Published:Updated:

'ஃபிரிடா' ஸ்ருதி, 'பியூட்டி பீஸ்ட்' ஓவியா, 'மர்லின்' நிக்கி, 'சிண்ட்ரெல்லா' பிந்து..! - 'Once upon a time' வாவ் ஷுட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'ஃபிரிடா' ஸ்ருதி, 'பியூட்டி  பீஸ்ட்' ஓவியா, 'மர்லின்' நிக்கி, 'சிண்ட்ரெல்லா' பிந்து..! - 'Once upon a time' வாவ் ஷுட்
'ஃபிரிடா' ஸ்ருதி, 'பியூட்டி பீஸ்ட்' ஓவியா, 'மர்லின்' நிக்கி, 'சிண்ட்ரெல்லா' பிந்து..! - 'Once upon a time' வாவ் ஷுட்

'ஃபிரிடா' ஸ்ருதி, 'பியூட்டி பீஸ்ட்' ஓவியா, 'மர்லின்' நிக்கி, 'சிண்ட்ரெல்லா' பிந்து..! - 'Once upon a time' வாவ் ஷுட்

2015-ல் ரியல் லைஃப் ஜோடிகள் மற்றும் ரீல் லைஃப் ஜோடிகளை வைத்து கார்த்திக் ஸ்ரீனிவாசன் எடுத்த காலண்டர் ஷூட் இணையத்தில் வைரலாய் வட்டமடித்தது. அதேபோல் இந்த வருடமும் ஒரு வைரல் கான்செப்ட்டோடு வந்திருக்கிறார் செலிபிரிட்டி போட்டோகிராஃபர் கார்த்திக் ஸ்ரீனிவாசன். ஜனவரி 27-ஆம் தேதி இவர் வெளியிட்ட காலண்டர் ஷூட் போட்டோக்கள்தான் தற்போது இணையத்தில் டாப் ட்ரெண்டிங். இந்த போட்டோஷூட் ஐடியா குறித்தும், அதன் சுவாரஸ்யங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டோம்.

’’2016 மற்றும் 2017 காலண்டர் ஷூட்டை சென்னை வெள்ளம் மற்றும் டிமானிடைசேஷன் காரணமாக என்னால் பண்ணமுடியவில்லை. 2013-லிருந்து நான் பண்ணவேண்டும் என்று நினைத்த 'once upon a time' என்ற கான்செப்ட்டை இந்த வருடம் ஷூட் செய்திருக்கிறேன். இந்த கான்செப்ட்டின் நோக்கமே, ஹாலிவுட்டின் சில ஐகானிக் ஷாட்ஸை ரீகிரியேட் பண்றதுதான். ஹாலிவுட்டில் பிரபலமான சினிமா ஹீரோயின்ஸ் மற்றும் சில பிரபலமான சினிமா கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நினைவூட்டும் சில ஷாட்ஸை என்னுடைய கற்பனையையும் கலந்து இந்த போட்டோஷூட்டை செய்திருக்கிறேன். 

இந்த ஷூட்டிற்காக ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால், ஓவியா, பிந்துமாதவி, ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கி கல்ராணி, ரெஜினா, டாப்ஸி என எல்லோரும் முழு ஈடுபாடோட கலந்துகிட்டாங்க. இவங்ககிட்ட நான் இந்த கான்செப்ட்டை சொன்னதும் ரொம்ப ஆர்வமாகிட்டாங்க. அதனாலையே ஒருநாள் முழுக்க எனக்காக நேரம் ஒதுக்கி இந்த ஷூட்டை முடிச்சுக்கொடுத்தாங்க. 

* ஃபிரிடா காலோ (frida kahlo) என்ற மெக்சிக்கோ நாட்டு ஓவியரோட தோற்றத்தை ஸ்ருதிஹாசன் பண்ணியிருக்காங்க.  இந்த கான்செப்ட்டைப் பற்றி ஸ்ருதியிடன் சொன்னதும், 'அதிகமா மேக்கப் இல்லாமல் இயல்பாக இருக்கிற கேரக்டரை வைத்து ஷூட் பண்ணலாம்’னு சொன்னாங்க. அதனால், நான் ஸ்ருதிக்கு ஃபிரிடா காலோ கேரக்டரைக் கொடுத்தேன். நல்ல அவுட்புட் வரணும்னு அவங்களே முழு ஈடுபாடோட பண்ணாங்க. போட்டோவைப் பார்த்துட்டு ரொம்பவே ஆச்சரியப்பட்டாங்க. ஃபிரிடா காலோவோட இரண்டு கெட்டப்களை வெச்சு ஸ்ருதிஹாசனுக்குப் பண்ணினேன்.

*  ’விண்டேஜ் லுக்கை வைத்து உங்களுக்கு ஷூட் பண்ணலாம்’ என்றதும் காஜல் உடனே ஓகே சொல்லிட்டாங்க. காஜலுக்கு நடிகை பியான்கா ஜாகர் (Bianca Jagger) கேரக்டர் கொடுத்தேன். முதலில் காஜல் அகர்வால் போர்ஷனை ப்ளாக் அண்ட் வொயிட்டாகப் பண்ணலாம் என்ற ஐடியா இருந்தது. பிறகு, விண்டேஜ் லுக்கைக் கலரில் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கலரிலேயே ரெடி பண்ணிட்டோம். 

* ஓவியாவுக்கு பியூட்டி அண்ட் த பீஸ்ட் (Beauty and the Beast) படத்தோட கான்செப்ட் கொடுத்தேன். அந்தப் படத்தில் ரோஸ்தான் முக்கிய கான்செப்ட். அதை வைத்தே ஓவியாயோட போர்ஷனை எடுத்தோம். ஓவியாவோட ஷூட் பண்றது ஒரு வொர்க் பண்ற ஃபீலே வராது. ஸ்டுடியோவுக்குள்ளே பாட்டு கேட்டுக்கிட்டு, பார்ட்டி மூடுலேயே போஸ் கொடுப்பாங்க. அவங்கக்கூட வொர்க் பண்றதே செம ஜாலியா இருக்கும்.

* மர்லின் மன்றோவோட ஃபேமஸான போட்டோவை உலகத்துல யார்கிட்ட காட்டுனாலும் பல பேர் சரியாச் சொல்வாங்க. அப்படி ஒரு ஃபேமஸான போஸை நிக்கி கல்ராணியை வெச்சுப் பண்ணினோம். டாப் டு பாட்டம் அப்படியே பண்ணாம, சில மாற்றங்கள் மற்றும் என்னுடைய கற்பனைகளை சேர்த்துப் பண்ணினேன். 

* டாப்ஸிகிட்ட இந்த கான்செப்ட்டைப் பற்றிச் சொல்லும்போதே, அவங்களா கேட்டு வாங்கின கதாபாத்திரம்தான் ஆட்ரி ஹெப்பர்ன் (Audrey Hepburn). இவங்க Breakfast at Tiffany's என்ற ஃபேமஸான படத்தில் நடித்த நடிகை. இவங்களை மாதிரியே காஸ்ட்டியூம்ஸ் ரெடிபண்ணி டாப்ஸியை ஷூட் பண்ணினோம். டாப்ஸியை வெச்சே queen of spain லுக்ல இன்னொரு ஷூட்டும் பன்ணினேன். ஒரு அரண்மணை ஆர்ட் கேலரிக்குள்ள ராணி நிக்கிற மாதிரி ஒரு கான்செப்ட்ல அது இருக்கும். 

* சிண்ட்ரெல்லா கேரக்டரை நல்ல உயரமான நடிகையை வைத்துப் பண்ணலாம்னு நினைச்சிட்டிருந்தேன். அப்போதான் பிந்துமாதவி இந்த ஷூட்டிற்குள்ளே வந்தாங்க. அவங்களை வெச்சு சிண்ட்ரெல்லா அண்ட் helen of troy படத்தில் வர்ற ராணி கதாபாத்திரம்னு இரண்டு கேரக்டர் பண்ணினேன். 

* ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வர்ற டஸ்கி லுக் நடிகையா ஐஸ்வர்யா ராஜேஷை ஷூட் பண்ணினேன். பெரும்பாலான நடிகைகள் தன்னோட கலரைக் குறைத்துக்காட்ட விரும்பமாட்டார்கள். நான் ஐஸ்வர்யாவிடம் இந்தக் கதாபாத்திரம் உங்களுக்கு செட் ஆகும்னு சொன்னவுடன், எதுவுமே சொல்லாம ஓகே சொன்னாங்க. அவங்களோட லுக்கும் ரொம்ப பிரமாதமா வந்திருக்கு.

* Moulin Rouge படத்தில் கேசினோவுக்கு முன்னாடி நிற்கிற ஹீரோயின் லுக் மாதிரி கேத்ரின் தெரசாவிற்குப் பண்ணினேன். அந்த ஹீரோயின் கொடுத்த முகபாவனை மாதிரியே கேத்ரின் ரொம்ப இன்வால்வ் ஆகிப் பண்ணினாங்க. 

* ரெஜினாவை வைத்து கிளியோபாட்ரா மற்றும் டைட்டானிக் கான்செப்ட்டில் ஷூட் செய்தேன். இந்த கான்செப்ட்டில் தமன்னா அல்லது ரெஜினாவை வைத்துதான் ஷூட் செய்யவேண்டும் என்று முன்னரே நினைத்தேன். தமன்னா விருப்பமாக இருந்தாலும், கால்ஷீட் கிடைக்கவில்லை. அப்போது ரெஜினா கால்ஷீட் கிடைத்ததால், இந்த ஷூட் சிறப்பாக முடிந்தது.

கடந்த 27-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து அதில்தான் இந்த காலண்டரை ரிலீஸ் செய்தேன். நான் இந்த காலண்டர் ஷூட்டை எந்த லாபத்துக்காகவும் பண்ணலை. 500 காலண்டர் பிரிண்ட் செய்து அதை இலவசமாக் கொடுத்துள்ளேன். இந்த ஷூட்டிற்காக யாரும் பணம் வாங்கவே இல்லை. எல்லோரும் என்மேல வைத்திருந்த நட்பிற்காக ஒருநாள் ஒதுக்கி இந்த ஷூட்டை முடித்துக்கொடுத்தார்கள். ரொம்பநாளாக எனக்குள் இருந்த ஆசை, இந்த போட்டோஷூட்டால் நிறைவேறியது’’ என்று ’once upon a time’ போட்டோ ஷூட்டின் சுவாரஸ்யங்களைச் சொல்லிமுடித்தார் கார்த்திக் ஸ்ரீனிவாசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு