Published:Updated:

``விஜய் வேறலெவல், அக்‌ஷய்குமார் ஸ்பெஷல், ரகுல் ப்ரீத் சிங்குக்கு கஷ்டம்!" - `மெர்சல்' காஸ்டியூம் டிசைனர்ஸ்

``விஜய் வேறலெவல், அக்‌ஷய்குமார் ஸ்பெஷல், ரகுல் ப்ரீத் சிங்குக்கு கஷ்டம்!" - `மெர்சல்' காஸ்டியூம் டிசைனர்ஸ்

``விஜய் வேறலெவல், அக்‌ஷய்குமார் ஸ்பெஷல், ரகுல் ப்ரீத் சிங்குக்கு கஷ்டம்!" - `மெர்சல்' காஸ்டியூம் டிசைனர்ஸ்

``விஜய் வேறலெவல், அக்‌ஷய்குமார் ஸ்பெஷல், ரகுல் ப்ரீத் சிங்குக்கு கஷ்டம்!" - `மெர்சல்' காஸ்டியூம் டிசைனர்ஸ்

``விஜய் வேறலெவல், அக்‌ஷய்குமார் ஸ்பெஷல், ரகுல் ப்ரீத் சிங்குக்கு கஷ்டம்!" - `மெர்சல்' காஸ்டியூம் டிசைனர்ஸ்

Published:Updated:
``விஜய் வேறலெவல், அக்‌ஷய்குமார் ஸ்பெஷல், ரகுல் ப்ரீத் சிங்குக்கு கஷ்டம்!" - `மெர்சல்' காஸ்டியூம் டிசைனர்ஸ்

தென்னிந்திய சினிமாவின் தலை சிறந்த காஸ்டியூம் டிசைனர்கள் ஒன்று சேர்ந்து வேலை பார்த்த படங்களுள் ஒன்று மெர்சல். அதில் வேலை பார்த்த காஸ்டியூம் டிசைனர்களான நீரஜா கோனா, அர்ச்சா மெஹ்தா, ஜெயலக்ஷ்மி சுந்தரேசன், பல்லவி சிங், கோமல் சஹானி ஆகியோர்கள்தாம் தற்போது டாப் ஹிட் அடித்து வரும் தமிழ் படங்களின் ஆடை வடிவமைப்பாளர்கள். அவர்களிடம் பேசிய போது அவர்களின் அடுத்தகட்ட திட்டம் மற்றும் அனுபவம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

நீரஜா கோனா :

"ஃபேஷன் டிசைனிங் படிப்பை முடிச்சுட்டு அமெரிக்காவுல தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துட்டு இருந்தேன். 2013-ஆம் ஆண்டு இந்தியா வரவேண்டிய சூழ்நிலை. அப்போதான், நிறைய தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்கள்ல காஸ்டியூம் டிசைனிங் பண்றதுக்கான வாய்ப்பு கிடைத்தது. தமிழ்ல என்னுடைய முதல் படம் 'மெர்சல்'. ஃபிளாஷ்பேக்ல வர்ற விஜய் மற்றும் நித்யா மேனனுக்குக் காஸ்டியூம் பண்ணிருக்கேன். 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துல ரகுல் ப்ரீத் சிங்குக்கு காஸ்டியூம் பண்றது பெரிய சவாலான ஒரு விஷயமான இருந்தது. இதுவரைக்கும் ரொம்ப ஸ்டைலா இருந்த ரகுல், 'தீரன்' படத்துல பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரியான ரோல் பண்ணியிருந்தாங்க. அறிமுக ஹீரோ, ஹீரோயின்களுக்கு காஸ்டியூம் பண்றது ரொம்ப ஈஸியான விஷயம். இதுவே பெரிய ஹீரோக்களுக்கு காஸ்டியூம் பண்றது கொஞ்சம் கஷ்டம். அவங்களுக்கு ஏற்கெனவே ஒரு ஸ்டைல் இருக்கும். அதை, கதைக்கு ஏத்தமாதிரி மாத்தி காஸ்டியூம் கொண்டு வர்றதுக்குள்ள நாம ஒருவழி ஆகிடுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போ 'சாமி-2', சூர்யா 36 படத்துக்கான காஸ்டியூம்ஸ் பண்ணிட்டு இருக்கேன். 'இரும்புத்திரை' படத்தோட ஷூட்டிங் முடிந்ததுமே இந்த ரெண்டு படங்களுக்கான வேலைகள் ஆரம்பிச்சுருச்சு."

அர்ச்சா மெஹ்தா :

"என் வீட்ல ஃபேஷன் டிசைனிங் படிக்கணும்னு சொன்னப்போ எல்லாரும், 'நீ க்ரியேட்டிவா ஒரு வேலையும் செய்தது கிடையாது. உனக்கு இதெல்லாம் செட் ஆகாது'னு சொன்னாங்க. ஆனா, இப்போ என்னோட வேலையைப் பார்த்து பிரமிச்சுப் போயிருக்காங்க. மத்தியப் பிரதேசத்துல பொறந்து வளர்ந்த நான் NIIFT-ல பேஷன் டிசைனிங் படிச்சுட்டு, லண்டன்ல முதுகலை பட்டம் முடித்தேன். அப்புறம் வேலை தேடிட்டு இருந்தப்போதான் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 'ராம்லீலா' படத்துல ஒரேயொரு பாட்டுக்கு மட்டும் காஸ்டியூம் பண்றதுக்கான வாய்ப்பு கிடைத்தது. மொத்தமா ஒன்றரை வருடங்கள் இந்தப்படத்துக்காக மட்டுமே செலவானது. அந்த அளவுக்கு ரொம்ப டீடெயிலிங்கான திரைப்படம். என்னுடைய கனவு நனவான தருணம் அதுதான். வரலாறு சார்ந்த படங்களுக்கு வேலை பார்க்குறப்போ நிறைய விஷயங்களைக் கத்துக்கலாம். நிறைய புத்தகங்கள் படிச்சு அதுக்காக நாம கடுமையா உழைக்கணும். இதுவே கமர்ஷியல் படங்களுக்கு இந்தமாதிரி மெனக்கெடணும் என்ற அவசியம் இல்லை. 'ராம்லீலா'வுக்கு அப்புறம் நிறைய தெலுங்கு, தமிழ் படங்கள்ல வேலை பார்குறதுக்கான வாய்ப்புகளும் கிடைத்தது.

தமிழ்ல 'மெர்சல்' படத்துக்காக போலந்து நாட்டுல ஷூட்டிங் பண்ணோம். காஜலுக்கான காஸ்டியூம்ஸ் நான்தான் பண்னேன். கடந்த மூணு வருடங்களா காஜலுக்கான ஸ்டைலிங் பண்ணிட்டு இருக்கேன். அடுத்ததாக, 'குயின்' தமிழ் பட ரீமேக்ல காஸ்டியூம் பண்ணிட்டு இருக்கேன்."

ஜெயலக்ஷ்மி சுந்தரேசன் :

"என்ஜினீயரிங் படிச்சுட்டு கார்ப்ரேட் கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தேன். அந்த வேலை எனக்கு திருப்திகரமா இல்லை. நான் ஃபேஷன் துறைக்குள்ள போறதுக்குக் காரணமே என்னுடைய நண்பர்கள்தான். என்னுடைய ட்ரெஸ் கலெக்ஷன்ஸ் எல்லாத்தையும் ரொம்பவே பாராட்டுவாங்க. 'நீங்க ஏன் காஸ்டியூம் டிசைனிங் பண்ணக்கூடாது'னு அடிக்கடி கேட்டாங்க. இதுவரைக்கும் நான் யார்கிட்டயுமே அசிஸ்டன்ட்டா வேலை பார்த்தது இல்லை. இப்போ படங்கள்ல பண்ணிட்டு இருக்குற காஸ்டியூம்ஸ் எல்லாமே என்னுடைய க்ரியேட்டிவிட்டிதான்.

நான் முதன்முதல்ல விளம்பரப் படங்கள்ல வேலை பார்க்க ஆரம்பித்தேன். அழகியல் உணர்வு என்பது விளம்பரப்படங்கள்லதான் அதிகமா இருக்கும். முதன்முதல்ல 'விடியும்முன்'னு ஒரு படம் பண்ணேன். விளம்பரங்கள்ல வேலை பார்த்துட்டு இருந்த எனக்கு, சினிமா பண்ணப் பிடிக்கலை. அதனால, கடந்த இரண்டு வருடங்களா சினிமா பக்கம் தலை வெச்சுப்படுக்கலை.

