தன்னம்பிக்கை
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ஏழுக்கு ஏழு: அது வேற லெவல்!

ஏழுக்கு ஏழு: அது வேற லெவல்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழுக்கு ஏழு: அது வேற லெவல்!

ஏழுக்கு ஏழு: அது வேற லெவல்!

முதல் விருது வாங்கிய அனுபவம்?

சாதனா, நடிகை

“எனக்கு தேசிய விருது கிடைக் கும்னு நினைச்சுப் பார்த்ததேயில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. முதன்முறையாக அப்போதான் டெல்லிக்குப் போனேன்.

முதல் நாளே, ‘இப்படித்தான் நடக்கணும், பிரணாப் சார்கிட்ட கை மட்டும்தான் குலுக்கணும்’னு நிறைய அறிவுரையும் பயிற்சியும் கொடுத்தாங்க.

ஏழுக்கு ஏழு: அது வேற லெவல்!

சினிமாவில் இருக்கும் மிகப்பெரிய ஜாம்பவான்களைச் சந்திக்கின்ற வாய்ப்பும் கிடைச்சது. சசி சாரும் சிறந்த தயாரிப்பாளர் விருது வாங்க வந்திருந்தார்.அவரோடு சேர்ந்து எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்திருந் தோம்.

என் பெயர் அறிவிக்கப்பட்டதும் மேடைக்குப் போனேன். பிரணாப் சார், கை கொடுத்து ‘கங்ராட்ஸ்’ சொல்லி விருது தந்தார். `தங்கமீன்கள்' படத்துக்குக் கிடைச்ச மிகப்பெரிய அங்கீ காரம்னா, அது தேசிய விருதுதான்!”

யாரிடம் வாங்கிய விருதை பெருமையாகக் கருதுகிறீர்கள்?

கோவை சரளா, நடிகை

“ `முந்தானை முடிச்சு' படத்தோட 100-வது நாள் வெற்றி விழாவில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கைகளால் விருது வாங்கினேன். நான் வாங்கிய முதல் விருதும் அதுதான்.

ஏழுக்கு ஏழு: அது வேற லெவல்!

கலைஞர் ஐயா எப்பவுமே என்கிட்ட நல்லா பேசுவாரு. தனிப்பட்ட முறையில் அவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். என்னைப் பார்த்தாலே போதும், சிரிச்சுடுவாரு. அவர் கைகளால் கலைவாணர் விருது வாங்கினேன்.

ஜெயலலிதா அம்மாவிடம் தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருது வாங்கினேன். அப்போ, ‘எப்படிங்க இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா... நிறைய படம் பண்றீங்களா...’ என அக்கறையா விசாரிச்சாங்க. இப்படி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அம்மா ஆகியோர் கைகளால் வாங்கிய விருதுகளைத்தான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்.”

சமீபத்தில் நீங்கள் வாங்கிய விருது?

அர்ச்சனா, நிகழ்ச்சித் தொகுப்பாளினி

“என் வாழ்க்கையில் 18 வருடங்களாகத் தவமிருந்து, சமீபத்தில் அக்டோபர் 13 அன்றுதான் `ஜீ தமிழ்' குடும்ப விருதுகளில் முதல் விருதை வாங்கினேன். முதல் தடவையே சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளினி விருது மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளினி விருது என இரண்டு விருதுகள் கிடைத்தன.

ஏழுக்கு ஏழு: அது வேற லெவல்!

இந்த இரண்டு விருதுகளுக்கும் மேல் ஒரு விருது, என் கைகளால் பிடிக்க முடியாத விருது, நான் கட்டிப்பிடித்த ஒரு விருதுன்னா நான் சூப்பர் ஸ்டாரை எடுத்த நேர்காணலைத்தான் சொல்வேன். அந்த பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அது வேற லெவல் விருதுங்க!”

நீங்கள் வாங்கிய முதல் விருது?

சுகிதா, ஊடகவியலாளர்/நெறியாளர்

ஏழுக்கு ஏழு: அது வேற லெவல்!

“நான், கலைஞர் தொலைக்காட்சியில் பணிபுரிந்துகொண்டிருந்த நேரத்தில், ஈழப் பிரச்னை சார்ந்து வேலைசெய்தவர்கள் அனைவருக்கும் தமிழ்த் தேசிய இயக்கத்தினர் இணைந்து விருது கொடுத் தாங்க. தி.மு.க மீதான வெறுப்பையும் தாண்டி, நான் அங்கு செய்த வேலையை மட்டும் மனதில் கொண்டு எனக்கு அந்த விருதைத் தந்தார்கள். அதுதான் நான் வாங்கிய முதல் விருது. முதல் அங்கீகாரமாக இருந்தாலும்கூட, ஈழத்தின் வலியை மனதில்கொண்டு அந்த விருதை நான் பெரிதாகக் கொண்டாடவில்லை.”

நீங்கள் வாங்கிய விருதுகளை யாருக்கு சமர்ப்பிக்கிறீர்கள்?

முத்தமிழ், சமூக செயற்பாட்டாளர்

ஏழுக்கு ஏழு: அது வேற லெவல்!

“நான் இப்படி இருக்கிறதுக்கு முதல் காரணம் அம்மாதான். அவங்கதான் எல்லா  காலகட்டத்திலேயும் எனக்கு தன்னம்பிக்கை கொடுக்கறாங்க. யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாமல், என் மேல் அளவுகடந்த நம்பிக்கை வெச்சிருக்காங்க. நான் எந்த விருது வாங்கினாலும் உடனே  அம்மா கையில் கொடுத்து, திரும்ப வாங்கிக் கொள்வேன். என்னுடைய எல்லா விருதுகளையும் அம்மா வுக்கு சமர்ப்பணம் செய்றேன். டாக்டர் அம்பேத்கருக்கும் சமர்ப்பிக் கிறேன்.”

முதல் விருது கிடைத்திருக்கிறது என்றவுடன் எப்படி ரியாக்ட் செய்தீர்கள்?

ஜெயராணி, எழுத்தாளர்

ஏழுக்கு ஏழு: அது வேற லெவல்!

“ஆனந்த விகடன் இதழில் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் குறித்து 2005-ல் நான் எழுதிய ‘இளைப்பாற விரும்புகிறோம்’ கட்டுரைக்காக ‘International Federation for Journalist' அமைப்பின் விருது கிடைத்தது. ஒரு சர்வதேச விருது எனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. விருது நிகழ்ச்சி இலங்கையில் நடந்தது. அப்போதைய சூழலில் என்னால் விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை. பின்பு, எனக்கு அந்த விருதை அனுப்பிவைத்தார்கள்.”

நீங்கள் வாங்கியவற்றில் மறக்க முடியாத விருது?

பவானிதேவி, வாள்வீச்சு வீராங்கனை

“கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஐஸ்லாந்தில் நடந்த `சாட்டிலைட் உலகக் கோப்பை'யில் நான் முதன்முறையாக வாங்கிய தங்க மெடல்தான் எனக்கு மறக்க முடியாத விருது. வாள்வீச்சு என்றொரு விளையாட்டு இருக்கிறது என்பதைப் பலர் தெரிந்துகொள்வதற்கு அந்த அங்கீகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ஏழுக்கு ஏழு: அது வேற லெவல்!

தங்க மெடலோடு இந்தியா திரும்பியபோது, சென்னை விமான நிலையத்தில் நிறைய மாணவர்களும் ஊடகங்களும் பெரிய அளவில் வரவேற்பு அளித்தனர். இந்தியாவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் வாழ்த்தி யதை என்னால் மறக்கவே முடியாது. அதன்பிறகு கிரிக்கெட் வீரர் ஷேவாக், இயக்குநர்கள் சசிகுமார், சீனு ராமசாமியின் வாழ்த்துகளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தன.”

- ப.தினேஷ்குமார்