பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதால் காப்பாற்றப்பட்டார்.
அவருக்கு ரத்தக் குழாயில் பல இடங்களில் அடைப்புகள் இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்து ஆஞ்சியோபிளாஸ்ட் மூலம் சிகிச்சையளித்துள்ளனர். தற்போது மும்பையில் லட்சுமி பேஷன் ஷோ நடந்து வருகிறது. இதில் பாலிவுட் பிரபலங்கள் உட்பட மாடல் அழகிகள் விதவிதமான ஆடைகள் அணிந்து வாக்கிங் செல்கின்றனர்.
இதில் நடிகை சுஷ்மிதா சென்னும் கலந்து கொண்டு வாக்கிங் சென்றார். டிசைனர் அனுஸ்ரீ ரெட்டியின் வடிவமைப்பில் உருவான ஆடைகளை சுஷ்மிதா அணிந்து இதில் கலந்து கொண்டார். சிகிச்சை முடிந்து ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில் பேஷன் ஷோவில் தைரியத்துடன் கலந்து கொண்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. மஞ்சள் கலர் லஹங்கா அணிந்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பேஷன் ஷோவிலும் சரி அது முடிந்த பிறகு சுஷ்மிதா வெளியில் வந்த போதும் அவருக்கு பக்க பலமாக இருந்தது அவரது முன்னாள் காதலன் ரோஹ்மன். ரோஹ்மன் சுஷ்மிதாவுடன் அவருக்கு பாதுகாப்பாக சென்றார். சுஷ்மிதா பேஷன் ஷோவில் கலந்து கொண்ட பிறகு ரசிகர்களைச் சந்தித்தார். அதோடு அவர்களுடன் சேர்ந்து செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் உதவினார். அப்போது பேட்டியளித்த சுஷ்மிதா எனக்கு பலரின் ஆசிர்வாதம் இருக்கிறது.

`நான் ஆசிர்வதிக்கப்பட்ட பெண்!' என்று குறிப்பிட்டார். சுஷ்மிதாவும் ரோஹ்மனுக்கு காதலித்து வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனாலும் தொடர்ந்து இரண்டு பேரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். சுஷ்மிதா வீட்டு அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரோஹ்மன் முதல் ஆளாக கலந்து கொள்கிறார்.