பிரீமியம் ஸ்டோரி

twitter.com/thirumarant:

சென்ற `பிக் பாஸ்’ போட்டியாளர்கள் கமலுக்குக் கொடுத்த அளவுக்கு மரியாதையை, இந்த சீஸன் போட்டியாளர்கள் கொடுக்கலையோன்னு தோணுது!

facebook.com/DSGauthaman:


டாய்லெட்டை ரெஸ்ட் ரூம்னு சொல்றது ஸ்டார் ஹோட்டலைப் பொறுத்தவரை சரியாத்தான் இருக்கு... கழுத, அங்கயே படுத்துத் தூங்கலாம்போல!

facebook.com/Khadar.FT:

`காச  தண்ணி மாதிரி செலவுபண்ணாதே’ன்னு சொன்ன காலம் போயி, `தண்ணிய காசு மாதிரி செலவுபண்ணு’ன்னு சொல்ற காலத்துக்கு வந்துட்டோம்.

வலைபாயுதே

twitter.com/indhiratweetz:

உன்னைப் பார்க்கக் கிளம்புவதற்கும், நீ பார்ப்பதற்காகக் கிளம்புவதற்குமான கால இடைவெளிகள் சுவாரஸ்யங்களின் மிதவைக் குவியல்கள்.

twitter.com/mymindvoice:

வீட்டுல பஞ்சாயத்து பெருசாகும்போது செருப்ப மாட்டிக்கிட்டு வெளியே கிளம்பிப்போயிட முடியற வரமெல்லாம் ஆண்களுக்கு மட்டுமேயான ஆசீர்வாதம்... #பொறாமைகள்

twitter.com/SaranyaaaRaj:

`நன்றிகெட்ட உலகம்’ என்று விமர்சிக்கும் தகுதி, வேற்றுக்கிரகவாசிகளுக்கு மட்டுமே இருக்கிறது!

twitter.com/EraManimaaran:

நிர்வாகத்தில் தமிழகம் இரண்டாவது இடமாம்... இப்ப மற்ற மாநிலங்கள் எந்த நிலைமையில் இருக்கும்னு நல்லா தெரியுது.

வலைபாயுதே

facebook.com/sharewithsalman:

கட்டடம் இடிஞ்சது சென்னையில... கடலூர்க்காரன், பெங்களூர்க்காரன், உசிலம்பட்டிக்காரன் எல்லாம் safe mark பண்ணிவெச்சிருக்கான். ஏதாச்சும் புதுசா காட்டுனா அமுக்கிடுறது.

twitter.com/HAJAMYDEENNKS:

எல்லாரும் குழந்தை வளர்க்கலாம்... ஒருசிலர்தான் குழந்தையாக வளர்க்கிறார்கள்!

twitter.com/Kozhiyaar:

அவனவன் புதுப்புது டெக்னிக்ல நூறு கோடி... இருநூறு கோடினு ஏமாத்திட்டி ருக்கான். இங்க ஒருத்தன் வந்து `ஆடி மாசம் கூழ் ஊத்தப்போறேன்’னு பழைய டெக்னிக்ல காசு கேட்டுட்டிருக்கான்!

facebook.com/RedManoRed


மிஸ்டர் கடைக்காரா!

எதை வாங்கினாலும் சில்லறைக்குப் பதிலாக ஹால்ஸ் மிட்டாய் தருகிறாயே... ஹால்ஸ் வாங்கிவிட்டு சில்லறை கேட்டால் என்ன தருவாய்?

twitter.com/ShivaP_Offl:

உண்மை தெரிந்த பிறகு கேட்கப்படும் அத்தனை பொய்களும் சுவாரஸ்யமாக இருக்கும்!

வலைபாயுதே

twitter.com/thoatta:

பாண்டிராஜ்: கார்த்தி, உங்களுக்கு
5 அத்தை, 2 முறைப்பொண்ணுங்க.
ஹரி: கார்த்தி, உங்களுக்கு 5 அத்தை
10 முறைப்பொண்ணுங்க.
சுந்தர் சி : கார்த்தி, முறைப்பொண்ணுங்கள விடுங்க, உங்களுக்கு மொத்தம்
5 அத்தைங்க!

twitter.com/kathir_twits:

கல்யாணத்துக்கு கோட் போட்டுப் போறதுக்கு முன்னாடி, அங்கே வரும் கேட்டரிங் சர்வீஸ் பசங்க எந்த கலர் கோட் போட்டு வர்றாங்கன்னு விசாரிச்சுட்டுப் போறது ரொம்ப நல்லது!

 twitter.com/Kozhiyaar:

இதழ் முத்தங்களைவிட அதிக காதலை உணரவைப்பவை தலைகோதல்கள்!

twitter.com/BlackLightOfl:

ஸ்மார்ட்போனைப் பார்த்து சந்தோஷப்படுற ஒரே தாய், ஸ்மார்ட்போனைக் கண்டு பிடித்தவரின் தாயாகத்தான் இருக்கும்!

twitter.com/thoatta:

தங்கமகன் (1983) – 125 Days
உழவன் மகன் (1987) – 150 Days
தேவர்மகன் (1992) – 175 Days
பிதாமகன் (2003) – 125 days
நான் ஏழைத் தாயின் மகன் (2014)
– Still running successfully :-)

வலைபாயுதே

facebook.com/ Vinayaga Murugan

நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது ஜெண்டில்மேன் திரைப்படம் வந்தது. பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டுப் படத்துக்குப் போனால், அதில் அர்ஜுனைப் பார்த்துத் திகைப்பாக இருந்தது. அர்ஜுன் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனாக நடித்திருந்தார். ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து அவர் நடந்து வந்த காட்சியைப் பார்த்து லேசாக நெஞ்சுவலியே வந்தது. இரண்டாவது அட்டாக் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து. அர்ஜுனை விடுங்க... பொன்னம்பலம் எல்லாம் ஸ்கூல் யூனிபார்மில் வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் கையில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்று பாடினால்? இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?

twitter.com/i_akaran:

ஒரு ஆட்டோவில் எழுதியிருந்த அற்புத வரிகள்:
 `மரண வாயிலில் நின்றால்கூட எதிரி முன் அழாதே...
அவனுக்குத் தேவை உன் மரணம் அல்ல; உன் அழுகைதான்!’

twitter.com/kumarfaculty:

`வாயில நல்லா வருது, பேசாம போயிரு’ என்பது, கெட்ட வார்த்தையின் டீஸர்...!

வலைபாயுதே

facebook.com/ gazaliththuvam

மோடி பிரதமரானதும் நாட்டை கலர்ஃபுல்லா ஆக்குவார்னு பார்த்தால் நோட்டை கலர்ஃபுல்லா ஆக்கிட்டு இருக்காரு.

facebook.com/ Vinayaga Murugan

இந்த உலகமே மிகப்பெரிய வாடகை வீடு தான். நாம் எல்லாருமே அதில் வாடகைபாக்கி வைத்துள்ளவர்கள்தான்.
(ஆன்மிகப் பரிதாபங்கள்)

twitter.com/kathir_twits:


ராங் காலில் காதல் திருமணம் செய்த கடைசித் தலைமுறை நாமே!

twitter.com/mujib989898:


சிலரின் அறிவுரைகள் எகத்தாளமிக்கவை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு