Published:Updated:

`நான் ஏன் கொலையாளி ஆனேன்?’- இன்ஸ்டாவில் கஜோல் விளக்கம்!

`நான் ஏன் கொலையாளி ஆனேன்?’- இன்ஸ்டாவில் கஜோல் விளக்கம்!
`நான் ஏன் கொலையாளி ஆனேன்?’- இன்ஸ்டாவில் கஜோல் விளக்கம்!

`மின்சார கனவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர்  நடிகை கஜோல். இந்தப் படத்தில் பிரபுதேவா, நாசர், அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கியிருந்தார் ராஜீவ்மேனன். இப்படம் 1997 ஆம் ஆண்டில் கோலிவுட்டில் வெளியாகி, ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கஜோல். பைக்கில் அமர்ந்து புன்னகையுடன் போஸ் கொடுத்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.  

பாலிவுட்டில் 1997 ஆம் ஆண்டு வெளியான `குப்த்’ (Gupt) படத்தின் புகைப்படம் ஒன்றை போஸட் செய்து, அதன் கீழே, `நான் ஏன் கொலையாளியாக ஆனேன் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று பதிவிட்டுள்ளார். ஹேஷ்டேக்காக நோ காபி மன்டே மார்னிங் மூட் ஆகியவற்றை இணைத்துள்ளார். இந்தப் படத்தின் அவர் கோபத்தோடு ஒரு மரத்துக்குப் பின்னால் நின்றவாறு போஸ் கொடுத்துள்ளார். இது தவிர, மேலும் சில புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.

அண்மையில் கஜோல் ‘ஹெலிகாப்டர் ஈலா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் ரிதி சென் மற்றும் நேஹா துபியா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் அண்மையில்தான் வெளியானது. இந்தப் படத்திற்குப் பிறகு கஜோல் நடிக்கும் படம் குறித்த அறிவிப்புகள் எதுவும், இன்னும் வெளியாகவில்லை. 

இன்ஸ்டாகிராமில் கஜோலை 7.2 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.