வீடியோ, என் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது!' - பெண்ணின் பதிவால் நெகிழ்ந்த டாப்ஸி

டாப்ஸி
டாப்ஸி ( instagram )

கணவன்-மனைவிக்கு இடையேயான கசப்பான அனுபவங்களைப் பதிவேற்ற, டாப்ஸி அதற்கு பதிலளித்துவருகிறார்.

'உப்புச்சப்பில்லாத விஷயத்துக்கெல்லாமா வாழமாட்டேன்னு வந்து நிக்கிறது', 'ஆம்பளைனா அப்படித்தான் இருப்பான், பொம்பளதான் அடங்கிப் போகணும்', 'புருஷன் அடிக்கிறதெல்லாம் ஒரு பிரச்னையா' - திருமணம் முடித்து புகுந்த வீட்டுக்குச் சென்ற மகள், கண்ணை கசக்கிக்கொண்டு பிறந்த வீட்டுக்கு வந்து நின்றால், பெற்றவர்களும் வீட்டுப் பெரியவர்களும் இப்படி அவளுக்கு உபதேசம் செய்வார்கள்.

Women abuse
Women abuse
freepik

'பொருளாதாரத்துக்குக் கணவனையும் குடும்பத்தினரையும் நாடி நின்ற காலத்தில்தான், பெண்கள் இந்த அறிவுரைகளையெல்லாம் பொறுத்துக்கொண்டார்கள். அவர்கள் சொந்தக்காலில் நிற்கத் தகுதியடைந்த பின்னரும், இப்படி அடிமை வாழ்க்கை வாழ்வது அவசியமில்லை' என்பது நவீனப் பெண்களின் கருத்து.

கடந்த ஜனவரி 30-ம் தேதி, டாப்ஸி பன்னு நடித்த 'தப்பட் (கன்னத்தில் அறைவதை குறிக்கும் இந்தி சொல்)' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகி வைரல் ஆனது. இந்த டிரெய்லர், திருமண பந்தத்தில் ஆண், பெண்ணை நடத்தும் விதம், அப்பெண்ணின் மனநிலை ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகிறது.

குறிப்பாக, அத்தனை பேர் மத்தியில் கணவன், மனைவியை அறையும் காட்சி உறையவைக்கிறது. தன்னுடைய ட்விட்டர் வலைதளத்திலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் படத்தின் டிரெய்லரைப் பதிவேற்றியுள்ள டாப்ஸிக்கு, காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானி என சக நடிகைகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்கள் மட்டுமில்லாமல், சாமானியப் பெண்களும் டாப்ஸிக்கு பாராட்டு தெரிவித்தும், இதுபோன்று தங்களைப் பாதித்த விஷயங்களைப் பற்றி பதிவேற்றியும் வருகின்றனர். அந்தப் பெண்களின் பதிவுகளுக்குப் பதிலளித்து, டாப்ஸி தன்னுடைய கருத்துகளைப் பதிவேற்றிவருகிறார்.

இதில் ஒரு பெண், 'மூன்று குழந்தைகளுக்குத் தாயான என் உதவியாளர், அவரின் கணவனால் கொடுமைகளை அனுபவிக்கிறார். பல சமயங்களில் அவருக்கு நான் உதவி செய்தும், அவர் கணவர்மீது புகார் அளித்தும் வருகிறேன். ஆனால், அதற்குப் பின்பும் என் உதவியாளர் மறுபடியும் தன் கணவரின் கொடுமைகளைச் சகித்துக்கொண்டு, அவருடன் வாழ்ந்துவருகிறார். அவருக்கு, 'தப்பட்' டிரெய்லரைக் காண்பித்தேன்' என, தன் உதவியாளரின் வீடியோவுடன் பதிவேற்றியுள்ளார்.

நியூடு கலர், நேக்கட் ஸ்டைல்... இந்திய நடிகைகளின் இன்டர்நேஷனல் ஃபேஷன்!

இதற்கு டாப்ஸி, 'இந்த வீடியோ, என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. நம்மில் இன்னும் எத்தனை பேர் இப்படி தினம் தினம் அமைதியாகக் கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழப்போகிறோம். இதுபோன்ற வாழ்க்கை வாழ்வது ஒன்றும் கட்டாயம் கிடையாது. இனியும் அமைதியாக சகித்துக்கொண்டிருக்காமல், அப்பெண் ஏதாவது செய்வார் என நம்புகிறேன்' எனப் பதில் ட்வீட் போட்டிருக்கிறார்.

இதுபோல் மேலும் பலர், கணவன்-மனைவிக்கு இடையேயான கசப்பான அனுபவங்களைப் பதிவேற்ற, டாப்ஸி அதற்கு பதிலளித்துவருகிறார். தனது ஒவ்வொரு பதிலுடனும் 'IT IS NOT OK' எனும் வார்த்தைகளை அழுத்தமாகப் பதிவுசெய்துவருகிறார், டாப்ஸி.

லெகிங்ஸ் அணியும்போது செய்யக் கூடாத 5 தவறுகள்! #LeggingsGuide
அடுத்த கட்டுரைக்கு