Published:Updated:

``கே.பாலச்சந்தர் கேட்டிருந்தால் நிச்சயம் நடித்திருப்பேன்!" - பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர்
News
பாரதி பாஸ்கர் ( விகடன் )

பட்டிமன்றப் பேச்சாளராக, தனியார் வங்கி மூத்த துணைத் தலைவராக இயங்கிவருபவர், பாரதி பாஸ்கர். தன் பர்சனல் உலகம் பகிர்கிறார்.

ட்டிமன்றப் பேச்சாளராக, தனியார் வங்கி மூத்த துணைத் தலைவராக இயங்கிவருபவர், பாரதி பாஸ்கர். தன் பர்சனல் உலகம் பகிர்கிறார்.

``திருமணத்துக்கு முன்பு வரை, நான் டீ போட்டாலே ஆச்சர்யம்தான். திருமணத்துக்குப் பிறகு, வீட்டில் பணியாளர் வராத சிக்கலான நேரத்தில் சமைக்கக் கற்றுக்கொண்டேன். இப்போது நன்றாகச் சமையல் செய்வேன்; வீட்டு வேலைகளைச் செய்வேன். ஓட்டுநர் வராதபோது நானே கார் ஓட்டிச் செல்வேன். சிக்கல்களின்போது நமக்குக் கோபம் வருவது இயல்பு. ஆனால், வெற்றுக் கோபம் பயன் தராது. சிந்தித்து ஆக்கபூர்வமாக முடிவெடுக்க வேண்டும். என் இளமைப் பருவத்தில் வீட்டில் டி.வி இல்லை. பெண்களை உயர்வாகச் சித்திரித்து வெளியாகும் கே.பாலசந்தர் உள்பட, சிலரின் சினிமாக்களை மட்டுமே பார்ப்பதற்கு பெற்றோர் அனுமதிப்பார்கள்.

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எனவே, சினிமா மீதும் பெரிய ஈர்ப்பு வரவில்லை. பட்டிமன்ற உலகில் அடையாளம் பெற்றதும், எனக்கும் சினிமா வாய்ப்புகள் வந்தன. நடிப்பில் ஆர்வமில்லாததால் மறுத்துவிட்டேன். ஒருவேளை கே.பாலசந்தர் சார் என்னை நடிக்கக் கேட்டிருந்தால், நிச்சயம் நடித்திருப்பேன். இனி நடிக்க வாய்ப்பே இல்லை. `அடக்கமுடியாத குதிரை ஒன்று, ஒரு போர் வீரனுக்கு இருக்கமுடியுமோ?' என்று ஒரு நிகழ்ச்சியில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் சொல்லியதை, எனக்குள் அடிக்கடி சொல்லிக்கொள்வேன். `என்னால் முடியும்' என்று பேச்சாளர், வங்கி ஊழியர், குடும்பத் தலைவி என மூன்று பொறுப்புகளிலும் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருக்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், பாரதி பாஸ்கர்

படம்: சி.ரவிக்குமார்