Published:Updated:

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் உடல் தகனம்!

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் உடல் தகனம்!
மாண்டலின் ஸ்ரீனிவாஸ் உடல் தகனம்!
மாண்டலின் ஸ்ரீனிவாஸ் உடல் தகனம்!

சென்னை: நேற்று காலமான பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் உடல் பெசன்ட் நகர் மையானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.

1969ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், பாலகோலில் பிறந்த ஸ்ரீனிவாஸ், கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (19ஆம் தேதி) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ரோசைய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மாண்டலின் ஸ்ரீனிவாஸ் உடல் இன்று (20ஆம் தேதி), சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

1998ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2010ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதும் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.