Published:Updated:

`அத்துமீறி நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்!' - மிரட்டும் கங்கனா வீட்டின் அறிவிப்பு

எச்சரிக்கை அறிவிப்பு பலகை

நடிகை கங்கனா ரணாவத் வீட்டிற்கு வெளியில் வைக்கப்பட்டு இருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை அனைவரையும் பயமுறுத்தும் விதமாக இருக்கிறது.

Published:Updated:

`அத்துமீறி நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்!' - மிரட்டும் கங்கனா வீட்டின் அறிவிப்பு

நடிகை கங்கனா ரணாவத் வீட்டிற்கு வெளியில் வைக்கப்பட்டு இருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை அனைவரையும் பயமுறுத்தும் விதமாக இருக்கிறது.

எச்சரிக்கை அறிவிப்பு பலகை
சந்திரமுகி - 2 மற்றும் எமர்ஜென்சி போன்ற படங்களில் தற்போது கவனம் செலுத்தி வரும் கங்கனா ரணாவத், மும்பையில் உள்ள தனது வீட்டை பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரே ஆட்சியில் இருந்தபோது கங்கனா வீட்டில் சட்டவிரோத கட்டுமானப்பணி இருப்பதாகக் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கங்கனா இப்பிரச்னையை நீதிமன்றம் வரை எடுத்துச்சென்றார். தற்போது மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி இருப்பதால் மீண்டும் தனது வீட்டை கங்கனா புதுப்பித்து கட்டத்தொடங்கியிருக்கிறார்.

கங்கனா
கங்கனா

அதோடு வீட்டிற்கு வெளியில், `நாய்கள் ஜாக்கிரதை', `அனுமதியின்றி வராதீர்கள்' என்றுதான் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும். ஆனால் கங்கனா தனது வீட்டிற்கு வெளியில் வைத்திருக்கும் அறிவிப்புப் பலகையை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதோடு கங்கனா வீட்டிற்கு அருகில் செல்லவும் பயப்படுகின்றனர். `வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள்!'. `துப்பாக்கிச்சூட்டில் தப்பித்தால் மீண்டும் சுடப்படுவீர்கள்!' என்ற எச்சரிக்கை பலகை வீட்டிற்கு வெளியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புப் பலகைத்தான் இப்போது பாலிவுட்டில் பேசும்பொருளாக இருக்கிறது. பிறரை மிரட்டுகிற வகையில் எப்படி அறிவிப்பு பலகை வைக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.