Published:Updated:

மம்தா பானர்ஜிக்கு இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி அனுப்பிய லீகல் நோட்டீஸ் - பின்னணி என்ன?

விவேக் அக்னிஹோத்ரி

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி லீகல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Published:Updated:

மம்தா பானர்ஜிக்கு இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி அனுப்பிய லீகல் நோட்டீஸ் - பின்னணி என்ன?

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி லீகல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

விவேக் அக்னிஹோத்ரி

சுதிப்தோ சென் இயக்கத்தில், அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. பல்வேறு விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பிய இந்தத் திரைப்படம் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. 

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்குத் தடைவிதித்தது குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியபோது, “வெறுப்பு மற்றும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்த்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் ஒரு தரப்பினரை இழிவுபடுத்தியது. தற்போது வெளியாகியிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரிக்கப்பட்ட கதையாக வெளியாகி இருக்கிறது. பா.ஜ.க-தான் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தைத் திரிக்கப்பட்ட கதையாக உருவாக்கி இருக்கிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்குத் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தவறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நோட்டீஸில் விவேக் அக்னிஹோத்ரி குறிப்பிட்டுள்ளார்.

விவேக் அக்னிஹோத்ரியின் பதிவு
விவேக் அக்னிஹோத்ரியின் பதிவு

இதனிடையே அவரது அடுத்த திரைப்படமான 'தி டெல்லி பைல்ஸ்' குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், “சமீபத்தில் நான் கொல்கத்தாவுக்குச் சென்றிருந்தபோது 2024-ம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும் எனது ‘தி டெல்லி ஃபைல்ஸ்' படம் குறித்துப் பேசியிருந்தேன். அதாவது 1946/47/71 ஆண்டுகளில் நடைபெற்ற வங்காள இனப்படுகொலைக் குறித்த இந்தப் படத்தில் கிலாபத்தின் சித்தாந்தம் எப்படிச் சமூக மோதலுக்கும் டெல்லி கலவரத்துக்கும் வழிவகுத்தது என்பதைச் சொல்லவிருக்கிறேன். இதற்காக நான் தாக்கப்பட்டேன். நான் அவ்வாறு கூறியதற்கு என் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி கொல்கத்தாவின் வணிக வளாகம் ஒன்றில் எனது சொந்த புத்தகங்களில் ஆட்டோகிராப் போடக்கூடத் தடை விதிக்கப்பட்டது" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.