Published:Updated:

Rishabh Pant: "நடிகர்களைவிட கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக மரியாதை கிடைக்கிறது"- ஊர்வசி ரவுடேலா

ரிஷப் பண்ட், ஊர்வசி ரவுடேலா

ஊர்வசி ரவுடேலா - ரிஷப் பண்ட் சர்ச்சை: "நான் ரிஷப் பண்ட்டைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. இந்த விவகாரத்தில் யாரும் என்னைப் பற்றி கவலைப்படவும் இல்லை, என்னை ஆதரிக்கவுமில்லை!" - ஊர்வசி ரவுடேலா

Rishabh Pant: "நடிகர்களைவிட கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக மரியாதை கிடைக்கிறது"- ஊர்வசி ரவுடேலா

ஊர்வசி ரவுடேலா - ரிஷப் பண்ட் சர்ச்சை: "நான் ரிஷப் பண்ட்டைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. இந்த விவகாரத்தில் யாரும் என்னைப் பற்றி கவலைப்படவும் இல்லை, என்னை ஆதரிக்கவுமில்லை!" - ஊர்வசி ரவுடேலா

Published:Updated:
ரிஷப் பண்ட், ஊர்வசி ரவுடேலா

பாலிவுட் நடிகை, மாடல் என வலம் வருபவர் ஊர்வசி ரவுடேலா. இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ரிஷப் பண்ட்டின் பெயரைக் குறிப்பிடாமல் 'RP' என்று குறிபிட்டு, "எனக்கு நிறையபேர் லவ் புரொபோசல்கள் செய்துள்ளனர். எனக்காக 'RP' நீண்ட நேரம் ஹோட்டலில் காத்திருந்தார்" என்று பேசியிருந்தார். 'RP' என்பது பிரபல கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட்டிற்கு ரசிகர்கள் வைத்த பெயர். எனவே ஊர்வசி ரவுடேலா 'RP' என்று குறிப்பிட்டுப் பேசியது ரிஷப் பண்ட்டைத்தான் என செய்திகள் வைரலாகின.

இதையடுத்து, ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பிரபலமாக வேண்டும், நாம் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறு நேர்காணலில் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. கடவுள்தான் இவர்களைக் காப்பற்ற வேண்டும்" என்று பதில் கொடுத்திருந்தார். இதையடுத்து நெட்டிசன்கள் நடிகை ஊர்வசி ரவுடேலாவை கலாய்த்து மீம்களைப் பதிவிட்டு வந்தனர்.

ராம் பொதினேனி, ரிஷப் பண்ட்
ராம் பொதினேனி, ரிஷப் பண்ட்

தற்போது இதற்குப் பதிலளித்துப் பேசியுள்ள நடிகை ஊர்வசி ரவுடேலா, "மக்கள் புரிந்து கொள்ளாமல் எதையாவது பேசுகிறார்கள். இதுபோன்ற வதந்திகளை நம்புபவர்கள், இவை உண்மையா எனக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதிலும் சில யூடியூபர்கள் இது பற்றி அறியாமலே எதையாவது சொல்கிறார்கள். இவர்கள் யாரும் என்னைப் பற்றி கவலைப்படவும் இல்லை, என்னை ஆதரிக்கவுமில்லை. உண்மையில் நான் 'RP' என்று குறிப்பிட்டு பேசியது எனது சக நடிகரான ராம் பொத்தினேனியைத்தான். ரிஷப் பண்ட்டையும் அவ்வாறே குறிப்பிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது" என்று தெரிவித்துள்ளார்.

ஊர்வசி ரவுடேலா
ஊர்வசி ரவுடேலா

மேலும், "பொதுவாக இங்கு நடிகர்களை விட கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக மரியாதை கிடைக்கிறது. அவர்கள் நடிகர்களைவிடவும் அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். இந்த ஒப்பீடுகள் எப்போதும் இங்கு இருக்கிறது. இது என்னை மிகவும் வருத்தமடையச் செய்கிறது. அவர்கள் நாட்டிற்காக விளையாடுகிறார்கள். அதனால் பெரிதும் நேசிக்கப்படுகிறார்கள், மதிக்கப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதே சமயம் நடிகர்களும் நாட்டிற்காக நிறைய செய்திருக்கிறார்கள், அவர்களும் நம் நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். நானே பலமுறை அதைச் செய்திருக்கிறேன். எனவே இந்த முட்டாள்தனமான ஒப்பீடுகள் எனக்குப் பிடிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.