Published:Updated:

கல்யாணமே வைபோகமே!

அந்தநாள் ஞாபகம்

அந்தநாள் ஞாபகம்

கல்யாணமே வைபோகமே!

அந்தநாள் ஞாபகம்

Published:Updated:
அந்தநாள் ஞாபகம்
கல்யாணமே வைபோகமே!

திருமணத்தில் மறக்க முடியாத சம்பவம்?

``எங்களுடைய திருமணத்தில் `தோள்ல தூக்கிட்டுப் போறது, மாலையை மாத்திக்கிறது, மோதிரம் தேடுறது, தேங்காய் உருட்டுறது’னு நிறைய விளையாட்டுகள் இருந்துச்சு. அதனால கல்யாணமே ரொம்பக் கலகலப்பா இருந்துச்சு. விளையாட்டு முடிஞ்சதும் அப்பா மடியில் உட்காரவெச்சு தாலி கட்டினாங்க. அது ரொம்ப எமோஷனலா இருந்தது. எங்க வீட்டு வழக்கப்படி நடக்கிற கல்யாணங்கள்ல, விளையாடுற மாதிரியோ, அப்பா மடியில உட்காரவெச்சு தாலி கட்டுற மாதிரியோ இருக்காது. இந்த மாதிரி விஷயங்களை அதுவரை நான் பார்த்ததும் கிடையாது. கணவர் வீட்டு வழக்கப்படி கல்யாணம் நடந்ததால, எனக்கு அது ரொம்பப் புதுசா இருந்துச்சு. அதுதான் எனக்கு மறக்க முடியாத சம்பவம்!”

தேவதர்ஷினி சேத்தன், நடிகை

கல்யாணமே வைபோகமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாலி கட்டும்போது எப்படி ஃபீல் பண்ணீங்க?

``18 வயசுலேயே எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. அப்போ, கல்யாணம்னா என்னன்னு தெரியாது, வாழ்க்கைன்னா என்னன்னு தெரியாது. `அப்பாடா, இனி காலேஜுக்குப் போக வேணாம். தினமும் ஒரு புடவை கட்டிக்கலாம். ஜாலியா இருக்கலாம்’னு நினைச்சுதான் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன். தாலி கட்டியப் பிறகு, என் கணவர் பாபு ரமேஷ்கூட போறது எனக்கு ஒருபக்கம் சந்தோஷமா இருந்தாலும், அம்மா அப்பாவைவிட்டுப் பிரிஞ்சு போறோம்கிறதை என்னால தாங்கிக்கவே முடியலை. பயங்கரமா அழ ஆரம்பிச்சுட்டேன். உடனே, `கல்யாணம்னா இப்படித்தான் இருக்கும்’னு சுத்தி இருந்தவங்க சமாதானப்படுத்தினாங்க. அந்த அழுகையை நினைக்கும்போது எனக்கு இப்பவும் கண்கலங்கும்.”

சுஜாதா பாபு, செய்தி வாசிப்பாளர்

கல்யாணமே வைபோகமே!

காதல் வாழ்க்கை டு திருமண வாழ்க்கை?

``காதலிக்கும்போது, அடிக்கடி சண்டை போட்டுக்குவோம். அப்போ எனக்கு செம கோபம் வரும். `என்கிட்ட பேசாதே, போ’னு ஏதாவது சொல்லிடுவேன். அப்போ நாங்க ரெண்டு பேருமே பக்குவப்படாதவங்களா இருந்தோம். இப்போ என் வார்த்தையோ, செயலோ கணவரின் மனசைக் காயப்படுத்திடக் கூடாதேன்னு நானும், எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு தெரிஞ்சு வெச்சுக்கிட்டு, சரியான நேரத்துல சர்ப்ரைஸ் தந்து என்னை எப்பவும் குஷி மூடுலயே வைச்சுக்கிற அவரும் உண்மையிலேயே `Made for each other’-தான். திருமணமாகி 13 வருஷங்கள் ஆகுது. காதல் வாழ்க்கையைவிட இந்தத் திருமண வாழ்க்கையிலதான் எங்க காதலோட அடர்த்தி கூடியிருக்கிறதா நினைக்கிறேன்.”

சுமதிஸ்ரீ பென்னி, பேச்சாளர்

கல்யாணமே வைபோகமே!

உங்களுடைய திருமணத்தில் யார் கலந்துகொண்டதைப் பெருமையாகக் கருதுகிறீர்கள்?

``என் திருமணம், அப்பா பார்த்து நடத்தி வைத்தது. வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் என் திருமணத்தில் கலந்து கொண்டார்கள். நாங்கள் மதிக்கும் கட்சித்தலைவர்கள் குடும்பமாகப் பங்குபெற்ற நிகழ்ச்சியாக அது அமைந்தது. தலைவர் கலைஞரின் தலைமையில் நடந்ததால் மிகவும் மகிழ்வாகவும் பெருமையாகவும் இருந்தது. தலைவரும் தயாளு அம்மாளும் வாழ்த்தி, தாலி எடுத்துக் கொடுத்தார்கள். பிறகு, தலைவர் பேசினார். இப்படி எத்தனை பேருக்கு, தலைவர் தலைமையில் திருமணம் நடக்கும்? எனக்கு அந்தப் பாக்கியம் கிடைத்தது!”

தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர்

கல்யாணமே வைபோகமே!

திருமணத்தில் உங்களுக்கு தரப்பட்ட மிகச்சிறந்த அறிவுரை?

என் திருமணம் கொச்சின்ல  நடந்தது. அதனால சென்னையில் இருந்து நிறைய நண்பர்களை அழைக்க முடியலை. அந்த நேரத்தில் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, `நீங்க ஆரம்பத்துல எப்படி இருக்கீங்களோ, அப்படியே கடைசிவரைக்கும் இருக்கணும். ஒருத்தரை இம்ப்ரஸ் பண்ணணும்னு இன்னொருத்தர் தன்னை மாத்திக்க வேண்டிய அவசியம் இல்லாம, நீங்க நீங்களாவே இருக்கணும்’னு சொன்னாங்க. அந்த அறிவுரையை மனசுல வெச்சிக்கிட்டுதான் திருமண வாழ்க்கையை ஆரம்பிச்சேன். இக்கட்டான சூழ்நிலையிலகூட இந்த அறிவுரையை நினைச்சாலே மனசு லேசாகிடும்.

வந்தனா சீனிவாசன், பாடகி

கல்யாணமே வைபோகமே!

திருமணத்துக்கு வந்த பரிசுகளில் மறக்க முடியாதது எது?

``10.10.2010-ல் காதல் திருமணம் செஞ்சுக்கிட்டோம். எனக்கு முடி ரொம்ப கம்மியா இருக்கும். அம்மாதான் எனக்கு ஜடை பின்னிவிடுவாங்க. காலேஜுக்குப் போனா, பசங்க எல்லாரும் என் முடியைப் பார்த்து `பிரஷ்’னு கிண்டல் பண்ணுவானுங்க. கல்யாணத்தன்னிக்கு காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் ஒரு பிரஷ்ஷை பெரிய கிஃப்டு பாக்ஸ்ல வெச்சு பரிசா தந்தாங்க. மிகப்பெரிய பல்ப்பை, பல பேர் முன்னாடி பந்தாவா வாங்கின அந்த நிகழ்வை, என் வாழ்க்கையில மறக்க முடியுமா?’’

அறந்தாங்கி நிஷா, காமெடியன்

கல்யாணமே வைபோகமே!

உங்களுடைய திருமணம், எந்தப் புள்ளியில் முடிவு செய்யப்பட்டது?

``மாதவன், எங்க மாமாவின் குடும்ப நண்பர். ஒருதடவை, அம்மாவைப் பார்ப்பதற்காக எங்க வீட்டுக்கு மாதவன் வந்திருந்தார். அம்மாவுக்கு அவரை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. லண்டனில் நான் இருந்தபோது அம்மா எனக்கு மாப்பிள்ளைப் பார்த்துட்டதா சொன்னாங்க. `உனக்கு தெரிஞ்ச பையன்தான். யாருன்னு தெரிஞ்சா வேண்டாம்னே சொல்ல மாட்டே’னு சொன்னாங்க. அப்புறம் பேச்சுவாக்குல `மாதவன்தான் மாப்பிள்ளை’ன்னு சொல்லிட்டாங்க. எனக்கு மாதவனைப் பிடித்திருந்ததால் உடனே திருமணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டேன்!”

தீபா மாதவன், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை

- ப.தினேஷ்குமார்