Published:Updated:

"ரமேஷ் திலக் ராக்கிங் பண்ணுவார்; நான் அவரைக் கல்யாணமே பண்ணிட்டேன்!" - ரமேஷ் திலக் - நவலட்சுமியின் கல்யாணக் கதை

"ரமேஷ் திலக் ராக்கிங் பண்ணுவார்; நான் அவரைக் கல்யாணமே பண்ணிட்டேன்!" - ரமேஷ் திலக் - நவலட்சுமியின் கல்யாணக் கதை

"ரமேஷ் திலக் ராக்கிங் பண்ணுவார்; நான் அவரைக் கல்யாணமே பண்ணிட்டேன்!" - ரமேஷ் திலக் - நவலட்சுமியின் கல்யாணக் கதை

"ரமேஷ் திலக் ராக்கிங் பண்ணுவார்; நான் அவரைக் கல்யாணமே பண்ணிட்டேன்!" - ரமேஷ் திலக் - நவலட்சுமியின் கல்யாணக் கதை

"ரமேஷ் திலக் ராக்கிங் பண்ணுவார்; நான் அவரைக் கல்யாணமே பண்ணிட்டேன்!" - ரமேஷ் திலக் - நவலட்சுமியின் கல்யாணக் கதை

Published:Updated:
"ரமேஷ் திலக் ராக்கிங் பண்ணுவார்; நான் அவரைக் கல்யாணமே பண்ணிட்டேன்!" - ரமேஷ் திலக் - நவலட்சுமியின் கல்யாணக் கதை

"கல்யாணம் ஆயிருச்சு. நிறைய பேர் எங்களுக்கு வாழ்த்துகள் சொல்றாங்க. ஹாப்பியா இருக்கு!" - உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார், மிஸஸ் நவலெட்சுமி ரமேஷ் திலக். 'சூது கவ்வும்', 'டிமான்டி காலனி', 'ஒருநாள் கூத்து', 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'  படங்களில் நடித்த ரமேஷ் திலக், தன் காதலியைக் கரம் பிடித்திருக்கிறார். தங்களுடைய காதல் திருமணத்தைப் பற்றி ஷேர் செய்துகொள்கிறார்கள், ரமேஷ் திலக் - நவலக்‌ஷ்மி தம்பதியினர்.  

''எட்டு வருடமா எனக்கு நவாவைத் தெரியும். ரெண்டுபேரும் ஒரே ஆபிஸ்லதான் வொர்க் பண்னோம். எங்க ரெண்டுபேர் ஃபேமிலிக்கும் நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ்னு தெரியும். நிறைய விஷயங்களை நானும் நவாவும் ஷேர் பண்ணிப்போம். ரெண்டு பேருக்குள்ளே நல்ல புரிதல் இருந்துச்சு. அவங்களுக்கு என்ன தேவைனு நான் புரிஞ்சிக்கிட்டேன். எனக்கு என்ன தேவைனு அவங்க புரிஞ்சி வெச்சிருந்தாங்க. 

"ரெண்டுபேரும் ஒரே ஆபிஸ்ல வேலை பார்த்துட்டிருந்தாலும், கண்ணால பார்த்து லவ் பண்ற வேலையெல்லாம் நாங்க பண்ணலை. ஒருநாள் எல்லோரையும் கூப்பிட்டு நானும், நவாவும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு சொன்னோம். ஆபிஸ்ல எல்லோருக்கும் செம ஹாப்பி. ஏன்னா, நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணனும்னு அவங்கதான் ரொம்ப எதிர்பார்த்தாங்க''னு சொன்ன ரமேஷ் திலக்கைத் தொடர்ந்து நவா, 

''என்கிட்ட , 'உனக்கு ரமேஷ் செட் ஆவான்னும், அவருகிட்ட நான் செட் ஆவேன்'னும் எல்லோரும் சொல்வாங்க. கடவுளும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேரணும்னுதான் நினைச்சிருக்கார். எப்.எம் வேலையில ஃபர்ஸ்ட் டைம் சேர்ந்தப்போ, என்னை ரமேஷ் நிறையவே ராக்கிங் பண்ணுவார். எனக்கு அவர் சீனியர். அப்போல்லாம் அவரைப் பார்த்தாலே பயப்படுவேன்'' எனச் சொல்ல, 

"அப்புறம் என்னங்க... ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் பொண்ணு; வேலைக்குப் புதுசா ஜாயின் பண்றாங்கனு ஆபிஸ்ல ஒரே பேச்சு. அதான், நம்ம கெத்தைக் கொஞ்சம் காட்டுனேன். இவங்ககிட்ட போய், 'நீ யார் பொண்ணா வேணாலும் இருந்துக்கோ'னு ராக்கிங் வேற!" எனக் கலாய்க்கிறார், ரமேஷ் திலக். 

"அன்னைக்கு மட்டும்தாங்க ராக்கிங்லாம் பண்ணார். அப்புறம், 'ஆல் தி பெஸ்ட் நல்லா பண்ணு'னு கை கொடுத்தார். இவர் ரொம்ப ஸ்வீட். எங்களுக்குள்ளே எப்போவும் சண்டை வரும். டாம் அண்ட் ஜெர்ரி கபுல்ஸ் நாங்க. ஆனா, ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்கமாட்டோம்!" எனக் கணவரைக் கட்டியணைத்துக்கொள்கிறார், நவலக்‌ஷ்மி.  

"இவருடைய 'சூது கவ்வும்' படம் ரிலீஸ் ஆனப்போதான் இவர்கிட்ட நல்லாப் பேச ஆரம்பிச்சேன். அதுவரைக்கும் ரமேஷ்கிட்ட அவ்வளவா பேசிக்கமாட்டேன். அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இவர் நடிச்ச 'ஆரஞ்சு மிட்டாய்' படமும் என் ஆல் டைம் ஃபேவரைட். இவர் என்னை அழ வைப்பார். ஆனா, அதைவிட அதிகமா சிரிக்க வைப்பார். இவரை சந்தோஷப்படுத்த நான் பெருசா யோசிச்சு கிஃப்ட்ஸ், பெரிய சர்பிரைஸ் கொடுப்பேன். ஆனா, இவர் சின்ன விஷயத்துல என்னை சிரிக்க வெச்சு, ரசிக்க வைப்பார். சின்னச் சின்ன நிகழ்வுகளையும் மறக்க முடியாததா பண்ணுவார், ரமேஷ். இதுவரை இவர் கொடுத்த பரிசுகளிலேயே என் பிறந்தநாளுக்காகக் கொடுத்த மோதிரம்தான் எனக்குப் பெரிய பொக்கிஷம். ஐ லவ் இட் சோ மச்!.'' என நவலக்‌ஷ்மி குதூகலிக்க,  

"நவா எனக்கு நிறைய கிஃப்ட்ஸ் கொடுத்திருக்கா, அதையெல்லாம் பார்த்து பார்த்து வாங்கி ரசிச்சுக் கொடுப்பா. கொடுமை என்னன்னா, அதுல பல கிஃப்ட்ஸை நான் தொலைச்சியிருக்கேன். சிலநேரம் நான் தொலைச்சதை அவளே திரும்பக் கொண்டுவந்து கொடுப்பா. முக்கியமா, நான் பயன்படுத்துற பொருட்களைத்தான் எனக்குப் பரிசா கொடுப்பா. என் பிறந்தநாளுக்கு நவா ஒரு பீட்ஸ் ஹவுஸ் புக் பண்ணி, எனக்கே தெரியாம என் ப்ரெண்ட்ஸ், ஃபேமிலி... எல்லாத்துக்கும்மேல விஜய்சேதுபதி அண்ணாவையும் கூட்டிவந்து, அந்த பீட்ஸ் ஹவுஸுக்குள்ளே ஒளிச்சு வெச்சு, எனக்குப் பெரிய சர்பிரைஸ் கொடுத்தா. பீட்ஸ் ஹவுஸ் கதவைத் திறந்து ஒளிஞ்சிருந்த எல்லோரும் ஒவ்வொருத்தரா வெளியே வந்தாங்க, எனக்கு செம ஷாக்!. குறிப்பா, விஜய்சேதுபதி அண்ணாவைப் பார்த்தும் ரொம்பவே ஷாக்கிங். 'எதுக்குடி அவரைக் கூப்பிட்ட... அவர் ரொம்ப பிஸியான ஆள்'னு பல்லைக் கடிச்சா, அவ 'ஈஈ'னு பல்லைக் காட்டிச் சிரிக்கிறார்..." என்கிறார், ரமேஷ்.  

"விஜய்சேதுபதி அண்ணா செம ஸ்வீட். நான் இவர் பிறந்தநாளுக்கு சர்பிரைஸ் கொடுக்கணும்னு சொன்னதுமே வந்துட்டார். ஏன் அவரைக் கூப்பிட்டேன்னா, நாங்க ரெண்டுபேரும் லவ் பண்ற விஷயம், சினிமாத்துறையில விஜய்சேதுபதி அண்ணாவுக்குத்தான் முதல்ல தெரியும். கல்யாணம் முடிஞ்சு நாங்க ஹனிமூன்கூட போகலை. ஏன்னா, மேரேஜுக்கு அடுத்தநாளே இவர் ஷூட்டிங் போயிட்டார். ஒரு மாசம் கழிச்சுதான் வெளியே எங்கேயாவது போகலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். எனக்கு ரொம்பப் பிடிச்ச பாரீஸுக்குக் கூட்டிக்கிட்டு போறேன்னு சொல்லியிருக்கார். எங்க கல்யாணத்துக்கு வந்த எல்லோரும், 'உன் அப்பா உன் கல்யாணத்தை எப்படியெல்லாம் பண்ணனும்னு ஆசைப்பட்டார் தெரியுமா?'னு சொன்னாங்க. ஆனா, என் அப்பா ஸ்தானத்தில் இருந்து கல்யாணத்துல எனக்குத் தேவையான எல்லாத்தையும் ரமேஷ் பண்ணியிருக்கார். இவர் எனக்குக் கணவரா கிடைச்சது, என் அதிர்ஷ்டம்னுதான் சொல்வேன். அதுக்காகவே, இவரை 'ஹே... லக்!'னு செல்லமா கூப்பிடுறேன்.  

எங்களோட 'சங்கீத்' நிகழ்ச்சிக்கு ரமேஷ் டான்ஸ் ஆடுனது எனக்குப் பெரிய சந்தோஷம். படத்துலகூட டான்ஸ் ஆடியிருக்கமாட்டார், ரமேஷ். எனக்காகதான் இப்படி நிறைய விஷயங்களைப் பண்ணிக்கிட்டு இருக்கார்" என நவலட்சுமி முடிக்க, "கல்யாணமே உனக்காகத்தான்மா பண்ணேன்!" எனக் கலாய்த்துத் தொடர்கிறார், ரமேஷ்.  

"எனக்கு முழு சுதந்திரம் தருவா, நவா. கமிட் ஆகுற படங்கள்ல என் கேரக்டர், கூட நடிக்கிறது யார், என் சம்பளம் என்ன... இப்படி எதையும் கேட்கமாட்டா." என ரமேஷ் பேசிக்கொண்டிருக்கும்போதே, "இவர் என்ன முடிவு எடுத்தாலும், அது சரியாதான் இருக்கும்" என்கிறார், நவலக்‌ஷ்மி.

"போதும்டீ... புல்லரிக்குது..." என ரமேஷ் மீண்டும் கலாய் எபிசோடை ஆரம்பிக்க, அங்கிருந்து விடைபெற்றோம் நாம்.