Published:Updated:

“அம்மாவுக்குத்தான் முதல் உருண்டை!”

“அம்மாவுக்குத்தான் முதல் உருண்டை!”
பிரீமியம் ஸ்டோரி
“அம்மாவுக்குத்தான் முதல் உருண்டை!”

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

“அம்மாவுக்குத்தான் முதல் உருண்டை!”

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
“அம்மாவுக்குத்தான் முதல் உருண்டை!”
பிரீமியம் ஸ்டோரி
“அம்மாவுக்குத்தான் முதல் உருண்டை!”

றைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டை சமீபத்தில் கொண்டாடியது, தமிழக அரசு. எம்.ஜி.ஆர் என்ற   பெயர் புழங்குகிற இடத்திலெல்லாம் மறக்காமல் உச்சரிக்கப்படுகிற இன்னொரு பெயர், நம்பியார். 1917-ல் எம்.ஜி.ஆர் பிறக்க, 1919-ல் பிறந்தார், எம்.என். நம்பியார். 2019 அவர் பிறந்த நூறாவது ஆண்டு. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தகித்துக்கொண்டிருக்கும் நிலையிலும், கேரளாவின் சபரிமலையில், ‘மகா குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் சில நாள்களுக்கு முன் தொடங்கின. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியிருந்த நம்பியாரின் இளைய மகன் மோகன் நம்பியாரை, சென்னை கோபாலபுரத்தில், நம்பியார் வசித்த வீட்டில் சந்தித்தேன்.   

“அம்மாவுக்குத்தான் முதல் உருண்டை!”

“நம்பியார் - ருக்மணி தம்பதியினருக்கு `சுகுமாறன், மோகன், சிநேகா’ன்னு நாங்க மொத்தம் மூணு பிள்ளைகள். பாரதிய ஜனதாவுல தேசிய அளவுல பொறுப்பு வகிச்ச சுகுமாறன் அண்ணா இப்போ இல்லை. அவரோட குடும்பம், நாங்க எல்லாம் கூட்டுக் குடும்பமாதான் கோயம்புத்தூர்ல வசிக்கிறோம். அண்ணன் பையன் என்னோடுதான் பிசினஸை கவனிச்சுக்கிட்டிருக்கார். எங்க சகோதரி சிநேகா சென்னையில செட்டிலாகி இருக்காங்க.”

“நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்து ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர், நம்பியார். அவரது பெயர் சொல்லும் படி நீங்கள் யாரும் சினிமாவில் இல்லையே?”


“‘ஷூட்டிங் முடிஞ்சா வீடு’ என்ற பாலிசி அப்பாவுடையது. அதனால, எங்களையும் கொஞ்சம் ஸ்ட்ரிக்டா வளர்த்தார்னு சொல்லலாம். அதேநேரத்தில், எம்.ஜி.சக்ரபாணி பேமிலி, சிவாஜி சார் வீட்டுக் குழந்தைகள் எல்லோருமே எங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்தான். பேட்மிட்டன் ஆடுற நேரங்கள்ல நாங்க மீட் பண்ணிக்குவோம். மத்தபடி, நடிப்பு ஏரியாவுக்குள்ள நாங்க வரல. ‘ஆக்டிங்கை விடுங்க, புரொடக்‌ஷன் சைடுலேயாச்சும் வந்திருக்கலாம்’னு இப்போவும் சிலர் சொல்றாங்க. ‘அந்த ஏரியா ரொம்ப ரிஸ்க்’னு புரிஞ்சு வெச்சுகிட்டு அப்பாவே இறங்கலையே, நாங்க எப்படி வர்றது?”

“அப்பா குறித்த நினைவுகளைச் சொல்லுங்கள்...”


“ரோல் மாடல் அப்பா. பிள்ளைங்களை அவர் கடுமையா பேசவேண்டிய சூழலை நாங்க அவருக்குக் கொடுக்கமாட்டோம். மீறி சில சமயம் அப்படிப் பேசிட்டா, கொஞ்ச நேரத்திலேயே அந்தச் சூழலை மறக்கடிக்க, ஜோக் சொல்லி எல்லோரையும் கலகலப்பாக்கிடுவார்.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அம்மாவுக்குத்தான் முதல் உருண்டை!”

எவ்ளோ பிஸியாக இருந்தாலும், ஒவ்வொரு வருடமும் மே மாதம் முழுக்க குடும்பத்துக்காக ஒதுக்கிடுவார். அந்த டைம்ல ஊட்டி மாதிரியான இடங்களுக்கு பிக்னிக் போவோம். வெஜிடேரியன் ஹோட்டல்லதான் தங்குவோம். அப்போகூட ஹோட்டல் உணவைச் சாப்பிடமாட்டார்; அம்மா சாப்பாடுதான். முதல் உருண்டையை அம்மாவுக்கு உருட்டித் தந்துட்டுதான் சாப்பிடுவார்.”

“எம்.ஜி.ஆர் குறித்து உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்?”


