Published:Updated:

"இதுதான் எங்க சம்மர் பிளான்!" - சொல்கிறார்கள் ஜனனி, சஞ்சிதா, சமீரா, பாரா

"இதுதான் எங்க சம்மர் பிளான்!" - சொல்கிறார்கள் ஜனனி, சஞ்சிதா, சமீரா, பாரா
"இதுதான் எங்க சம்மர் பிளான்!" - சொல்கிறார்கள் ஜனனி, சஞ்சிதா, சமீரா, பாரா

"பறவைகள், விலங்குகள் தண்ணீர் குடிக்கும் ஃபீடிங் பாட்டில் வைக்கப் போறோம். உண்மையில் இந்த சம்மரில்தான் மனசுக்கு நிறைவான வேலை பண்ணப்போறோம்னு நினைச்சா ஹேப்பியா இருக்கு."

சம்மர் தொடங்கிவிட்டது... குழந்தைகளுக்கு லீவ் விட்டுவிட்டாலே எங்கே செல்லலாம் என்று ஆயிரம் பிளான் போடத் தொடங்கிவிடுவோம். சரி, செலிபிரட்டிகளின் சம்மர் பிளான் என்னவாக இருக்கும். இந்த வருஷம் சம்மருக்கு என்ன பிளான் எங்க டிரிப் போறீங்க எனச் சில செலிபிரெட்டிகளிடம் கேட்டோம். அவர்களின் பிளான் இதோ...

ஜனனி:

''சின்ன வயசிலிருந்தே சம்மர் வந்துட்டா சம்மரைக் கொண்டாட  ஏதாவது ஒரு பெரிய பிளான் இருக்கும். ஒவ்வொரு சம்மருக்கும் எங்காவது வெளிநாடுகளுக்கு அவுட்டிங் போறதுதான் என்னுடைய வழக்கம். சில சமயம் ஷூட்டிங் இருந்தால் பிளான் கொஞ்சம் மாறி வெளிநாட்டுக்குப் போறது, வெளி மாநிலங்களுக்கானதா மாறி... சின்ன ட்ரிப் போயிட்டு வந்துருவோம். ஃப்ரெண்ட்ஸ், பேமிலினு ஒவ்வொரு சம்மரிலும்கூட பயணப்படுறவங்க மாறுபடுவாங்க. சம்மருக்கு எங்க போனா க்ளைமேட் நல்லா இருக்கும், எவ்வளவு செலவாகும், யார் யார் கூட வரப்போறாங்க... பட்ஜெடுக்குள் எந்த இடங்களையெல்லாம் பார்க்கலாம்னு முன்னாடியே பிளான் பண்ணி வெச்சிருவேன். துபாய், சிங்கப்பூர், லண்டன்னு ஒவ்வொரு சம்மரிலும் நிறைய இடங்கள் பார்த்தாச்சு. கடைசியாகப் போன வருஷம் இலங்கைக்குப் போனோம். இந்த வருஷம் ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து கம்போடியா போகும் பிளான் இருக்கு. டிரஸ்ஸாம்கூட பேக் பண்ணியாச்சு. பட்ஜெட் ரெடி ஆனதும் பறந்துட வேண்டியதுதான்.''

சஞ்ஷிதா ஷெட்டி:

''சம்மரில் ஷூட்டிங் இருந்தாலும் இல்லைனாலும் ஒரு டிரிப் கண்டிப்பா இருக்கும். சம்மர் தொடங்கிருச்சுனா கொஞ்சம் கூலிங்கான ஏரியாவைப்பார்த்து செட்டில் ஆகிருவேன். சம்மர் அவுட்டிங்க்காக அந்த வருஷத்தின் தொடக்கத்திலிருந்தே பணம் சேமிக்க ஆரம்பிச்சுருவேன். சேர்ந்து இருக்கும் பணத்தைப் பொறுத்துதான் அந்த வருடத்துக்கான இடத்தைத் தேர்வு செய்வேன். என்னோட சம்மர் டிரிப்புக்கு எப்போதும் என்னோட ஃப்ரெண்ட்ஸ்தான் பெஸ்ட் பார்ட்னர்ஸ். ஃபிளைட் டிக்கெட் ஆறுமாசத்துக்கு முன்னாடியே புக் பண்ணினா விலை குறைவு என்பதால் எந்த டிரிப்புகும் ஆறுமாசத்துக்கு முன்பே பிளான் பண்ணிருவேன். இந்த வருஷம் நார்த் இந்தியாவில் இருக்கும் மலைப்பிரதேசங்களுக்கு ஸ்கூல் மற்றும் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து போகுற பிளான் இருக்கு. அதுக்காக ரெடி ஆயிட்டு இருக்கேன். ஷாப்பிங்லாம்கூட முடிச்சாச்சு''.

ஸ்ருதி நகுல்:

''எப்போதும் சம்மரில் நியூஸிலாந்து போன்ற குளிர்பிரதேசங்களுக்குப் போயிருவோம். எனக்கு பாரிஸும் லண்டனும் ரொம்பப் பிடித்தமான இடம். சம்மரில் கண்டிப்பா எப்போதும் அங்க ஒரு விசிட் அடிச்சிருவோம். இந்த வருஷம் நகுல் ஒரு புரொஜெக்டில் கமிட் ஆகி இருப்பதால் அவுட்டிங் போகும் பிளான் இல்ல. ஆனால், அதைவிட ஒரு பெட்டர் பிளானாக விலங்குகள், பறவைகள் நலன் காக்கும் விஷயங்களில் கவனம் செலுத்த போறோம். தெருக்களில் நிறைய இடங்களில் பறவைகள், விலங்குகள் தண்ணீர் குடிக்கும் ஃபீடிங் பாட்டில் வைக்க போறோம். உண்மையில் இந்த சம்மரில் மனசுக்கு நிறைவான வேலை பண்ணப்போறோம்னு நினைச்சா ஹேப்பியா இருக்கு''.

பாரதா ('செம்பருத்தி' சீரியல்)

''ஸ்கூல், காலேஜ் படிக்குற வரை லீவ் விட்டதும் பேமிலியா வெளிமாநிலங்களுக்குப் போவது எங்களுடைய வழக்கம். அது இப்போது தொடருது. இந்த வருஷம் மணாலி போகும் பிளான் இருக்கு. மூன்று மாசத்துக்கு முன்னாடியே பிளைட் டிக்கெட்லாம் புக் பண்ணியாச்சு. ஷூட்டிங்கும் இடைவிடாமல் இருப்பதால் ட்ரிப்புக்கு தனியா ஷாப்பிங் போக டைம் இல்ல. மற்றபடி இந்த சம்மரில் என்னுடைய ஸ்கின் டோனை பார்த்துக்கிறதில் அதிக கவனம் செலுத்துறேன்''.

சமீரா ('றெக்க கட்டி பறக்குது மனசு' சீரியல்)

''ஷூட்டிங்கில் ரொம்ப பிஸியா இருக்கேன். அதனால் இந்த சம்மருக்கு பெரிய அளவில் பிளான் இல்ல. இந்த வருஷம் ரம்ஜானும் மே மாசத்தில் வருவதால் செலிபிரேஷனுக்கு பிளான் பண்ணிட்டு இருக்கேன். ரம்ஜான் ஷாப்பிங்தான் இந்த சம்மருக்கான பிளான்.''

பின் செல்ல