Published:Updated:

காதல் ரகசியம் சொன்ன பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா; கடுப்பான கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்

ஊர்வசி ரவுடேலா

பாலிவுட் நட்சத்திரமாக வலம் வரும் ஊர்வசி ரவுடேலா, கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மற்றும் பாடகர் ஒருவர் காதல் பற்றி நேர்காணலில் பேசியுள்ளார். இதனால் கடுப்பான ரிஷப் பண்ட் இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுக்குமாறு பதிவிட்டிருக்கிறார்.

காதல் ரகசியம் சொன்ன பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா; கடுப்பான கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்

பாலிவுட் நட்சத்திரமாக வலம் வரும் ஊர்வசி ரவுடேலா, கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மற்றும் பாடகர் ஒருவர் காதல் பற்றி நேர்காணலில் பேசியுள்ளார். இதனால் கடுப்பான ரிஷப் பண்ட் இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுக்குமாறு பதிவிட்டிருக்கிறார்.

Published:Updated:
ஊர்வசி ரவுடேலா

பாலிவுட் நடிகை, மாடல் என வலம் வருபவர் ஊர்வசி ரவுடேலா. இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன் திரையுலகப் பயணம் பற்றியும் தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய தருணங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அப்போது தனக்கு நிறையபேர் காதல் புரோபோஸ்கள் செய்துள்ளதாகக் கூறிய அவர் தனக்காக பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான ரிஷப் பண்ட் நீண்ட நேரம் ஹோட்டலில் காத்திருந்தார் என்றும் இரண்டு மனைவிகளுடன் இருக்கும் எகிப்திய பாடகர் ஒருவர் தனக்கு புரோபோஸ் செய்ததாகப் பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாகப் பேசியுள்ளார். இதனால் கடுப்பான ரிஷப் பண்ட் இது பற்றி தன் இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்துள்ளார்.

ஊர்வசி ரவுடேலா
ஊர்வசி ரவுடேலா

ரிஷப் பண்த்தின் பெயரைக் குறிப்பிடாமல் 'RP' என்று ஊர்வசி குறிப்பிட்டதையடுத்து ரிஷப் பண்ட் குறித்த நெட்சன்களின் பல்வேறு பதிவுகள் வைரலாயின.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "பிரபலமாக வேண்டும், நாம் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறு நேர்காணலில் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. பெயருக்காகவும் பிரபலமாவதற்காகவும் இப்படியெல்லாம் நடந்துகொள்வது வருத்தமாக உள்ளது. கடவுள் தான் இவர்களைக் காப்பற்ற வேண்டும்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

காதல் ரகசியம் சொன்ன பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா; கடுப்பான கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்

இதேபோல் அந்த நேர்காணலில் ஊர்வசி, இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் பிரபல பாடகர் ஒருவர் தனக்கு காதல் புரோபோஸ் செய்ததாகக் கூறியது வைரலானது. இது பற்றிக் கூறிய அவர், "நான் நிறையக் காதல் புரோபோஸ்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருவரிடமிருந்து வந்த காதல் புரோபோஸ் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அது நம் கலாசாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நாம் எந்தவொரு முடிவு எடுத்தாலும் நமது குடும்பத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். அதிலும் குறிப்பாகப் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள் பற்றி நிச்சயம் சிந்திக்க வேண்டும். அந்தவகையில் எனக்கு வந்த புரோபோஸ் பற்றி நான் நிறையவே யோசிக்க வேண்டியிருந்தது. காரணம் எனக்குக் காதல் புரோபோஸ் செய்த நபர் எகிப்திய பாடகர் ஒருவர். அவருக்கு ஏற்கெனவே இரண்டு மனைவிகள் மற்றும் நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இது இருவருக்கும் மிகவும் சிக்கலான சூழலை ஏற்படுத்திவிடும் என்பதால் நான் அதை நிராகரித்து விட்டேன்" என்றார். ஆனால் அந்த பாடகர் பெயரை அவர் குறிப்பிட விரும்பவில்லை.

இந்நிலையில், ஊர்வசி ரவுடேலா கடந்த 2021ம் ஆண்டு எகிப்திய நடிகரும் பாடகருமான முகமது ரமதானுடன் இணைந்து வெர்சேஸ் பேபி என்ற இசை வீடியோவை வெளியிட்டு சர்வதேச அளவில் பிரபலமானார். எனவே ஊர்வசி குறிப்பிடும் அந்த பாடகர் முகமது ரமதானாக இருக்கக் கூடும் என்று நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.