Published:Updated:

`` Well done bhaiyu... எப்போதும்போல பெருமைப்படுகிறேன்!" - மகனைப் பாராட்டிய அமிதாப் பச்சன்!

அபிஷேக் பச்சன்

"என் வேலை குறித்து சிறிய குற்ற உணர்வு இருக்கிறது. அப்படியில்லாத படம் செய்ய வேண்டும் என விருப்பப்பட்டேன்." -அபிஷேக் பச்சன்

`` Well done bhaiyu... எப்போதும்போல பெருமைப்படுகிறேன்!" - மகனைப் பாராட்டிய அமிதாப் பச்சன்!

"என் வேலை குறித்து சிறிய குற்ற உணர்வு இருக்கிறது. அப்படியில்லாத படம் செய்ய வேண்டும் என விருப்பப்பட்டேன்." -அபிஷேக் பச்சன்

Published:Updated:
அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சனின் Dasvi படத்திற்கான ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. "இந்தப் படத்தை உங்களோடு பகிர்வதில் சந்தோஷம் அடைகிறேன். எனது மனதுக்கு நெருக்கமான படம் இது. இந்தப் படம் என்ன சொல்கிறதோ அதை முழுவதுமாக நம்புகிறேன். ஒரு படம் பொழுதுபோக்குக்கு எடுக்கப்பட்டாலும் ஒரு செய்தியை உங்களிடம் விட்டுச் செல்லவேண்டும். அப்படியான படங்கள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்களுக்கும் அதேபோல இந்தப் படம் அமையும் என நம்புகிறேன்" அபிஷேக் பச்சன் தன் படங்களைப் பற்றி பொதுவாக அதிகம் பேசுவதில்லை. 'முக்கியத்துவம் கொடுக்காததாலோ நம்பிக்கை குறைவினாலோ அதுபோல செய்வதில்லை' என விளக்கம் கொடுக்கிறார் அபிஷேக். "என்னுடைய படங்களைப் பற்றிக் குறைவாகப் பேசுகிறேன், என் வேலை குறித்து சிறிய குற்ற உணர்வு இருக்கிறது. அப்படியில்லாத படம் செய்ய வேண்டும் என விருப்பப்பட்டேன். இந்தப் படம் அதை மாற்றும். மிகக் கடினமாக உழைத்திருக்கிறோம். உங்கள் நண்பர்கள் குடும்பத்தோடு இந்தப் படத்தைப் பார்க்கலாம்." என்று பதிவிட்டுள்ளார்.

அதற்கு அவரது சகோதரி சுவேதா பச்சன், நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். அபிஷேக் பச்சனின் தந்தையும் முன்னணி நடிகருமான அமிதாப் பச்சன், "வெல் டன் பையு. இதுதான் வழி, எப்போதும்போல பெருமைப்படுகிறேன்... என்னுடைய அன்பும் ஆசிர்வாதங்களும்..." என கமென்ட் செய்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் 6 Netflix ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism