தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனின் திருமதி. அரசு அதிகாரியின் மனைவி என்பதைத் தாண்டி, சமையல்கலை நிபுணர், சின்னத்திரைப் பிரபலம், சமூகசேவகர் என கிருத்திகா ராதாகிருஷ்ணனின் அடையாளங்கள் சுவாரஸ்யமானவை... பலரும் அறியாதவை.

``மருத்துவர்கள் நிறைஞ்ச குடும்பம். அதனால ஆரோக்கியமான சாப்பாடுங்கிறது சின்ன வயசுலேயிருந்தே எங்க லைஃப் ஸ்டைல்ல முக்கியமான விஷயமா இருந்திருக்கு. அந்த வகையில சமையல் ஆர்வமும் தானா வந்தது. மதுரையில எம்.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி முடிச்சேன். படிப்பை முடிச்சதும் கல்யாணமாகிடுச்சு.

சமையல் கலைப் புத்தகம் எழுதணும்கிற ரொம்ப நாள் ஆசையை ஊக்கப்படுத்தி, எழுத வெச்சவர் என் கணவர். 2000-த்துல `இன் டு தி வேர்ல்டு ஆஃப் எக்ஸ்பெர்ட் குக்கிங்' என்ற பெயர்ல முதல் புத்தகத்தை வெளியிட்டோம். சன் நியூஸ் சேனலில் ஏவி.எம் புரொடெக்ஷன்ஸின் `மங்கையர் சாய்ஸ்' நிகழ்ச்சியில பங்கேற்கிற வாய்ப்பு கிடைச்சது. அதன்மூலமா என் பெயர் பிரபலமானது.

கணவருக்கு அடிக்கடி டிரான்ஸ்ஃபர் ஆகும். எந்த ஊருக்குப் போனாலும் சமையல் கலை நிகழ்ச்சியை மட்டும் மிஸ் பண்ணதேயில்லை. `கலெக்டர் மனைவிங்கிற அடையாளம் மட்டும் போதுமா? அதுக்காக நானும் ஏதாவது செய்ய வேண்டாமா?'னு யோசிச்சேன். ஸ்கூல், காலேஜ் நாள்கள்லயே சோஷியல் வொர்க் நிறைய பண்ணுவேன். கல்யாணத்துக்குப் பிறகு அந்த பணிகள்ல என்னை இன்னும் தீவிரமா ஈடுபடுத்திக்கிட்டேன்.

ஒவ்வோர் ஊர்லயும் `கில்டு ஆஃப் சர்வீஸ்' அமைப்பு இருக்கும். அதுல கலெக்டர்களின் மனைவிகள் பிரெசிடென்ட்டா இருப்பாங்க. சமூகசேவைகள்ல என்னை ஈடுபடுத்திக்க அது நல்ல வாய்ப்பா அமைஞ்சது.

சேலத்துல பெண் சிசுக்கொலை பிரச்னை பற்றிய விழிப்பு உணர்வுக்காக, பல கிராமங்களுக்குப் போய்ப் பேசியிருக்கேன். சுயஉதவிக் குழுக்கள்ல உள்ள பெண்களுக்கு அவங்களுடைய தயாரிப்புகளை எப்படி மார்க்கெட் பண்ணலாம்னு ஆலோசனைகள் கொடுத்திருக்கேன். இயற்கைப் பேரழிவு நேரங்கள்ல உடைமைகளை இழந்தவங்களுக்கு அவங்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்யும் விஷயங்களையும் செய்திருக்கேன். மக்களைச் சந்திக்கிறதும் அவங்க பிரச்னை களைக் கேட்கிறதும் அவங்களுக்கான ஆலோசனைகளைச் சொல்றதும் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். சந்திச்ச ஒவ்வொரு மனிதர்கிட்டயிருந்தும் நான் ஏதோ ஒரு விஷயத்தைக் கத்துக்கிட்டேன்.

கணவருக்கு மறுபடியும் சென்னைக்கு மாற்றலாச்சு. தூர்தர்ஷன்ல பிரபலங்களையும் சாமானியர்களையும் வெச்சு ஒரு நிகழ்ச்சியும், லைவ் குக்கரி ஷோவும் பண்ணியிருக்கேன். அதே சேனல்ல நிகழ்ச்சிகள் தயாரிக்கும் வாய்ப்பு வந்த நேரம், மறுபடி டெல்லிக்கு மாற்றலாச்சு. `வாய்ப்புகள் வரும்போது இப்படி ஆகிடுச்சே'னு நான் கவலைப்பட்டபோது, `எதைப் பற்றியும் நீ கவலைப்படாதே... எந்த இடத்துல இருந்தாலும் உன் ஆர்வங்களைத் தொடர்ந்து செய்'னு எனக்கு ஊக்கம்கொடுத்து உற்சாகப்படுத்தினார் கணவர். டெல்லியில் இருந்தே சென்னை ஷூட்டிங்கை ஹேண்டில் பண்ணிட்டிருந்தேன். அதேநேரம், கலைஞர் டி.வி-யில `சுவையோ சுவை' நிகழ்ச்சியில் மைக்ரோவேவ் சமையல் பண்ற வாய்ப்பும் வந்தது. அது மிகப்பெரிய ஹிட். மைக்ரோவேவ் சூடுபடுத்த மட்டும்தான்னு நினைச்சிட்டிருந்த நேரத்துல, அதுலயே முழுச் சமையலையும் முடிக்க முடியும்னு விதவிதமான ரெசிப்பிகளோடு நான் செய்து காட்டினது பலருக்கும் பயனுள்ளதா இருந்தது.

மலேசியாவுல ஆஸ்ட்ரோ சேனலிலும் நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன். பெப்பர்ஸ் டி.வி-யிலயும் குக்கரி ஷோஸ் பண்ணியிருக்கேன். குக்கரி, ஹெல்த், டிராவல்னு பல ஏரியாக்கள்லயும் நிகழ்ச்சிகள் பண்ற அளவுக்கு ஸ்பெஷலிஸ்ட் ஆனேன்...'' - வெவ்வேறு தளங்களில் கணவருக்கு இணையாக பிஸி மோடில் இருந்தாலும், குடும்ப நிர்வாகத்திலும் நிபுணியாக விளங்குகிறார் கிருத்திகா. இவர்களின் ஒரே மகன் அரவிந்த், மூன்றாமாண்டு மருத்துவம் படிக்கிறார்.

``வீட்டுக்குக் கணவர் வரும்போது நிம்மதியான சூழலைக் கொடுக்கணும்கிறதுல ரொம்பவே கவனமா இருப்பேன். அவருக்கு இருக்கிற பெயருக்கும் அந்தஸ்துக்கும் அவர் நினைச்சிருந்தா `நீ இது எதையும் செய்ய வேண்டாம்'னு என்னைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனா, அவர் ஒருநாளும் அப்படிச் செய்ததில்லை.

வெள்ளம் மாதிரியான பேரிடர் காலங்கள்ல அவர் எங்கே இருக்கார்னே தெரியாது. டி.வி-யிலதான் நாங்களே அவர் முகத்தைப் பார்ப்போம். கும்பகோணம் தீவிபத்தின்போது ரொம்பவே தவிச்சுப்போயிட்டேன். அப்பல்லாம் தகவல்தொடர்பு வசதிகளும் குறைவு. நியூஸ்லதான் அவரைப் பார்த்து ஆறுதலடைஞ்சுப்பேன். சுனாமியின்போது மாசக்கணக்குல பேசவே முடியாமல்போன நாள்கள் எக்கச்சக்கம். இதுதான் வாழ்க்கைனு புரிஞ்சுக்கிட்டேன். அதையும் தாண்டி, சராசரி மனைவியா எனக்கும் அப்பப்ப ஏக்கம் எட்டிப்பார்க்கும். என்கூட அவரால நேரம் செலவிட முடியலையேனு மனசுக்குள்ள வருத்தப்பட்டிருக்கேன். ஆனா, வேலை குறைவான நாள்ல அவரே அதை ஈடுகட்டிடுவார். அடிக்கடி மகாபலிபுரம் போவோம். படங்களுக்கும் ஷாப்பிங் பண்ணவும் கூட்டிட்டுப் போவார். எதுவுமே இல்லைன்னாலும் ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய வாக் பண்ணுவோம்.

வீட்டுல இருந்தார்னா நானும் பையனும் செம குஷியாகிடுவோம். என் சமையல்ல அவருடைய ஃபேவரைட் பால்கோவா. குக்கிங்ல என்னைவிட அவர் எக்ஸ்பெர்ட். சாதாரண நூடுல்ஸையே மேலே மிக்ஸர், காய்கறித் துருவல் தூவி வித்தியாசமா கொடுப்பார். பிறந்த நாள், கல்யாண நாளெல்லாம் மிஸ்பண்ணவே மாட்டோம். ஒரு மாசத்துக்கு முன்பிருந்தே அவருக்கு நினைவுபடுத்திக்கிட்டே இருப்பேன். கிஃப்ட் கொடுக்கணும், வெளியில போகணும் என்பதையெல்லாம் தாண்டி, அந்த நாள்ல அவர் ஊர்ல இருக்கணும்கிறதுதான் என் ஒரே கண்டிஷன். இத்தனை வருஷத்துல அதை அவர் ஒருநாளும் மிஸ்பண்ணதில்லை.''

வார்த்தை தவறாத கணவர்... வாழ்க்கையை ரசிக்கும் மனைவி என, இது நல்லதொரு குடும்பம்!

- ஆர்.வைதேகி

- படங்கள் : பா.காளிமுத்து