Published:Updated:

`திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'- ஹனி சிங்கின் Body Transformation படங்கள்! ரசிகர்கள் கமென்ட்!

ஹனி சிங்

ரசிகர்களிடம் இருந்து '2012ல் பார்த்த ஹனி சிங் போலவே இருக்கிறார்' என்பது போலான கமென்ட்கள் வந்தவண்ணம் உள்ளன

`திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'- ஹனி சிங்கின் Body Transformation படங்கள்! ரசிகர்கள் கமென்ட்!

ரசிகர்களிடம் இருந்து '2012ல் பார்த்த ஹனி சிங் போலவே இருக்கிறார்' என்பது போலான கமென்ட்கள் வந்தவண்ணம் உள்ளன

Published:Updated:
ஹனி சிங்

யோயோ ஹனிசிங், பாலிவுட்டின் பிரபல ராப் பாடகர். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 85 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். ஹனி சிங் பல முறை சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர் நீச்சல்' படத்திலும் அனிருத் இசையில் ஒரு பாடலின் ராப் பாடியிருக்கிறார். 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் 'லுங்கி டான்ஸ்' பாடலைப் பாடியிருந்தார். ஷாருக் கான் இவரைத் தாக்கியதால் அந்தப் படத்தின் டூரில் இருந்து விலகியதாகச் செய்தி பரவியது. அதனை மறுத்தார் ஹனி சிங்கின் மனைவி ஷாலினி தல்வார். அவர் கடந்த வருடம் தான் தொடர்சியாக மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஹனிசிங் மற்றும் அவரது குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்படுவதாகப் பேசியது சர்ச்சையானது. அதற்கு முன்பு பெண்களைப் பற்றி அவதூறாக எழுதப்பட்ட பாடல் வரிகளுக்காக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இப்படி தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த ஹனி சிங்

சமீபத்தில் அவரது புகைப்படம் ஓன்று வெளியாகி உள்ளது. நடுவில் உடல் எடை போட்டது போல இருந்த அவரது தோற்றத்திற்கு முற்றிலும் மாறாக உடற்கட்டுடன் அதில் காட்சியளிக்கிறார் ஹனிசிங். இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து '2012ல் பார்த்த ஹனிசிங் போலவே இருக்கிறார்' என்பது போலான கமென்ட்கள் வந்தவண்ணம் உள்ளன. உடல் பயிற்சி செய்யும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றையும் பகிர்ந்துள்ளார் ஹனிசிங். மீண்டும் இசை டூரைத் தொடங்கியிருக்கும் ஹனிசிங் கடந்த சனிக்கிழமை ஹைதராபாத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். கடந்த வருடத்தில் 5 பாடல்கள் வெளியிட்டார். இந்த வருடம் இன்னும் ஆக்டிவாக மாற இருக்கிறார் ஹனிசிங். சர்ச்சைகளில் சிக்காமல் இசைப் பணியை மட்டும் கவனிங்க என்பதுபோலான கமென்ட்களையும் பலர் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism