Published:Updated:

குழந்தைகளைப் பிச்சையெடுக்க வைத்தால் கடும் தண்டனை வழங்க வேண்டும்! - ரஜினிகாந்த்!

குழந்தைகளைப் பிச்சையெடுக்க வைத்தால் கடும் தண்டனை வழங்க வேண்டும்! - ரஜினிகாந்த்!
குழந்தைகளைப் பிச்சையெடுக்க வைத்தால் கடும் தண்டனை வழங்க வேண்டும்! - ரஜினிகாந்த்!

சென்னையில் தயா பவுண்டேஷன் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு,  பேசினார். ``குழந்தைகள் மீது பிரியம் உள்ளவர் லதா. அவர்களுக்கு நிம்மதியாக இருக்க வேண்டியே இந்தச் சேவையை துவங்கியிருக்கிறார். நம்முடைய நாட்டின் எதிர்காலம் குழந்தைகள்தான். அவர்கள், பூமியில் நடமாடும் பூக்கள். மேலைநாடுகளில் குழந்தைகளுக்காக அதிக நிதியைச் செலவிடுகின்றனர். ஆனால், இங்கே குழந்தைகள் நலனில் மத்திய அரசும் கவனிக்கவில்லை, மாநில அரசும் கவனிக்கவில்லை.

சாலையோரங்களில் பிச்சையெடுக்கும் குழந்தைகளைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, யார் இவ்வாறு அவர்களைப் பிச்சை எடுக்கச் செய்கிறார்கள் என்று விசாரணை நடத்துவதில்லை. குழந்தைகளைக் கடத்தி பிச்சையெடுக்க வைப்பது கொலைசெய்வதை விடப் பெரிய குற்றமாகும். அப்படிச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா, சௌந்தர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  முன்னதாக, கஜா புயலால் உயிரிழந்தோருக்கு அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.