“அப்பா அம்மாவைப் பொண்ணு பார்க்கப் போனப்போ, கூடவே போனராம் எம்.ஜி.ஆர். கல்யாணத்துல அப்பாவுக்கு மாப்பிள்ளைத் தோழனா இருந்திருக்கார். நாங்க சின்னப் பசங்களா இருந்தப்போ அவரை ‘பொல்லாத மாமா’ன்னுதான் கூப்பிடுவோம். ஏன்னா, வீட்டுக்கு வர்றப்போ போறப்போ எல்லாம் கொஞ்சம் கண்டிப்பார்.” 

“அம்மாவுக்குத்தான் முதல் உருண்டை!”

“ ‘மகா குருசாமி’ நம்பியார் பற்றி..?”

“ராஜமாணிக்கம் பிள்ளை நாடகக் குழுவில் அப்பா இருந்தார். அந்த ராஜமாணிக்கம் பிள்ளை தொடர்புலதான் 40-களின் தொடக்கத்துல சபரிமலைக்கு முதல்முறையா போயிருக்கார். 70 வயசைத் தாண்டிய பிறகும்கூட பெரிய பாதை வழியாகவே போய் வந்திருக்கார். கடைசி ஐந்து வருடம் உடல்நிலை ஒத்துழைக்கலை. அவருக்குப் பிறகு என் அண்ணன் போயிட்டு வந்தார். இப்போ நான் போயிட்டு வர்றேன். அப்பாவைப் பின்பற்றி சபரிமலை போக ஆரம்பிச்ச சினிமா ஸ்டார்ஸ் ரஜினி, ராஜ்குமார், அமிதாப் பச்சன், ஜெமினி கணேசன், முத்துராமன், டைரக்டர் ஸ்ரீதர், ஸ்ரீகாந்த், பிரபுதேவான்னு அந்தப் பட்டியல் நீளும். கேரளாவுல வேடிக்கையா சொல்வாங்க, ‘சபரிமலையைத் தமிழ்நாட்டுல பிரபலப்படுத்தியது குருசாமிதான்’னு!”

“சபரிமலை குறித்த சமீபத்திய செய்திகள், நீதிமன்றத் தீர்ப்புகள், சர்ச்சைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தேவையில்லாத சர்ச்சைன்னுதான் இதைச் சொல்வேன்.  அப்பா மாலை போட்டு மலைக்குப் போய் வந்த நாள்கள்ல, வீட்டுல விரதம் இருந்து மாலை அணியிறப்போ முதல்ல என் அம்மாதான் அந்த மாலையைத் தொட்டு அப்பாவுக்குப் போட்டு விடுவாங்க. அதன் பிறகே அப்பா மத்தவங்களுக்கு மாலை அணிவிச்சு விடுவார். எங்க வீட்டுல நடந்தது இதுதான். ஆனா, பக்தர்களோட நம்பிக்கை எப்படி இருக்கோ, அதன்படியே போறதுலேயும் தப்பில்லைன்னு சொல்வார் அப்பா.    

“அம்மாவுக்குத்தான் முதல் உருண்டை!”

நான் இப்போ சன்னிதானம் போயிருந்தப்போ அப்பாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்வா சில விஷயங்களைச் செய்தோம். விரதம் இருப்பது குறித்தும், சபரிமலை மகிமை குறித்தும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தோம். 144 தடை உத்தரவு அமலில் இருந்தபோதும், காவல்துறையே ‘நம்பியார் சாமி’ பெயரில் நடக்கிற நிகழ்ச்சி எந்தப் பிரச்னையும் இல்லாம நடக்கட்டும்’னு ஒத்துழைப்பு தந்தது.

“எம்.ஜி.ஆர், சிவாஜி - இருவருடைய பிறந்தநாள், நினைவுநாள்களை அவர்களின் ரசிகர்கள் வருடந்தோறும் கொண்டாடிவருகின்றனர். நம்பியாருக்கு வருடா வருடம் அவரது குடும்பத்தினராவது நிகழ்ச்சிகள் நடத்தலாமே?”


“ஹீரோக்களுக்கு விழா எடுப்பாங்க; வில்லனுக்கு யார் நடத்தப்போறாங்க?! (சிரிக்கிறார்). அப்படியில்லை. அப்பா மறைந்த நவம்பர் மாதம் சபரிமலை சீஸன். அதுவே எவ்வளவு பெரிய விஷயம்! அதனால, அப்பா மறைந்த நாள்ல ஒவ்வொரு வருடமும் நாங்க பஜனைகள் நடத்திட்டு வர்றோம். இந்த வருடம் அவர் பிறந்த நூற்றாண்டு என்பதால, அதையே இன்னும் கொஞ்சம் விரிவா பண்ணலாம்னு இருக்கோம். ஆயிரம் படங்களுக்கு மேல் நடிச்சவர், அப்பா. சினிமாவில் ஒரு முன்னுதாரணமா இருந்தவர். அப்படிப்பட்டவருக்குத் திரையுலகம் சார்பாக நிகழ்ச்சிகள் நடக்கலைங்கிறது வருத்தமான விஷயம்தான். விரைவில் நடத்துவாங்கன்னு நம்புறேன்!”

அய்யனார் ராஜன் - படம்: சி.ரவிக்குமார்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism