Published:Updated:

`நல்லது, கெட்டதுகளை குழந்தைகளுக்கு எடுத்து கூறுங்கள்' - நடிகை நிவேதா பெத்துராஜ்!

`நல்லது, கெட்டதுகளை குழந்தைகளுக்கு எடுத்து கூறுங்கள்' -  நடிகை நிவேதா பெத்துராஜ்!
`நல்லது, கெட்டதுகளை குழந்தைகளுக்கு எடுத்து கூறுங்கள்' - நடிகை நிவேதா பெத்துராஜ்!

காஷ்மீர் சிறுமி மிருகத்தனமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் நாடு முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக, குற்றவாளிகளை தண்டிப்பது முதல் பெண்கள் முதல் குழந்தைகள் பாதுகாப்பு வரை பலரும் பேசி வருகின்றனர்.

காஷ்மீர் சிறுமி மிருகத்தனமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் நாடு முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக, குற்றவாளிகளை தண்டிப்பது முதல் பெண்கள் முதல் குழந்தைகள் பாதுகாப்பு வரை பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில், கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுயிருக்கிறார்.

அதில், அவர் " நாட்டில் நிறையா பிரச்னை நடந்து வருகிறது. அதில் சில பிரச்னைகளை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதில் முக்கியமானது பெண்கள் பாதுகாப்பு. ஆண்கள், பெண்கள் என அனைவருமே சிறு வயதில் பாலியல் சீற்றங்களுக்கு ஆளாகியிருப்போம். சிறு வயதில் நானும் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு ஆளானேன். இந்த மாதிரியான சீண்டல்கல் அக்கம்பக்கத்தினர், உறவினர் என நமக்கு நன்கு தெரிந்தவர்களால் நடக்காது. சிறு வயது முதலே குழந்தைகளுக்கு இதை விளக்குங்கள் குறிப்பாக, யார் எப்படி பேசுனா தப்பு, யார் எங்கே தொட்டா தப்பு. எது நல்லது கெட்டது என எடுத்து கூறுங்கள். பள்ளி, டியூஷன், பக்கத்து வீடுகளில் அவர்களுக்கு என்ன நடக்குது என்பது தெரியாது. தயவு செய்து பெற்றோர்கள் இதுகுறித்து அவர்களுக்கு சொல்ல ஆரம்பியுங்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் "ஆண்கள் தங்கள் தெருவிலிருக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" எனவும் பதிவிட்டுள்ளார். 

 

Vid 1

A post shared by N (@nivethapethuraj) on

 

If not from 2-3 years.. atleast start from 4 years.. vid 2

A post shared by N (@nivethapethuraj) on

 

Vid 3.. thanks all

A post shared by N (@nivethapethuraj) on

அடுத்த கட்டுரைக்கு