கட்டுரைகள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

எவர் க்ரீன் ஹீரோக்கள்!

எவர் க்ரீன் ஹீரோக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
எவர் க்ரீன் ஹீரோக்கள்!

எவர் க்ரீன் ஹீரோக்கள்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுவது, கார்ட்டூன் மட்டுமே. அடிப்படை நற்பண்புகளைப் பொழுதுபோக்குடன் சேர்த்து கற்றுத்தரும் கார்ட்டூனும் உண்டு. எத்தனை புதிய டிவி சேனல்கள் வந்தாலும், கார்ட்டூன் சேனல்களின் மவுசு குறைவதே இல்லை. அந்த வகையில் இப்போதைய சூப்பர் டூப்பர் கார்ட்டூன்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்...

எவர் க்ரீன் ஹீரோக்கள்!

இந்தியாவின் மிகவும் பிரபலமான கார்ட்டூன் தொடர்களில் ஒன்று, மோட்டு பட்டுலு. காஸ்மோஸ் மாயா தயாரிப்பு நிறுவனத்தால்      2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்டு, ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது. ஃபர்ஃபுயூரி (Furfuri) என்னும் கற்பனை நகரில் வசிக்கும் இரு நண்பர்களைப் பற்றிய சுவாரஸ்யமான நகைச்சுவை தொடர். இதன் கதைகளை எழுதியவர், நிரஜ் விக்ரம். இந்தியா முழுவதும் 9 மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது.

எவர் க்ரீன் ஹீரோக்கள்!

அதிக ரசிகர்களைக்கொண்ட இந்திய கார்ட்டூன் தொடர், சோட்டா பீம். இந்தியாவின் மிகப்பெரிய கார்ட்டூன் தயாரிப்பு நிறுவனமான கோல்டு அனிமேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் 2008 ஆம் ஆண்டு, இந்தி மொழியில் உருவாக்கப்பட்டு, போகோ சேனலில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. கிராமத்துப் பையனாக வரும் சோட்டா பீம் மற்றும் அவனது நண்பர்கள் தீயசக்திகளிடமிருந்தும், தீயவர்களிடமிருந்தும் தங்கள் கிராமம் டோலக்பூரையும் அதன் மக்களையும் காப்பாற்றுவதே கதை. பீம் விரும்பிச் சாப்பிடுவது டுன்டுன் ஆன்ட்டி செய்யும் லட்டு. சோட்டா பீமை வைத்து இதுவரை 25-க்கும் மேற்பட்ட அனிமேஷன் திரைப்படங்களும் வந்துள்ளன.

எவர் க்ரீன் ஹீரோக்கள்!

க்ரேயான் ஷின் - ஷான் என்னும் ஜப்பான் கார்ட்டூன் தொடரையே இங்கே ஷின் - ஷான் என்கிறோம். 1990 ஆம் ஆண்டு யூஷி யோஷிடோ என்பவரால் வரையப்பட்ட ஷின்-ஷான், 1992 முதல் தொலைக்காட்சியில் வெளிவந்தது. பட்டிதொட்டி எல்லாம் பேசுபொருளான ஷின்-ஷான் 45 நாடுகளில் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஒளிபரப்பாகிறது. அந்த `கியா கியா...’ குரலும் கிச்சு கிச்சு மூட்டும் வசனமும் அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில்       2006 ஆம் ஆண்டு முதல்       ஷின் - ஷான் ஒளிபரப்பாகத் தொடங்கியது. `அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி...’ என்ற வசனம் இப்போது வரை நிறைய பேரின் காலர் ட்யூன்.

எவர் க்ரீன் ஹீரோக்கள்!

ஜப்பானின் மங்கா காமிக்ஸ் பிரபலங்களில் ஒன்று, டோரேமான். 1969 ஆம் ஆண்டு, ஃபுஜிகோ ஃபுஜியோ (Fujiko Fujio) குழுவினரால் உருவாக்கப்பட்டது. முதலில் இதழ்களில் வெளிவந்த டோரேமான், 1973-ம் ஆண்டு ‘ஹங்காமா’ சேனலில் ஒளிபரப்பானது. தற்போது டிஸ்னி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. ‘நோபிட்டோ நோபி’என்ற சிறுவனுக்கு உதவ எதிர்காலத்திலிருந்து வந்ததுதான் டோரேமான் என்ற ரோபோட் பூனை. இதற்கு காதுகள் கிடையாது. முதலில் டோரேமான் மஞ்சள் நிறத்திலிருந்தது. எலி கடித்ததில் வலியால் அழுதபோது, நீல நிறமாக மாறிவிட்டது. டோரேமானுக்குப் பிடித்த எண் 1293. ஏனென்றால், அது 129.3 கிலோ எடை, 129.3 செ.மீ உயரம், ஒரு மணி நேரத்துக்கு 129.3 கிலோமீட்டர் தூரம் ஓடும். பயப்படும்போது 129.3 செ.மீ உயரத்துக்குக் குதிக்கும். இந்த கார்ட்டூன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது.

எவர் க்ரீன் ஹீரோக்கள்!

நிஞ்சாவுடன் நட்பாக இருக்கும் கென் என்னும் 10 வயதுச் சிறுவன் செய்யும் சேட்டைகளே ‘நிஞ்சா ஹட்டோரி'. ஜப்பானியக் காமிக்ஸ் ஹீரோ. இதில் வரும் நிஞ்சா ஹட்டோரி, கெனிச்சி, ஹட்டோரியின் தம்பி சின்ஷோ நாய், ஷிஷிமாரோ, யுமிக்கோ, சுபாமி (சோனம்), கியோ கதாபாத்திரங்கள் செய்யும் வித்தைகள் அதகளம். டோரேமானை உருவாக்கிய ஃபுஜிகோ ஃபுஜியோ குழுவினரே 1981 ல் இதனை உருவாக்கினர். கோரோ கோரோ காமிக்ஸ் இதழில் 1964 முதல் 1971 ஆம் ஆண்டு வரை வந்த கார்ட்டூன், 1981 ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

-  பெ.மதலை ஆரோன்