Published:Updated:

''கடைசிவரை அவருக்கான கிஃப்ட்டை கொடுக்கமுடியலை!" ரகுவரனுக்காக நெகிழும் ரோகிணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
''கடைசிவரை அவருக்கான கிஃப்ட்டை  கொடுக்கமுடியலை!" ரகுவரனுக்காக நெகிழும் ரோகிணி
''கடைசிவரை அவருக்கான கிஃப்ட்டை கொடுக்கமுடியலை!" ரகுவரனுக்காக நெகிழும் ரோகிணி

''கடைசிவரை அவருக்கான கிஃப்ட்டை கொடுக்கமுடியலை!" ரகுவரனுக்காக நெகிழும் ரோகிணி

ரகுவரன் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது, அவரது குரலும் வில்லத்தனமும்தான். பல உச்ச நட்சத்திரங்களுக்கு எல்லாம் பிக்பாஸாக இருந்து கலக்கிய இவர், இவ்வுலகைவிட்டுப் பிரிந்து பத்து வருடங்களாகிவிட்டன. இருந்தும் அவரது நடிப்பும் வசனமும் நம் மனதைவிட்டு நீங்காத அளவிற்குப் பல நினைவலைகளைக் கொடுத்துச்சென்றிருக்கிறார். வெகுசிலரின் இழப்பை மட்டும் கடந்துசெல்ல முடியாது. அந்த வெகுசிலரில் ரகுவரனின் இழப்பும் ஒன்று. சினிமாவில் வில்லனாக மிரட்டிய இவருக்கு, இசையின் மீது அலாதியான ஆர்வம் இருந்தது. ஆனால், அவரின் இசை ஆர்வம் அவரது வரலாற்றில் மறைந்தே இருந்தது. தன் இசை ஆர்வத்தில், ரகுவரனே ஓர் இசைக்குழுவை உருவாக்கி, ஆங்கிலத்தில் பாடல் எழுதி, இசையமைத்துப் பாடியிருக்கிறார். அந்த மியூசிகல் ஆல்பத்தை வெளியிடுவதற்குள் அவர் மறைந்துவிட, அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில், நடிகை ரோகிணி அதனை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளைச் செய்ய, சில தினங்களுக்கு முன்பு இந்த ஆல்பத்தை ரகுவரனின் நண்பரும், நடிகருமான ரஜினிகாந்த் வெளியிட்டார். 

இதுகுறித்து ரோகிணியிடம் பேசியபோது, "நான் நிறைய மியூசிக் கம்பெனிகிட்ட போய்க்கேட்டேன். அப்புறம், 'சரிகம'தான் ஒப்புக்கிட்டு அந்த புராஸஸ் பண்ணிக்கொடுத்தாங்க. எங்களுக்குமே அவரோட குரல், முகம் எல்லாம் இந்த ஆல்பத்துல பார்த்தால், 'அவர் கூட இல்லையே'ங்கிற ஃபீல் அதிகமாகிடும்னு கொஞ்ச நாள் இதுக்கான வேலைகளை ஆரம்பிக்காமலே இருந்தோம். அதிலிருந்து கொஞ்சம் மீண்டு வந்தபிறகுதான், அந்த வேலையை எடுத்துப் பண்ணோம். அவர் பண்ணி வெச்சிருந்த இந்த ஆல்பம் அவரோட ரசிகர்களுக்கானது. அதனால, கண்டிப்பா அதை ரிலீஸ் பண்ணணும்னு உறுதியா இருந்தோம். அவர் குடும்பமும் இந்தப் பொறுப்பை என்கிட்ட கொடுத்துட்டாங்க. அவர் இறப்பதற்குக் கொஞ்சநாள் முன்னாடி இதை ரிலீஸ் பண்ணிடனும்னு சொல்லிட்டே இருந்தாராம். எனக்கு அவரோட ஆல்பம் நல்ல லேபிள்ல வரணும்னு நினைச்சேன். ஏன்னா, அவர் இங்கிலீஷ்ல எழுதி, இந்த ஆல்பத்தை உருவாக்கினதுக்குக் காரணமே, உலகம் முழுக்க இருக்கிறவங்களுக்குப் போய்ச்சேரணும்னுதான். ரகுவரன் நினைச்சதுக்கு, 70 சதவிகித வேலைகள்தான் முடிஞ்சிருக்கு, இன்னும் 30 சதவிகித வேலைகள் இந்த ஆல்பத்துல இருக்குனு அவரோட வேலை பார்த்த ராஜன் சர்மா சொன்னார். ஆனா, எனக்கு, ரகுவரன் என்ன பண்ணி வெச்சிருந்தாரோ, அதைக் கொஞ்சம்கூட மாத்தாம அப்படியே ரிலீஸ் பண்ணணும்னு ஆசை. அதுக்கு 'சரிகம' நிறுவனமும் ஓகே சொன்னாங்க. அதேபோல, ரஜினி சார் கையால இந்த ஆல்பத்தை ரிலீஸ் பண்ணணும்னு நினைச்சு, அவர்கிட்ட கேட்டேன். கேட்டவுடனே ஒப்புக்கிட்டார் அப்போ அவர், ரிஷிவரனைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டார். ரிஷிவரன் அமெரிக்காவுல படிச்சிருக்கிட்டிருந்தார். அவன் வந்தவுடனேயே நான், ரஜினிசார்கிட்ட சொன்னேன். அடுத்தநாளே எங்களை வரச்சொல்லி, ரிஷிவரன்கிட்ட ரொம்ப நேரம் பேசிக்கிட்டு, இந்த ஆல்பத்தையும் ரிலீஸ் பண்ணார்.

"நானா ஒரு கிட்டார் வாங்கிட்டு வந்து கொடுத்தா, அதை அவர் எப்படி எடுத்துக்குவார்னு எனக்குத் தெரியலை. அவருக்கா வாங்கிக்கிற ஆர்வம் வர்றவரை நானும்  வெயிட் பண்ணி, வெயிட் பண்ணி... கடைசிவரை அவர் கிட்டார் வாங்க வரவே இல்லை. நானும் அவருக்குக் கொடுக்கணும்னு நினைச்ச கிஃப்ட்டை வாங்கிக்கொடுக்கவே இல்லை. இந்த ஆல்பம் அவரோட இன்னொரு முகத்தை உலகத்துக்குக் காட்டும்னு நம்புறேன்" என்றார் நம்பிக்கையோடு. நடிப்பும் வசனமும் மட்டுமல்லாது, மார்க் ஆண்டனியின் இசையும் அவரது நினைவுகளை நம்முள் கடத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு