Published:Updated:

"அப்போ, 'ஜோக்கர்' மல்லிகா... இப்போ, 'ஆண்தேவதை' ஜெர்ஸிகா..!" - ரம்யா பாண்டியன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"அப்போ, 'ஜோக்கர்' மல்லிகா... இப்போ, 'ஆண்தேவதை' ஜெர்ஸிகா..!" - ரம்யா பாண்டியன்
"அப்போ, 'ஜோக்கர்' மல்லிகா... இப்போ, 'ஆண்தேவதை' ஜெர்ஸிகா..!" - ரம்யா பாண்டியன்

"அப்போ, 'ஜோக்கர்' மல்லிகா... இப்போ, 'ஆண்தேவதை' ஜெர்ஸிகா..!" - ரம்யா பாண்டியன்

தமிழ்சினிமா உலகில் மட்டுமல்ல இந்திய சினிமா உலகத்தாலும் ஏகோபித்த பாராட்டு பெற்ற திரைப்படம், 'ஜோக்கர்'. பெரும்புகழ் பெற்ற இப்படத்தில் ரம்யா பாண்டியன்  நாயகியாக நடித்திருந்தும், அதன்பின் அவரை ஏனோ தமிழ்சினிமா கண்டுகொள்ளவில்லை. தற்போது தாமிரா இயக்கிவரும் 'ஆண் தேவதை' படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ள ரம்யா பாண்டியனிடம் பேசினோம்.

"அப்போ, 'ஜோக்கர்' மல்லிகா... இப்போ, 'ஆண்தேவதை' ஜெர்ஸிகா..!" - ரம்யா பாண்டியன்

"எனக்கு 'ஜோக்கர்' படத்துக்குப் பிறகு, 'நல்ல கதை இருக்கணும்; இல்லாட்டி நல்ல டீம்கூட வேலை பார்க்கணும்'னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ரெண்டுமே எனக்கு அமையவில்லை. 'ஜோக்கர்'  படம் பெருசா பேசப்பட்டதும், பாராட்டப்பட்டதும் உண்மை. ஆனா, எனக்கென்னமோ என்முகத்தைப் பார்த்து டைரக்டர் ராஜூமுருகன் சார் நிஜமாவே ஒரு கிராமத்துப் பொண்ணை அழைச்சுட்டுவந்து நடிக்கவெச்சிருக்கார்னு கோடம்பாக்கம் என்மேல முத்திரை குத்திடுச்சு. 'தலைநகரம்' படத்துல 'நானும் ரவுடிதான்'னு வடிவேலு சொல்றமாதிரி, 'நானும் 'ஜோக்கர்' படத்துல ஹீரோயினா நடிச்சவ'னு சொல்லிப்பார்த்தேன் அப்போவும் சினிமா உலகத்துல யாருமே நம்பலை. 'ஜோக்கர்' ரிலீஸாகி ஒரு வருடம் கழிச்சு, எனக்கு டைரக்டர் ரஞ்சித் சார் போன் செய்தார். 'ஸாரிம்மா... பெங்காலி தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டை நடிக்க வெச்சுருக்காங்கனு நெனச்சுட்டேன். இப்போதான் விஷயம் தெரிஞ்சது. நல்லா நடிச்சிருக்கேம்மா'னு மனம் திறந்து பாராட்டினார். இப்ப சொல்றேன், நான் திருநெல்வேலி பச்சைத் தமிழச்சி சார்..." என்று கடகடவெனச் சிரித்தார். 

" 'ஜோக்கர்' படம் ரிலீஸ் ஆனப்போ, சிவகார்த்திகேயன் சார் போன் பண்ணிப் பாராட்டினார். ஒரு இடத்துக்கு என் குடும்பத்தோட போயிருந்தப்போ அவரை நேர்ல பார்த்தேன். அப்போ, 'நீங்க 'ஜோக்கர்' படத்துல நல்லா நடிச்சிருந்தீங்க. பாடல் காட்சிகளில் நல்ல எக்ஸ்பிரஷன் காட்டியிருந்தீங்க. உங்க கணவர் பொதுக்கூட்டத்துக்குப் போயிட்டு குவாட்டரும் கோழி பிரியாணியும்  வாங்கிட்டுவந்து தரும்போது, உங்க மனசு மாறுற தருணத்தை ஸ்மைலியிலேயே காட்டினது நல்லா இருந்துச்சு. இரண்டாம் பாதியில்  ஒருத்தனை முதல்ல குத்துனா, வலிக்கும்; அழுகைவரும். குத்திக்கிட்டே இருந்தா மனசு, உடம்பும் மரத்துப்போய் அப்படியே ஸ்தம்பிச்சு உட்கார்ந்திடுவோம். அதுமாதிரி என்மனசு ஒரு மாதிரியாயிடுச்சு. செகண்ட் ஷோ போனதால ராத்திரி முழுக்க என்னால தூங்கவே முடியலை''னு ரொம்ப ஃபீல் பண்ணிப் பேசினார். முதலில் 'ஜோக்கர்' படத்தைப் பார்த்தப்போ ரஜினி சார் மொத்த டீமையும் பாராட்டினார். பிறகு, ரொம்பநாள் கழிச்சு மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் சார், 'ரஜினிசார் உன் கேரக்டரை ரொம்ப ஸ்பெஷலா பாராட்டினார்'னு சொன்னப்போ, அப்படியே கரைஞ்சு போயிட்டேன்!.     

"அப்போ, 'ஜோக்கர்' மல்லிகா... இப்போ, 'ஆண்தேவதை' ஜெர்ஸிகா..!" - ரம்யா பாண்டியன்

'ஜோக்கர்' படத்தைப் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணி முதலில்  பாராட்டினது, சமுத்திரக்கனி சார். அப்போ, 'நான் நடிக்கப்போற ஃபேமிலி சப்ஜெக்ட்ல எனக்கு ஜோடியா  நீதான் நடிக்கப்போற'னு சொன்னார். இப்போ நடிச்சுக்கிட்டு இருக்கிற 'ஆண் தேவதை' படத்துல அவருக்கு ஜோடியா நடிச்சிருக்கேன். ஒரு கிறிஸ்தவப் பெண்ணா, 'ஜெர்ஸிகா'ங்கிற் கேரக்டர்ல வர்றேன். சாப்ட்வேர் இன்ஜினீயரா வேலைபார்க்கிற நான், சமுத்திரக்கனி சாரைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நடிச்சுருக்கேன். வயசான கெட்டப் எல்லாம் இல்லை. இளமையான அம்மா நான். 'இந்தப் படத்துல நீங்க ரெண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கணும்'னு   சொன்னப்போ, நடிக்கலாமா வேண்டாமானு ஒரு தயக்கம் இருந்தது. ஆனா, நடிக்கும்போது எனக்குப் புது அனுபவமாக இருந்தது.

இப்போ இருக்கிற ஆடியன்ஸ் ரொம்பத் தெளிவு. ஒரு படத்துல ஒரு நடிகை டூயட் பாடினாலும் ரசிக்கிறாங்க. அதே நடிகை அடுத்த  படத்துல ஒரு குழந்தைக்கு அம்மாவா நடிச்சாலும் ரசிக்கிறாங்க. உதாரணத்துக்கு, 'காக்க முட்டை' படத்துல நடிச்ச ஐஸ்வர்யா ராஜேஷை சொல்லலாம். எனக்கு, இந்தப் படம் அப்படித்தான். ஒவ்வொரு ஃபேமிலியிலேயும் நடக்குற யதார்த்தமான சம்பவங்களை அடிப்படையா வெச்சுக் கதை எழுதியிருக்கார், இயக்குநர் தாமிரா. அதனால, ஒவ்வொரு சீனையும் நல்லா உணர்ந்து நடிக்க முடிஞ்சது. சமுத்திரக்கனி சாருக்கு சமமாக என் கேரக்டரும் இருக்கும். 'ஜோக்கர்' படத்துல முழுக்க முழுக்க கிராமத்துப் பொண்ணா வந்தேன். இந்தப் படத்துல சிட்டி பொண்ணா நடிச்சிருக்கேன். அது எனக்குக் கொஞ்சம் சவாலா இருந்தது. 'ஆண் தேவதை' படத்தைத் தியேட்டர்ல பார்க்குற ஒவ்வொரு ஆடியன்ஸுக்கும் இந்தப் படம் பிடிக்கும்னு நம்புறேன்!" என்று நம்பிக்கையோடு பேசுகிறார், ரம்யா.           

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு