Published:Updated:

சுஷாந்த் தற்கொலை இரு மாநில அரசியல் பிரச்னையாக உருமாறியது எப்படி?! #Timeline

சுஷாந்த் சிங் ராஜ்புத்
சுஷாந்த் சிங் ராஜ்புத்

ரியா மற்றும் சுஷாந்துக்கு இடையிலான வங்கி பரிமாற்றங்கள் 48 பக்க அறிக்கையாகவும், அவர்களின் WhatsApp உரையாடல் 13 பக்க அறிக்கையாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை பீகார் காவல்துறை விசாரிக்கத் தொடங்கியது.

பாலிவுட்டின் நிழல் அரசியல் தொடங்கி மகாராஷ்டிரா- பீகார் காவல் துறைக்கு இடையே நடைபெறும் பனிப்போர் வரை சுஷாந்த் சிங்கின் வழக்கு கடந்து வந்திருக்கிற பாதை ஏராளமான திருப்பங்கள் நிறைந்தது. இன்னமும் விடை தெரியாத கேள்விகளால் 34 வயது இளம் நடிகரின் மரணம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. வழக்கின் ஆரம்பம் முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகளை விரிவாகப் பார்ப்போம்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்
சுஷாந்த் சிங் ராஜ்புத்

ஜூன் 14 - சுஷாந்த் சிங் மும்பை புறநகர் பகுதியில் உள்ள அடுக்ககத்தில் தனது வாடகை வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடப்பதாக மும்பை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மன அழுத்தத்திற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்ததால் அதன் காரணமாகவோ அல்லது தொழில் போட்டியினாலோ சுஷாந்த் தற்கொலை செய்துக் கொண்டாரா என்கிற ரீதியில் மும்பை காவல் துறை விசாரணையைத் தொடங்கியது. அவரின் தற்கொலை குறிப்பு எதுவும் சம்பவ இடத்தில் கிடைக்கவில்லை என்றது போலீஸ்.

ஜுன் 15 - பெற்றோர்கள், நெருங்கிய நண்பர்கள், சுஷாந்த்தின் காதலி என சொல்லப்பட்ட ரியா சக்கரபோர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொள்ள இறுதி சடங்குகள் மும்பை வில்லே பார்லேவில் நடைபெற்றது.

கங்கனா ரனாவத், பாலிவுட்டில் வாரிசு முன்னுரிமை அரசியல் (nepotism) ஆதிக்கம் இருப்பதாகவும் அதன் காரணமாகவே சுஷாந்த் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் குற்றச்சாட்டினார். அவர் பேசியதைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் முழுதும் நெப்போடிஸம் குறித்த விவாதங்கள் பரப்பரப்பாக அரங்கேறின.

சுஷாந்த் - ரியா
சுஷாந்த் - ரியா

ஜூன் 17 - சமூக ஊடங்களில் பாலிவுட் நடிகர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்த வேளையில் சல்மான் கான், கரன் ஜோஹர் மற்றும் ஏக்தா கபூர் உள்ளிட்ட எட்டு பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக, கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சுஷாந்தின் இறுதி படமான ‘Dil Bechara’வின் இயக்குநர் முகேஷ் சாப்ரா மும்பை காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டார். அவர் இறுதியாக சுஷாந்துடன் பேசிய விவரங்கள் பெறப்பட்டது.

ஜூன் 18 - ரியா சக்கரபோர்த்தி மும்பை காவல்துறையால் ஒன்பது மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை செய்யப்பட்டார். தான் சுஷாந்தோடு இணைந்து வாழ்ந்து வந்ததாகவும் அவர் இறப்பதற்கு நான்கு நாள்கள் முன்பு ஏற்பட்ட வாக்குவாதத்தால் பிரிந்ததாகவும் குறிப்பிட்டார்.

ஜூன் 19 - சுஷாந்த் - YASH RAJ FILMS இடையேயான ஒப்பந்தம் கண்டெடுக்கப்பட்டது.

ஜூன் 25 - மூச்சுத் திணறலால் இறந்தார் எனவும் தெளிவாக தற்கொலைக்கான அடையாளங்கள் இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.

ஜூலை 7 - இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நான்கு படங்கள் இணைந்து வேலை செய்ய வாய்ப்பு இருந்தும் சுஷாந்திடம் கால்ஷீட் இல்லாததால் இணைய முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

சுஷாந்த், சஞ்சனா சங்கி
சுஷாந்த், சஞ்சனா சங்கி

ஜூலை 9 - சுப்ரமணிய சாமி, பிரதம அமைச்சருக்கு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடிதம் எழுதியிருந்தார். ஜூலை 26-ல் அக்கடிதம் ஏற்கப்பட்டது.

