Published:Updated:

The Kerala Story: படத்தை தடை செய்ததற்கான காரணம் இதுதான் - பளாரென பதிலளித்த மேற்கு வங்க அரசு!

மம்தா பானர்ஜி

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் அரசு இதுகுறித்து உரிய விளக்குமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

Published:Updated:

The Kerala Story: படத்தை தடை செய்ததற்கான காரணம் இதுதான் - பளாரென பதிலளித்த மேற்கு வங்க அரசு!

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் அரசு இதுகுறித்து உரிய விளக்குமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

மம்தா பானர்ஜி
`ஆஸ்மா', `தி லாஸ்ட் மாங்க்' போன்ற திரைப்படங்களை இயக்கிய சுதிப்தோ சென் என்பவர் இயக்கத்தில் மே 5ம் தேதி இந்தியா முழுவதும் பல மொழிகளில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியின் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.  

32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்களை ஏமாற்றி இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாற்றி அவர்களை ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று தீவிரவாத இயக்கத்தில் சேர்த்துவிடுவதாக இப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒன்று, மத வெறுப்பை தூண்டும் விதமாகவும், மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக இப்படத்திற்கு நாடுமுழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் படத்தை வெளியிடக்கூடாது எனப் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

 'தி கேரளா ஸ்டோரி'  படத்திற்கு ஆதரவாகப் பேசிய  பிரதமர் மோடி
'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு ஆதரவாகப் பேசிய பிரதமர் மோடி

இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஓரிரு நாட்கள் மட்டும் சொற்பமான திரையரங்களில் மட்டும் படம் திரையிடப்பட்டன. தமிழ்நாட்டில், திரையிடப் பாதுகாப்பு வழங்கப்பட்டும், ஓரிரு நாட்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டன. ஆனால் மேற்கு வங்க அரசு, இப்படம் மத நல்லிணக்கத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறி படம் வெளியான மூன்று நாட்களில் இப்படத்திற்குத் தடை விதித்தது.

இந்நிலையில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) சான்றிதழ் பெற்று வெளியான 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் தடை விதித்தது சட்டத்திற்குப் புறம்பானது என 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் அரசு இதுகுறித்து உரிய விளக்குமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதற்கு விளக்குமளித்த தமிழ்நாடு அரசு தரப்பு, தமிழ்நாடு அரசு இப்படத்திற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. மக்கள் மத்தியில் இப்படத்திற்குப் பெரும் வரவேற்பு இல்லாததால் இப்படம் நிறுத்தப்பட்டது எனக் கூறியது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இதையடுத்து, இப்படத்திற்கு தடை விதித்தது குறித்து விளக்கமளித்த மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, "இப்படம் அடிப்படையாகவே உண்மைக்குப் புறம்பாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும், மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இப்படம் திரையிடப்பட்டால் சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று மாநில உளவுத்துறையின் தகவல்கள் மூலம் அறியப்பட்டது.

இருப்பினும், படம் ஓரிரு நாட்கள் திரையிடப்பட்டது. பின்னர், இப்படம் திரையிடப்படுவதால் சமூகத்தில் நல்லிணக்கம் சீர்குலைந்து மக்களிடையே மோதல்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்ட உளவுத்துறை அறிக்கையின்படி மேற்கு வங்க அரசின் புலனாய்வுப் பிரிவு இதுகுறித்து கண்காணிக்கும்படி அனைத்து காவல் துறைகளுக்கும் தகவல் அனுப்பியது.

இதுதொடர்பான கண்கானிப்பில் இந்து அல்லது கிறிஸ்தவப் பெண்கள் சித்திரவதை செய்யப்படும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் பார்வையாளர்களுக்கு ஆட்சேபனைக்குரிய தவறான கருத்துக்கள் விவாவதப்பொருளாவதாக அறியப்பட்டது.

நேற்று காஷ்மீர் ஃபைல்ஸ்... இன்று கேரளா ஸ்டோரி...
நேற்று காஷ்மீர் ஃபைல்ஸ்... இன்று கேரளா ஸ்டோரி...
அதில் குறிப்பாக, இப்படத்தை பார்த்துவிட்டு இஸ்லாமியர்களுடான தொடர்புகளை குறைக்க வேண்டும், இந்த முஸ்லீம்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் போன்ற தவறான கருத்துக்களெல்லாம் பார்வையாளர்கள் மத்தியில் விவாதப்பொருளானது.

அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் கருத்துகள் பரப்பப்பட்டு வந்தன. இது சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்தை ஏற்படும் என்பதால் இப்படம் மேற்கு வங்கத்தில் தடை செய்யப்பட்டது" என்று மேற்கு வங்க அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.