Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

facebook.com/ ஜெ.வி. பிரவீன்குமார்

தங்கபாலு நன்றாகவே உரையாற்றினார். மொழிபெயர்ப்பு என்பது வரிக்கு வரி அப்படியே இருந்தாக வேண்டும் என்கிற அவசியமில்லை - கே.எஸ்.அழகிரி

Translated version:

அங்கே பேசியவர்களில் தங்கபாலு மட்டுமே சிறப்பாகப் பேசினார். ராகுல் பேசியதைத்தான் தங்கபாலுவும் பேச வேண்டும் என்கிற அவசியமில்லை.

facebook.com/Karthika Kumari

ஆ ஊ ன்னா மாதர் சங்கம் என்ன பண்ணுச்சுன்னு கேள்வி வேற... தப்பு பண்ணது ஆம்பளைங்கதானே, ஆண்களே தட்டிக் கேக்கலாமே ப்ரெண்ட்ச்...

வலைபாயுதே

facebook.com/gkarlmax

அம்பேத்கர் சிலை, பெரியார் சிலையை யெல்லாம் எதுக்குடா மூடுறாங்க..?

கை நீட்டிக் காசு வாங்கப்போறோம். பெரிய மனுசனுங்க பார்த்தா சங்கடப்படுவாங்கல்ல அதான்...!

facebook.com/Pon Vimala

வீடியோ வந்திருக்குன்னு தெரிஞ்சா முதல் வேலையா அதை டவுன்லோடு பண்ணாதீங்க. உங்க வீட்டுப் பெண்ணா இருந்தா இப்படி மெனக்கெட்டு லாகின் பண்ணிப் பாப்பீங்களா? தெரியாம கைபட்டு டவுன்லோடு ஆகிருச்சா? உடனே டெலிட் பண்ணுங்க. நான் இவனால பாதிக்கப்பட்டேன்னு சம்பந்தப்பட்ட பெண்களே தங்களுடைய வீடியோவை ரிலீஸ் செய்தாலும் அடுத்தவரின் அந்தரங்கத்தை நம் கேலரியில் வைத்துக் கொள்ள நமக்கு எந்த உரிமையும் இல்லை. இப்போதைக்கு அந்த வீடியோக்களைப் பகிர்வதையும் பாதுகாப்பதையும் தவிருங்கள் ப்ளீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலைபாயுதே

facebook.com/Keetru Nandhan

கமல், சீமான், சரத்குமார், தீபா...இவர்களுக்கு இடையே நடப்பதுதான் உண்மையான போட்டி. மற்றவர்கள் ஓரமாக விளையாடவும். நான்கு பேரும் நோட்டாவை வென்றுவிட்டால், இந்தியாவை நான்காகப் பிரித்து, நான்கு பேரையும் பிரதமராக்கிவிட வேண்டும்.

twitter.com/Naveen.M

காம உணர்வு என்பது பாவச்செயல் அசிங்கம் என்று கற்பிப்பதால், பெண்கள் வஞ்சிக்கப்படும்போது வெளியில் சொல்ல அஞ்சுகின்றனர். காதலும் காமமும் இயற்கையே. ஒருவனை நம்பி காரில் ஏறிச்சென்ற பெண் எந்த விதத்திலும் குற்றமற்றவளே. அவளை எக்ஸ்ப்ளாய்ட் செய்த சைக்கோநரிகள் தண்டனைக்குரியவர்களே. #Pollachi Rapists

வலைபாயுதே

twitter.com/HAJAMYDEENNKS

வாரிசுக்கு சீட் கிடைத்ததற்காக வருத்தப்படும் ஒரே தந்தை குமரி அனந்தனாகத்தான் இருப்பார்! 

twitter.com/Aruns212

‘டிவி வால்யூமைக் குறை’ என்று கோபமாகச் சொன்னால் அது அப்பா; பொறுமையாகச் சொன்னால் அது நேரலையில் வரும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

வலைபாயுதே

twitter.com/gips_twitz

பா.ஜ.க ஆட்சில சிபிஐ-னா என்னான்னு கேக்காதீங்க. அது இன்னொரு பா.ஜ.க குரூப்பு

- சைபர் ஸ்பைடர்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism