Published:Updated:

"காயத்ரி அவ்வளவு சீக்கிரம் செத்துடமாட்டா; ஃபைனல் ட்விஸ்ட் ஒண்ணு இருக்கு!" - 'தெய்வமகள்' ரேகா குமார்

"காயத்ரி அவ்வளவு சீக்கிரம் செத்துடமாட்டா; ஃபைனல் ட்விஸ்ட் ஒண்ணு இருக்கு!" - 'தெய்வமகள்' ரேகா குமார்
"காயத்ரி அவ்வளவு சீக்கிரம் செத்துடமாட்டா; ஃபைனல் ட்விஸ்ட் ஒண்ணு இருக்கு!" - 'தெய்வமகள்' ரேகா குமார்

ந்து வருட பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்யவிருக்கிறது, சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'தெய்வமகள்' சீரியல். இதில், காயத்ரியாக மக்கள் மனதில் அழுத்தமாக இடம்பிடித்தவர், ரேகா குமார்.  தனது கதாபாத்திர அனுபவங்களைப் பகிர்கிறார். 

“கமிட்டாகும்போதே காயத்ரி கேரக்டர் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்னு நினைச்சீங்களா?" 

"இல்லவே இல்லை. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கதையைக் கேட்டப்போ, வெயிட்டான நெகட்டிவ் ரோல் என்பது மட்டும் புரிஞ்சது. சந்தோஷமா நடிக்க ஆரம்பிச்சேன். தொடக்கம் முதலே என் கொளுந்தனார் பிரகாஷா நடிச்ச கிருஷ்ணா ரொம்ப ஆக்டிவா நடிப்பார். எங்கள் இருவரின் கேரக்டருமே மக்களால் ரசிக்கப்பட்டுச்சு. போட்டிபோட்டு நடிச்சோம். எதிர்பார்த்ததைவிட மக்களின் ஆதரவும் அதிகமா கிடைக்க, பல அதிரடி திருப்பங்களுடன் கதை நகர்ந்துச்சு. ஆனால், என் கேரக்டருக்கு இவ்வளவு பெரிய ரீச் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை.” 

"உங்க கேரக்டருக்கு ஆடியன்ஸ்கிட்ட நிறைய திட்டுகள் கிடைச்சிருக்குமே..." 

"ஒண்ணா... ரெண்டா. வெளியே போனாலே நிறைய பெண்கள் சூழ்ந்துட்டு திட்டுவாங்க. 'எல்லாம் நடிப்பு'னு பலமுறை சொன்னாலும், 'அது என்னவா வேணாலும் இருக்கட்டும். பிரகாஷையும் சத்யாவையும் இவ்வளவு கொடுமை பண்றதா'னு மிரட்டுவாங்க. ஒருமுறை கோயிலில் ஷூட்டிங். சாமி கும்பிட்டுக்கிட்டிருந்தப்போ, திடீர்னு என் முதுகில் ஒரு லேடி பலமா அடிச்சுட்டாங்க. 'ஏம்மா... இப்படி ஜெய்ஹிந்த் விலாஸ் குடும்பத்தினரைக் கொடுமைப்படுத்தறே'னு கண்டபடி திட்டினாங்க. அவங்ககிட்டேயிருந்து விடுபடற்துக்குள்ளே போதும் போதும்னு ஆகிடுச்சு. அசிஸ்டன்ட் கேமராமேன் ஒருவர், 'நீங்க என் ஊர் பக்கம் வந்திடாதீங்க. 'தெய்வமகள்' சீரியல் பார்த்துட்டிருந்த எங்க ஊர்க்காரர் ஒருத்தர், உங்க கேரக்டர் மேலிருந்த கோபத்தில் உலக்கையால் டி.வி-யை உடைச்சுட்டார்'னு சொன்னார். எனக்குப் பயங்கர அதிர்ச்சி. என் கேரக்டர் மக்கள் மனசுல இந்த அளவுக்கு அழுத்தமாக இடம்பிடிச்சிருக்கு. இது நடிப்புங்கிற நிதர்சனத்தோடு ரசித்த ஆடியன்ஸ் பலரும் பாராட்டியிருக்காங்க.'' 

“அண்ணியார்னு சொன்னாலே பலருக்கும் உங்க ஞாபகம்தானே வருது...” 

"அதுதான் என் நடிப்புக்கு கிடைச்ச வெற்றி. கிருஷ்ணா என்னைக் கூப்பிடும் 'அண்ணியார்' வார்த்தையை, நிறைய குடும்பங்களில் பயன்படுத்தறாங்க. ஆன் ஸ்கீரீன்லதான் நானும் கிருஷ்ணாவும் எதிரிகள். ஆஃப் ஸ்கிரீன்ல நல்ல ஃப்ரெண்ட்ஸ். என் பூர்வீகம், கர்நாடகா. 1998-ம் வருஷத்திலிருந்து நடிச்சுக்கிட்டிருக்கேன். நிறைய கன்னடப் படங்கள், கன்னட மற்றும் மலையாள சீரியல்களில் நடிச்சிருக்கேன். தமிழில் முதலில் நடிச்ச 'பாரிஜாதம்' சீரியல், கொஞ்ச நாளிலேயே டிராப். அடுத்து, ‘தெய்வமகள்’. என் 20 வருஷ ஆக்டிங் பயணத்தில் இவ்வளவு பெரிய ரீச் வேற எதிலும் கிடைக்கலை. இந்த சீரியலுக்காக தமிழக அரசின் ‘சிறந்த சின்னத்திரை வில்லி’ விருதும் கிடைச்சது.” 

“கதையின் முடிவில் நீங்க இறந்துபோகிறதுதான் தீர்வுபோல...” 

(சிரிப்பவர்) “கதைப்படி, பிரகாஷ் என்னைத் துப்பாக்கியால் சுடுவார். நான் இறந்துட்டதா நினைச்சு, ஆடியன்ஸ் சந்தோஷப்பட்டிருப்பாங்க. ஆனால், அவ்வளவு சீக்கிரம் காயத்ரிக்கு முடிவு கிடைச்சுடாது.  எப்படி உயிர் போகப்போகுது என்பதுதான் சீரியலின் ஃபைனல் ட்விஸ்ட். சீரியல் ஒளிபரப்பாகும் கடைசி நாளான நாளைக்கு அது தெரியும்னு நினைக்கிறேன்.'' 

“உங்க சீரியல் டீமை மிஸ் பண்றீங்களா?” 

"ரெண்டு நாளைக்கு முன்னாடி ஃபைனல் எபிசோடு ஷூட் நடந்துச்சு. அதில், என் போர்ஷன் இல்லை. ஆனாலும், சக டீம் மேட்ஸ் எல்லோரையும் பார்க்கும் ஆசையில் போயிருந்தேன். எல்லோருடனும் போட்டோஸ் எடுத்துக்கிட்டேன். எல்லோருமே ஃபீல் பண்ணிப் பேசினோம். நான் எப்பவும் கிருஷ்ணாவை, ப்ரோனுதான் கூப்பிடுவேன். வாணிபோஜன் என் நிஜ சிஸ்டர் மாதிரி. தவிர, எல்லா ஆர்டிஸ்ட்டும் ஃபேமிலி மெம்பர்ஸா பழகினோம். ஒவ்வொரு ஆர்டிஸ்டும் தங்கள் பெஸ்டைக் கொடுத்து நடிச்சதே, இந்த சீரியலின் வெற்றிக்குக் காரணம். இனி, நாங்க ஒரே வீட்டில் சந்திச்சு சிரிச்சுப் பேசிக்க முடியாது என நினைக்கும்போது வருத்தமா இருக்கு. ஆனா, டைம் கிடைக்கும்போதெல்லாம் எல்லோரும் மீட் பண்ணலாம்னு இருக்கோம்.'' 

"இந்த சீரியலில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகளில் நடிச்சீங்களே. அந்த அனுபவம் பற்றி..." 

"போன வருஷமே, என் கேரக்டர் இறந்துபோகிற மாதிரி வந்து, உயிர் பிழைப்பேன். அப்போ, பல நாள்கள் மலை உச்சி வெயில்லயே நடிச்சேன். உடம்பு கறுத்துப்போய் ரொம்பவே சிரமப்பட்டேன். ஓடறது, ஃபைட் பண்றது, கார் சேஸிங், கடலில் தனியாகப் படகை ஓட்டறது என எக்கச்சக்க சாகசங்கள். அதோடு, போலீஸ் மந்த்ரா என டூயல் ரோல். இதெல்லாம் புதுமையான, சவாலான அனுபவங்களா இருந்துச்சு." 

“அடுத்த புராஜெக்டுல கமிட் ஆகிட்டீங்களா?” 

“தமிழ்நாட்டு மக்கள் என்மேலே அதிக அன்பு வெச்சிருக்காங்க. அதனால், தொடர்ந்து தமிழில் நடிப்பேன். காயத்ரி கேரக்டருக்கு டஃப் கொடுக்கிற மாதிரி அதைவிட மாஸான நெகட்டிவ் ரோல் பண்ணணும்னு ஆசை. அதேநேரம், என் மேலிருக்கும் வில்லி பிம்பத்தை மறக்கடிக்கிற மாதிரி, பாசிட்டிவ் ரோலும் பண்ணணும். நிறைய புது வாய்ப்புகள் வருது. சன் டி.வி-யின் ‘நந்தினி’ சீரியலில் புதுசா என்ட்ரி கொடுக்கப்போறேன். தொடர்ந்து மக்கள் மனசுல இடம்பிடிக்கிறதுதான் என் இலக்கு” எனப் புன்னகைக்கிறார் ரேகா குமார். 

அடுத்த கட்டுரைக்கு