Published:Updated:

"விஜய் தேவரக்கொண்டா ட்விட்ல எதுவும் தப்பில்லையே!" - கீர்த்தி சுரேஷ்

விஜய் 62, சண்டைக் கோழி 2, சாமி 2 படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் அவர் நடித்து வெளிவரவுள்ள 'நடிகையர் திலகம்' படத்தைப் பற்றி கீர்த்தி சுரேஷ் பேட்டி

"விஜய் தேவரக்கொண்டா ட்விட்ல எதுவும் தப்பில்லையே!" - கீர்த்தி சுரேஷ்
"விஜய் தேவரக்கொண்டா ட்விட்ல எதுவும் தப்பில்லையே!" - கீர்த்தி சுரேஷ்

"ஒரு பயோபிக் படத்தில் நடிப்பது எளிதான காரியம் இல்ல. இந்தப் படம் பண்ணும்போதுதான் அது தெரிஞ்சது. எனக்கு இதுக்கு பிறகு இந்தமாதிரி ஒரு கதாப்பாத்திரம் அமையுமான்னு தெரில. ஒருத்தரோட வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறது இதுவே  கடைசியாக் கூட இருக்கலாம்." என ஒரு பெரிய விஷயத்தை சாதித்த புன்னகையுடன் பேச ஆரம்பித்தார் கீர்த்தி சுரேஷ்.  

ரிலீசாக ரெடியாக இருக்கும்  'நடிகையர் திலகம்' படத்தில் நடிகை சாவித்ரியின் கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷிடம் அந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்த  அனுபவம் பற்றியும். முதன்முறையாக  ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடிப்பது பற்றியும் பேசியதிலிருந்து,

சாவித்ரி கதாப்பாதிரத்துல நடிக்குறது எவ்வளவு சவாலா இருந்துச்சு? 

"சாவித்ரி அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்க நிறையா மெனக்கிட வேண்டியதா  இருந்தச்சு. அவங்கள நம்ம படங்கள்ல பாத்திருக்கோம். அந்தப் படங்கள்ல அவங்க எப்படி நடிச்சிருக்காங்கனு மட்டும்தான் தெரியும். ஆனா, பிஹைண்டு தி ஸ்கிரீன் சாவித்ரியும் ஒரு சராசரி பெண்ணா வாழ்ந்திருக்காங்க. அவங்க தன் கணவரோடு, தன் குழந்தைகளோடு அவங்க எப்படி இருந்தாங்கன்னு நாம பார்த்ததில்ல. அந்த பெர்சனல் வாழ்க்கையை பாக்குறதுக்கும், கேக்குறதுக்கும் நமக்கு எந்த விதமான ஆவணமும் இல்லை. அந்தமாதிரி அவங்க சம்பந்தப்பட்டவங்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு. அவங்க எப்படி ஒவ்வொரு விஷயத்தையும் செஞ்சிருப்பாங்கன்னு கற்பனை பண்ணி ஒண்ண உருவாக்குறது பெரிய சவாலாவே இருந்துச்சு. 

இந்தக் கேரக்டருக்காக என்னென்ன மாதிரியான விஷயங்கள் ஸ்பெஷலா செஞ்சீங்க? 

" சாவித்ரி எப்படி அழுவாங்க, சிரிப்பாங்க அந்தமாதிரி விஷயங்களுக்காக நான் அவங்க நடிச்ச  நிறைய காட்சிகள பார்க்க வேண்டியதாக இருந்துச்சு. 'மாயாபஜார்' படம் இந்த படத்துல பெரிய போர்ஷனா இருந்தனால அந்த படத்தை மட்டும் திரும்ப திரும்ப படத்தை பார்க்க வேண்டியதா இருந்தது. நவராத்திரி, பாசமலர்  படங்களையும் பார்த்தேன். அவங்க பேசிக்கா ஒரு தெலுங்கு நடிகை அதனால தெலுங்கு எப்படி பேசுறாங்கனு கவனிக்க 'மூக மனசுலு',சில ரேடியோ இன்டர்வியூ எல்லாம் கேட்டேன்."

இந்த படத்தோட டைரக்டர் நாக் அஷ்வின் சாவித்ரி தொடர்பான விஷயங்களை நிறையா சேகரிச்சு வச்சிருந்தாரு. அவர்க்கிட்ட நிறையாக் கேட்டு தெரிஞ்சிகிட்டேன். இந்தப் படத்தோட ஒளிப்பதிவை ஸ்பயின் நாட்டுக்காரர் டேனி சாலோ பண்ணியிருக்காரு. சாவித்ரி ஆரம்பத்துல மெலிஞ்சு இருந்தாங்க அப்புறம் குண்டா ஆனாங்க.  இறுதி நாட்கள்ல மறுபடியும் மெலிஞ்சாங்க.இப்படி ஒவ்வொரு தோற்றத்தையும் சரிவர காட்ட ஒவ்வொரு நாளும் 2 மணி நேரமாகும். இது எல்லாம் எனக்கு உடைகளும், ஒளிப்பதிவும் பெரிய உறுதுணையாய் இருந்துச்சு. 

ஒரு நடிகையா சாவித்ரிக்கும் உங்களுக்கும் ஏதாச்சும் ஒத்துமைய உணர்ந்தீங்களா?
சாவித்ரி கிரிக்கெட் விளையாடுவாங்க, கார்னா பிடிக்கும், குழந்தைகள்ட்ட பேசும் விதம்னு பல விஷயங்கள அவங்க மகள் விஜயசாமுண்டேஸ்வரி எனக்கு எழுதி அனுப்புனாங்க. அதுல கிரிக்கெட் விளையாட்றது கார்னு எனக்கு சாவித்ரியோட பல விஷயங்கள் ஒத்துப்போச்சு.  

விஜயதேவரக்கொண்டா சாவித்ரியப் பத்தி  போஸ்ட் செஞ்ச ட்வீட் பாத்தீங்களா?
அதப்பத்தி படிச்சேன். அவரு சொன்ன வார்த்தைல அர்த்தத்துல எனக்கு ஏதும் தவறா தெரியல. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஒரு லெஜெண்டு நடிகையை இன்னைக்கு டிரெண்ட்ல எப்படி வர்ணிக்கணும்னு ஆசைப்பட்டுதான் போட்டிருக்காரு விஜய்.   


தெலுங்கு படங்களில்  நடிகைகளுக்கு அதிக சம்பளமாமே அதனாலதான் அங்கேயே கவனம் செலுத்துகிறீர்களா?
அப்படிலாம்  இல்லை, இரண்டு மொழியிலும் ஒரே மாதிரிதான் கவனம் செலுத்தி வர்றேன். உண்மையா சொல்லும்னா நான் விஜய் 62, சாமி 2, சண்டக்கோழி 2 தமிழ் படங்கள் மட்டும்தான் இப்போ நடிச்சிட்டுருக்கேன்.
 

நாட்டில் பெண்கள், குழந்தைகள் எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி?
தினந்தினம் இந்தமாதிரி விஷயங்கள் குறித்து பேசுறப்ப பாரமா இருக்கு, வருத்தமா இருக்கு. காலம் மாறனும். இதை செய்யுற ஆட்களுக்கு நாம நினைக்குறமாதிரி கடுமையான  தண்டனையை அரசாங்கம் கொடுக்கணும்.

கிரிக்கெட் விளையாடிருக்கீங்களா? ஐ.பி.எல் பாக்குறதுண்டா... உங்க ஃபேவரைட் யாரு? யார் ஜெயிப்பாங்கனு நினைக்கிறீங்க?
 காலேஜ்ல கிரிக்கெட் விளையா டிருக்கேன். இப்போ ஐபில் பார்த்துட்டிருக்கேன்.  யார் ஜெயிப்பாங்கனு தெரியல பட் நான் CSK ஃபேன்தான். 

சாவித்ரி படங்கள் இயக்குனாங்க, ஒரு நடிகர கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அந்தமாதிரி ஆசைகள் ஏதும் இருக்கா?
ரெண்டுக்குமே பதில் 'நோ' தான். இப்பத்தான் நடிக்கவே ஆரம்பிச்சிருக்கேன்"னு  

அந்த சின்ன சிரிப்போடு நழுவி சென்றார் கீர்த்தி சுரேஷ்.