Published:Updated:

பாபி சிம்ஹாவின் 'அக்னி தேவ்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது!

பாபி சிம்ஹாவின்  'அக்னி தேவ்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது!
பாபி சிம்ஹாவின் 'அக்னி தேவ்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது!

மிழ் சினிமாவில் 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பாபி சிம்ஹா. இந்தப் படத்துக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். இதன் தொடர்ச்சியாக 'மசாலா படம்', 'உறுமீன்' ,`திருட்டுப் பயலே 2', 'சாமி ஸ்கொயர்' உள்ளிட்டப் படங்களில் நடித்தார். தற்போது, `அக்னி தேவ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும், சதீஷ் முக்கிய பாத்திரம் ஒன்றிலும், மதுபாலா வில்லி வேடத்திலும் நடித்துள்ளனர். 

'சென்னையில் ஒரு நாள்' படத்தை இயக்கிய ஜான்பால் ராஜன் மற்றும் சாம் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து படத்தை இயக்கியுள்ளனர். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலை மையமாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சியாண்டோ ஸ்டூடியோ தயாரித்துள்ளது. `அக்னி தேவ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் வெளியிட்டு இருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. இதனைத் தொடர்ந்து படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது!