Published:Updated:

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கு வாரிசு யார்?

லதா மங்கேஷ்கர்

மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு ரூ.360 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கு யார் வாரிசு என்ற கேள்வி எழுந்துள்ளது.

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கு வாரிசு யார்?

மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு ரூ.360 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கு யார் வாரிசு என்ற கேள்வி எழுந்துள்ளது.

Published:Updated:
லதா மங்கேஷ்கர்
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் 70 ஆண்டுகளுக்கும் மேல் பாடல்களை பாடி தனது வாழ்க்கையையே பாடல்களுக்காகவே அர்ப்பணித்துக்கொண்டார். அவர் தனது வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தார். ஆனால் அவருக்கு மிகப்பெரிய குடும்பமே இருக்கிறது. மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் இருக்கின்றனர். லதா மங்கேஷ்கர் தனது வாழ்நாளில் பாடி சேர்த்த சொத்துக்கள் பல நூறு கோடியை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சகோதரருடன் லதா மங்கேஷ்கர்
சகோதரருடன் லதா மங்கேஷ்கர்

தென்மும்பையில் உள்ள பெடர் ரோட்டில் அவர் வசித்து வந்த பிரபு குஞ்ச் கட்டிடத்தில் உள்ள ஆடம்பர வீடு, அவரிடம் இருந்த மெர்சிடிஸ் பென்ஸ் உட்பட ஏராளமான ஆடம்பர கார்கள் என அவர் விட்டுச்சென்ற சொத்துக்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். லதா மங்கேஷ்கருக்கு கார்கள் என்றால் அதிகம் பிடிக்கும். இது தவிர லதா மங்கேஷ்கர் பெயரில் இருக்கும் வைப்புத் தொகை, அவரது பாடலுக்கு வரும் ராயல்டி வருமானம் போன்றவையும் இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லதா மங்கேஷ்கர் தான் இறக்கும் வரை தனது பாடல்களுக்கு ராயல்டியாக மாதம் 40 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வந்தார். இதன் மூலம் அவருக்கு ஆண்டுக்கு ரூ.6 கோடி வரை வருமானம் கிடைத்துக்கொண்டிருந்தது. லதா மங்கேஷ்கருக்கு ரூ.360 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த சொத்துக்களுக்கு வாரிசு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. லதா மங்கேஷ்கர் இறந்த போது அவருக்கு இறுதிச்சடங்குகளை அவரது தம்பி ஹிருதயாநாத் மங்கேஷ்கர் செய்தார். எனவே சொத்தின் பெரும்பகுதி ஹிருதயநாத்திற்கு செல்லும் என்று கூறப்படுகிறது.

லதா மங்கேஷ்கர் தனது சகோதர, சகோதரிகளுடன்
லதா மங்கேஷ்கர் தனது சகோதர, சகோதரிகளுடன்

ஹிருதயநாத் மங்கேஷ்கர் மீது லதா மங்கேஷ்கருக்கு எப்போதும் அதிக பாசம் உண்டு. எப்போதும் தனது தம்பியை உயர்த்தியே லதா மங்கேஷ்கர் பேசுவது வழக்கமாகும். ஆனால், இதற்காக லதா மங்கேஷ்கரின் முழு சொத்தும் அவருக்குச் செல்லும் என்று சொல்லிவிட முடியாது என்கிறார்கள் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள். லதா மங்கேஷ்கருக்கு 3 சகோதரிகள் இருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கவேண்டும் என்று கேட்கலாம்.

லதா மங்கேஷ்கர் குடும்பத்திற்கு ஒரு டிரஸ்ட் இருக்கிறது. அந்த அறக்கட்டளை சார்பாக புனேயில் லதா மங்கேஷ்கர் தந்தை பெயரில் பிரமாண்ட மருத்துவமனை ஒன்றும் செயல்படுகிறது. இம்மருத்துவமனையை கட்ட லதா மங்கேஷ்கர்தான் அதிக அளவு நிதி வழங்கினார். மருத்துவமனையையை நிர்வகிக்கும் குடும்ப அறக்கட்டளையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். எனவே மருத்துவமனையை பராமரிப்பதில் எந்த வித பிரச்னையும் வரப்போவதில்லை. ஆனால், லதாமங்கேஷ்கரின் இதர சொத்துக்களுக்குத்தான் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.