ஜூலை 10 - ‘Dil Bechara’ படத்தில் இணைந்து நடித்த நடிகை சஞ்சனாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முன்பு MeToo பிரச்னையின் போது சுஷாந்தின் பெயர் அடிப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டைப் புறக்கணித்தவர் சஞ்சனா என்பது குறிப்பட்டதக்கது.

ஜூலை 14 - ஒரு மாதத்திற்கு பிறகு ரியா சக்ரபோர்த்தி சுஷாந்த் இறப்பு குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தனக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல்கள் வருவதாக தெரிவித்தார். ஜூலை 16 சுஷாந்த் வழக்கில் சிபிஐ விசாரணைக்கோரி அமித் ஷாவிற்கு வேண்டுகோள் விடுத்தார் ரியா.

ஜூலை 18 - Yash Raj Films நிறுவனத்தின் தலைவர் ஆதித்யா சோப்ராவிடம் விசராணை மேற்கொள்ளப்பட்டது. YRF - சுஷாந்த் இடையேயான ஒப்பந்தம் குறித்து விசாரிக்கப்பட்டது.

ஜூலை 21 - சினிமா விமர்சனம் ஒன்றில் சுஷாந்தை விமர்சித்து எழுதிய பிரபல திரைப்பட விமர்சகர் ராஜீவ் மசந்த் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

சுஷாந்த் வழக்கில் நீதி கிடைக்கக்கோரி அவரது ரசிகர்கள் ஆன்லைனில் போராட்டம் ஒன்றை ஒருங்கிணைத்தனர். சுஷாந்தின் முன்னாள் காதலி அங்கிதா லோக்ஹண்டே மெழுகுவர்த்தியோடு நீதி கேட்டு கோரிக்கையைப் பகிர்ந்தார்.

ஜூலை 23 - கங்கனா தனது இரண்டாவது வீடியோவில் கரன் ஜோஹர், ஆதித்யா சோப்ரா, சல்மான் கான் உள்ளிட்டோர் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாகவும் அதில் வளர்ந்தவர்கள் தான் ஆலியா பட், டைகர் ஷெராஃப் எனவும் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார். ஆலியா பட், கரன் ஜோஹர் சமூக வலைதளங்களில் ஏரளாமான பின்தொடர்பவர்களை (followers) இழந்தனர்.

ஜூலை 24 - ‘Dil Bechara’ சுஷாந்த் நடித்த இறுதிப்படம் OTT தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

மகேஷ் பட் மும்பை காவல்துறையால் விசாரிக்கப்பட்டார். மகேஷ் பட்டுக்கும் ரியாவிற்கும் இருக்கும் தொடர்பு சந்தேகத்துக்கு உரியதாக கருதப்பட்டது. சுஷாந்தை இரண்டு முறை மட்டுமே தான் சந்தித்திருப்பதாக மகேஷ் பட் தெரிவித்தார்.

ஜூலை 28 - சுஷாந்தின் தந்தை K.K. சிங் அளித்த புகாரின் அடிப்படையில் பீகார் பாட்னா காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தற்கொலைக்கு தூண்டுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் FIR பதியப்பட்டது. தனது மகனின் வங்கி கணக்கு விபரங்களை ரியா நிர்வகித்து ஏராளாமான நிதியை மாற்றிக் கொண்டதாக ரியா உள்ளிட்ட அவரது குடும்பத்தார் மீது புகார் அளித்தார் K.K.சிங்.

சுஷாந்த் சிங்கின் உறவினர்களுடன் தந்தை
சுஷாந்த் சிங்கின் உறவினர்களுடன் தந்தை

ஜூலை 29 - ரியா தன் மீதான வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கரன் ஜோஹரின் தர்மா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபூர்வா அக்னிஹோத்ரி விசாரணை செய்யப்பட்டார். இந்த நிறுவனத்தோடு மூன்று படங்கள் இணைந்து பணிபுரிய சுஷாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதில் ஒரு படமான ‘Drive’ முன்னரே OTT தளத்தில் வெளியிடப்பட்டது. அதற்கான விளக்கத்தையும் தங்களுக்கு இடையே எந்த சச்சரவும் இல்லையெனவும் விசாரணையில் குறிப்பிட்டார் அபூர்வா. தேவையெனில் கரன் ஜோஹர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது.

ஆகஸ்ட் 1 - தன் மீது மோசமான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்பட்டும், வழக்கறிஞர்களின் வழிகாட்டுதலால் நீதியின் பொருட்டு தான் பதிலளிக்கவில்லை எனவும், வாய்மை நிச்சயம் வெல்லும் எனவும் ரியா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் சிபிஐ விசாரணை கோரினார்.

ஆகஸ்ட் 2 - காவல்துறையினரின் விசாரணைக்கு ரியா ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனவும், ரியா காணாமல் போய்விட்டதாகவும் பீகார் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சுஷாந்த் - ரியா
சுஷாந்த் - ரியா

ஆகஸ்ட் 3 - பீகார் காவல்துறைக்கு மும்பை காவல்துறையிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்பதால் பீகார் காவல்துறை தடயங்களை சேகரிக்க தொடங்கியது. ரியா மற்றும் சுஷாந்துக்கு இடையேயான வங்கி பரிமாற்றங்கள் 48 பக்க அறிக்கையாகவும், அவர்களின் வாட்ஸ்அப் உரையாடல் 13 பக்க அறிக்கையாகவும் தயாரிக்கப்பட்டது. தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை பீகார் காவல்துறை விசாரிக்கத் தொடங்கியது.

ஆகஸ்ட் 5 - பீகார் அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு சிபிஐ-க்கு மாற்ற அனுமதியளிக்கப்பட்டது. மும்பை காவல்துறையும் பீகார் காவல்துறையும் வழக்கு தொடர்பான அறிக்கைகளை மூன்று நாள்களுக்குள் சமர்பிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஆகஸ்ட் 8 - சுஷாந்த் தன் கைப்பட எழுதிய ‘நன்றியறிவித்தல் குறிப்பு’ ஒன்றை ரியா வெளியிட்டார். அவரின் தண்ணீர் பாட்டில் ஒன்றின் படத்தையும் வெளியிட்டு இவை இரண்டும்தான் என்னிடம் எஞ்சிய சுஷாந்தின் உடமைகள் எனப் பதிவிட்டார்.

சுஷாந்த் சிங்கின் தற்கொலையின்போது எந்த குறிப்பும் கிடைக்கவில்லை. அதற்கு ஆறு நாள்கள் முன்பு ஜூன் 8 அன்று சுஷாந்தின் முன்னாள் உதவியாளர் திஷா சாலியன் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த தற்கொலை விவகாரம் சுஷாந்தை எதாவது ஒரு வகையில் பாதித்திருக்கலாம். அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக தன் பெயரையும், உதவியாளர் பெயரையும் இணையத்தில் தேடியதற்கான ஆதாரங்கள் சுஷாந்தின் மடிக்கணினியில் இருந்து பெறப்பட்டிருக்கிறது.

சுஷாந்த்  சிங்
சுஷாந்த் சிங்
சுஷாந்த் வழக்கு:`கூகுள் சர்ச்; பைபோலார் பிரச்னை!’ - மும்பை போலீஸ் அதிர்ச்சித் தகவல்

இந்த வழக்கின் ஒட்டுமொத்த திருப்பமாக முன்னாள் அரசு வழக்கறிஞர் விகாஸ் சிங் அளித்துள்ள பேட்டியில், சுஷாந்தின் குடும்பம் பிப்ரவரி 25-ம் தேதியே பாந்திரா காவல் நிலையத்தில், ''சுஷாந்த் சரியான இணையரோடு வசிக்கவில்லை. அவருக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் உறுதி செய்யவும்'' என்று புகார் அளித்திருப்பதாக தெரிவிக்கிறார்.

வாரிசு அரசியல், பாலிவுட்டின் நிழல் உலகம் எனப் பலவற்றை கேள்விக்குட்படுத்திய இந்த வழக்கு பீகாரின் தலையீடால் மாநிலங்களுக்கு இடையேயான பனிப்போராக மாறி நிற்கிறது.
கரன் ஜோஹர்
கரன் ஜோஹர்

மஹாராஷ்டிராவில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் - சிவ சேனா -NCP கூட்டணி. ‘மாநில காவல்துறை விசாரித்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவது அரசின் நம்பகத்தன்மையை குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிற பாரதிய ஜனதா கட்சியின் சதி’ என சிவ சேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் பேட்டி அளித்திருக்கிறார்.

உயர் அந்தஸ்து கொண்ட மனிதர்களின் தலை உருளும் சுஷாந்த் சிங் வழக்கு நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதே எல்லோரின் கோரிக்கையும்!
அடுத்த கட்டுரைக்கு