Published:Updated:

இசையமைப்பாளர் இளையராஜா மருத்துவமனையில் அனுமதி

Vikatan Correspondent
இசையமைப்பாளர் இளையராஜா மருத்துவமனையில் அனுமதி
இசையமைப்பாளர் இளையராஜா மருத்துவமனையில் அனுமதி
இசையமைப்பாளர் இளையராஜா மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இசையமைப்பாளர் இளையராஜா  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

73 வயதான பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை தனக்காக, பிரத்யேக இணையதளம் ஒன்றை தொடங்கினார்.அன்று இரவு, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
உடனே சென்னை ஆயிரம் விளக்குப்  பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளையராஜா சேர்க்கப்பட்டார். அவருக்கு, இதய நோய் பாதிப்பு உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து இன்று(ஞாயிறு) காலை, ஆஞ்சியோ பிளாஸ்ட் என்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின், இளையராஜா உடல் நலம் தேறி வருவதாகவும், சில நாட்களில், வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.