Published:Updated:

Raksha Bandhan: "வரதட்சணை என்பது கிஃப்ட் கிடையாது, அது மிரட்டிப் பறித்தல் போன்றது!"- அக்‌ஷய் குமார்

ரக்‌ஷா பந்தன் படத்தில் அக்‌ஷய் குமார்

வரதட்சணை வாங்குவது மிரட்டி பறிப்பது போன்றது என்று நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

Raksha Bandhan: "வரதட்சணை என்பது கிஃப்ட் கிடையாது, அது மிரட்டிப் பறித்தல் போன்றது!"- அக்‌ஷய் குமார்

வரதட்சணை வாங்குவது மிரட்டி பறிப்பது போன்றது என்று நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ரக்‌ஷா பந்தன் படத்தில் அக்‌ஷய் குமார்

வரதட்சணை கொடுமையால் எத்தனையோ பெண்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கின்றனர். இன்னும் அது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் இதன் தாக்கம் பெரியளவில் இருக்கிறது.

நடிகர் அக்‌ஷய் குமார் தன் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் 'ரக்‌ஷா பந்தன்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வரதட்சணை கொடுமைகள் குறித்து விரிவாகப் பேசினார். அதில் அவர் கூறியதாவது...

"வரதட்சணை என்பது மிரட்டிப்பறிப்பது போன்றது. இந்தத் தவறான செயல் இந்தியாவில் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமுதாயத்தில் வரதட்சணை என்பது வேறூன்றி பல அடுக்குகளாக இருக்கிறது. ஆனால், அதே சமயம் வரதட்சணை இந்தியாவில்தான் அதிகமாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ரக்‌ஷா பந்தன்
ரக்‌ஷா பந்தன்

வரதட்சணை என்பது பல அடுக்குகளில் இருக்கிறது. சிலர் இதனை பரிசு என்று சொல்கிறார்கள். சிலர் சங்கல்ப் என்கின்றனர். வரதட்சணைக்கு இப்படிப் பல பெயர்கள் இருக்கின்றன. திருமணத்தைப் பெரிய அளவில் நடத்தவேண்டும் என்று கூறி இந்த வரதட்சணையை கேட்கின்றனர். ஆனால் இதை நான் மிரட்டி பறித்தல் என்றுதான் கூறுவேன். தந்தை, சகோதரர்கள் தங்களால் முடியாவிட்டாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வரதட்சணையைக் கொடுக்க முயற்சி செய்கிறார்கள்."

தொடர்ந்து, ஆமீர் கானின் 'லால் சிங் சத்தா' படத்துடன் தன் படம் வெளியாவது குறித்து அவர் பேசுகையில், "ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்கள் வெளியாவது திரைப்படத்துறைக்கு நல்லதுதான். அதேசமயம் இரண்டு படங்களும் நன்றாக ஓடினால்தான் அது வியாபாரத்துக்கு நல்லது. படத்தை 5 முதல் 10 சதவிகிதம் பேர் பார்த்தாலே பெரிய அளவில் வெற்றி பெற்றுவிடும். தற்போது போன்று எதிர்காலத்திலும் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்கள் திரைக்கு வரவேண்டும். இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது போட்டியல்ல. அதனால் வசூலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது" என்று தெரிவித்தார்.

'ரக்‌ஷா பந்தன்' படம் வரதட்சணையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருப்பதாக படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தெரிவித்தார்.