'மெர்சல்' படத்துல 'ஆளப்போறான் தமிழன்' பாட்டுக்கான காஸ்டியூம்ஸ்  பண்ணியிருந்தேன். வெறும் ரெண்டே நாள்ல 1,500 காஸ்டியூம்ஸ் ரெடி பண்ணச் சொல்லியிருந்தாங்க. என்னுடைய இந்த வேகம் நிறைய பேருக்குப் பிடிச்சிருந்தது. அடுத்ததா, 'மிஸ்டர் சந்திரமௌலி', 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' ஆகிய ரெண்டு படங்களுமே காஸ்டியூம் பண்ணியிருக்கேன். 'இரும்புத்திரை' படத்துல அர்ஜுனுக்கு மட்டும் காஸ்டியூம்ஸ் பண்ணியிருக்கேன்."

பல்லவி சிங் :

"அலஹாபாத் சொந்த ஊர். ஆனா, சென்னையிலதான் வளர்ந்தேன். படிச்சது NIIFT-ல ஃபேஷன் டிசைனிங். காஸ்டியூம் டிசைன் பண்றதுல முக்கியமான விஷயமே இயக்குனர்கிட்ட பேசி அவங்க என்ன நினைக்குறாங்களோ அதைத் திரையில கொண்டு வர்றதுதான். ஷூட்டிங்ல கடைசி நேரத்துலதான் நம்ம என்ன செய்யணும் என்பதைத் தெளிவா சொல்வாங்க. ஸோ, க்ரியேட்டிவிட்டியும், வேகமும் முக்கியம். ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவோட மனைவி ஜானவி மேடம்கிட்ட வேலை பார்த்துட்டு இருந்தேன். அவங்க மூலமா வந்த வாய்ப்புதான், 'நான் மஹான் அல்ல' படத்துக்கான காஸ்டியூம் டிசைனிங். ரெண்டு பேரும் சேர்ந்து இந்தப்படத்துல வேலை பார்த்திருப்போம். அடுத்து நாக சைதன்யா நடிக்குற தெலுங்கு படத்துல காஸ்டியூம் வேலைகள் பார்த்துட்டு இருக்கேன்."

கோமல் சஹானி : 

"எனக்குச் சின்ன வயசுல இருந்தே ஃபேஷன் மேல ஈடுபாடு இருந்துச்சு. படிப்பை முடிச்ச உடனேயே ஒரு பொட்டிக் ஷோரூம்ல டிசைனரா வேலை பார்த்தேன். அதுக்கப்பறம் பாலிவுட் இயக்குநர் ஆஷிஷ் ஆர் மோகனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்களுக்குப் போன வருடம் ஒரு பையன் பொறந்தான். அதனால இப்போ ரொம்பவே பிஸி. 

என்னுடைய முதல் போட்டோஷூட் ஃபிலிம்ஃபேர் இதழுக்காக ப்ரீத்தி ஜிந்தாவை வெச்சுப் பண்ணேன். மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வாங்கிய நேஹா துப்பியாகூட போட்டோஷூட் பண்ணியிருக்கேன். நிறைய சர்வதேச மாத இதழ்களுக்கு 'கவர்கேர்ள்' போட்டோஷூட் பண்ணியிருக்கேன். இந்தமாதிரி வேலைகள்தான் நான் சினிமாவுக்குள்ள வர உதவிகரமா இருந்தது. 'மெர்சல்' படத்துல விஜய்க்கு காஸ்டியூம் பண்ணும்போது, நாம ரொம்ப பெரிய ஹீரோ கூட வேலை பார்க்குற மாதிரியே இருக்காது. விஜய் புதுசு புதுசா வித்தியாசமான காஸ்டியூம்களை முயற்சி செய்து பார்ப்பார்.  நான் அக்ஷய்குமாரோட பெர்சனல் ஸ்டைலிஸ்ட். அவரோட படங்கள் முக்கால்வாசி நான்தான் காஸ்டியூம்ஸ் பண்ணுவேன்."