பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ் பிரேக்

மதன் கார்க்கி

‘2.0’, ராஜமெளலி இயக்கவிருக்கும் படம், ஒரு கொரியன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும் மதன் கார்க்கி, இப்போது வசனகர்த்தாவாகவும் பிஸி. ‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற ‘சிவ சிவாய போற்றியே’ பாடலின் தமிழ் வெர்ஷனைக் கேட்டு ராஜமெளலி தன்னைப் பாராட்டியதை மறக்க முடியாத பாராட்டாகக் குறிப்பிடுகிறார். மதன் கார்க்கிக்கு சமையல் என்றால் கொள்ளைப் பிரியம். இரண்டு ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் சமையல் கலைஞராக வேலை பார்த்த இவர், வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, மற்ற நாடுகளின் ஸ்பெஷல் உணவுகளை சமைத்துப் பரிமாறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

பிட்ஸ் பிரேக்

பா.விஜய்

பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் எனப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார், பா.விஜய். ‘ஆரூத்ரா’ படத்தை இயக்கி, நடித்துக்கொண்டிருக்கும் இவர், மேலும் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். கிடைக்கும் இடைவேளையில் வரலாற்றுக் கதை ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும் விஜய், அதையும் தானே நடித்து, இயக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

பிட்ஸ் பிரேக்

கு.உமாதேவி

இயக்குநர் பா.இரஞ்சித் படங்களின் மூலம் பரவலாக அறியப்பட்ட பாடலாசிரியர் கு.உமாதேவி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். “திருவண்ணாமலை மாவட்டம் அத்திப்பாக்கம் எங்க ஊர். அம்மாவும் அப்பாவும் நாடகக் கலைஞர்கள். பாடல்மீதான ஆர்வம் அம்மா மூலமா வந்தது. எங்க அம்மா நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவாங்க. அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் பழைய புராணக் கதைகள் அனைத்தும் அத்துப்படி. நானும் சின்ன வயசுல கூத்து ஆடியிருக்கேன்!” என்கிறார் கு.உமாதேவி.

பிட்ஸ் பிரேக்

கபிலன்

பச்சையப்பா கல்லூரியில் படிக்கும்போது, ‘சென்னை நகர சேரிப் பாட்டுகள் - ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர், அந்த ஆய்வில் இருந்தே ‘மெட்ராஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘எங்க ஊரு மெட்ராஸு’ பாடலை எழுதினாராம், கபிலன்.  “பாண்டிச்சேரியில பிறந்து வளர்ந்தேன். பாஸ்போர்ட் அலுவலகத்துல ஆறு வருடம் வேலை. ‘நரசிம்மா’ படத்தின் இயக்குநர் திருப்பதி சாமி சார் என் நண்பர். ஒருநாள் என்னை பாஸ்போர்ட் ஆபீஸ்ல பார்த்து, ‘கல்லூரியில பரபரப்பா கவிதை எழுதிக்கிட்டிருந்த உனக்கு, இங்கே என்ன வேலைனு பாடல் எழுதக் கூட்டிட்டு வந்துட்டார்” என முதல் வாய்ப்பை நினைவுகூர்கிறார், கபிலன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு