Published:Updated:

"எங்களுக்குள் ஈகோவே கிடையாது!"- 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் டிவி நடிகர்களின் கெட் டு கெதர்

சீரியல் கெட் டு கெதர்

"பர்சனல், ஃபேமிலின்னு நாங்க எதையுமே பேசிக்கலை. அந்தத் தருணத்தை செம ஹேப்பியா கொண்டாடினோம். எங்களுக்குள்ள எந்த வித ஈகோவும் இல்ல. அங்க சின்னதா ஒரு மைனஸ்கூடக் கிடையாது. 3, 4 மணி நேரம் சந்தோஷமா டான்ஸ், பாட்டு, காமெடின்னு என்ஜாய் பண்ணினோம்!"

"எங்களுக்குள் ஈகோவே கிடையாது!"- 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் டிவி நடிகர்களின் கெட் டு கெதர்

"பர்சனல், ஃபேமிலின்னு நாங்க எதையுமே பேசிக்கலை. அந்தத் தருணத்தை செம ஹேப்பியா கொண்டாடினோம். எங்களுக்குள்ள எந்த வித ஈகோவும் இல்ல. அங்க சின்னதா ஒரு மைனஸ்கூடக் கிடையாது. 3, 4 மணி நேரம் சந்தோஷமா டான்ஸ், பாட்டு, காமெடின்னு என்ஜாய் பண்ணினோம்!"

Published:Updated:
சீரியல் கெட் டு கெதர்
90களில் புகழ்பெற்ற சீரியல் நடிகர்களுடைய கெட் டு கெதர் புகைப்படங்கள்தான் சமீபத்திய ட்ரெண்டிங்! அவர்களுடைய ரீயூனியன் புகைப்படங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகப் பரவிவருகின்றன. அந்தப் புகைப்படத்திலிருந்த நடிகர்கள் சிலரிடம் பேசினோம்.
சீரியல் கெட் டு கெதர்
சீரியல் கெட் டு கெதர்
நடிகை தேவி கிருபாவிடம் பேசிய போது...

”ரொம்ப நாளாக இப்படி ஒரு மீட் வைக்கணும்னு பேசிட்டே இருந்தோம். திடீர்னு முடிவு பண்ணி பத்து நாளில் எல்லாத்தையும் பிளான் பண்ணிட்டோம். டி.நகர்ல இந்த மீட்டை நடத்த முடிவு செஞ்சோம். நிஷா வெங்கட் ஆரம்பத்தில் புகைப்படங்கள் எல்லாத்தையும் ஒருங்கிணைக்க உதவினார். பிறகு, கெளசிக்கும், அம்முவும் எல்லாரையும் ஒருங்கிணைக்க உதவினாங்க. இந்த மீட் பொறுத்தவரை இவங்க சொல்லணும், அவங்க சொல்லணும்னுலாம் யாரும் இல்ல. எல்லாருமே ஆர்வமா ஷேர் பண்ணிக்கிட்டோம்.

சீரியல் கெட் டு கெதர்
சீரியல் கெட் டு கெதர்

இதுல என்ன ஸ்பெஷல்னா 80கள், 90கள், ஏன், 2000-த்தில் பிரபலமான நடிகர்கள்கூட அந்த டீமில் இருந்தாங்க. ரீ யூனியன் எப்படி இருக்கும்... எல்லாரும் அந்தத் தருணத்தை எவ்வளவு கொண்டாடுவாங்க என்பதெல்லாம் நமக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால் இந்தத் தருணத்தை மிஸ் பண்ணாம என்ஜாய் பண்ணணும்னு நினைச்சோம். இப்ப இருக்கிற போட்டியான உலகில் இந்த அளவுக்கு ஆர்ட்டிஸ்ட்கள் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸாக இருப்பாங்களான்னுலாம் தெரியாது. நான் கொஞ்சமாகத்தான் சீரியலில் நடிச்சிருக்கேன். ஆனாலும், என்னை எல்லாரும் அவங்களுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட்டாதான் பார்த்தாங்க. எல்லாரும் ஒருத்தரையொருத்தர் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவோம். அதுக்காக மரியாதை இல்லை என்கிற அர்த்தம் கிடையாது. அவ்வளவு உரிமை எடுத்துப் பழகுவோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பர்சனல், ஃபேமிலின்னு நாங்க எதையுமே பேசிக்கலை. அந்தத் தருணத்தை செம ஹேப்பியா கொண்டாடினோம். எங்களுக்குள்ள எந்த வித ஈகோவும் இல்ல. அங்க சின்னதா ஒரு மைனஸ்கூடக் கிடையாது. 3, 4 மணி நேரம் சந்தோஷமா டான்ஸ், பாட்டு, காமெடின்னு என்ஜாய் பண்ணினோம். இன்னும் ஒரு வருஷத்துக்கு எங்க எல்லாருக்குள்ளேயும் இந்த கெட் டு கெதர் சந்தோஷம் இருக்கும்.

சீரியல் கெட் டு கெதர்
சீரியல் கெட் டு கெதர்

ஆகஸ்ட் 14 கெட் டு கெதர் பிளான் பண்ணினோம். அன்னைக்கு காலையில் சின்னத்திரை எலெக்‌ஷனில் வெற்றி பெற்ற நடிகர்களுக்கு பதவியேற்பு விழா இருந்தது. அதை முடிச்சிட்டு வீட்டுக்குப் போய் கிளம்பிட்டு பல ஆர்ட்டிஸ்ட் அவசர அவசரமா வந்து நிகழ்ச்சியில் கலந்துகிட்டாங்க. இதுல சிலரால வர முடியல. அவங்க எல்லாரையும் மிஸ் பண்ணினோம்.

ஆண்களுக்குக் கறுப்பு நிற டிரஸ் செட் ஆகும்னு அவங்க எல்லாரும் பிளாக் கலர் செலக்ட் பண்ணினாங்க. இப்ப டிரெண்டிங் சிவப்புதான்னு எனக்குத் தெரியும். ஆனா, நான் சொல்றதுக்கு முன்னாடியே பசங்களே பொண்ணுங்க எல்லாரும் ரெட் கலர் போட்டுட்டு வாங்கன்னு சொல்லிட்டாங்க. அப்படி நாம நினைக்கிறதை நமக்கு முன்னாடியே சரியா சொல்லிட நல்ல நண்பர்களால் மட்டுமே முடியும். அந்த வகையில் நாங்க ரொம்பவே லக்கி. அந்த டிரஸ் கோடுதான் எல்லாரும் ஃபாலோ பண்ணினோம்.

சீரியல் கெட் டு கெதர்
சீரியல் கெட் டு கெதர்

சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கணும்னே ரொம்ப தூரத்துல இருந்து வந்திருந்தாங்க. சிலர் இன்னும் மீடியாவில் நடிச்சிட்டு இருக்காங்க, சிலர் பிசினஸ் பண்றாங்க. ஆனாலும், எல்லாரும் சந்திச்சு சிரிச்சுப் பேசினது மனசுக்கு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொடுத்தது. அடிக்கடி இது போல மீட் பண்ணலாம்னு பிளான் பண்ணியிருக்கோம்” என்றார்.

`கெட் டு கெதர்' குறித்து நடிகை ஷில்பாவிடம் பேசிய போது,

”முதன்முறையா 90களில் நடித்த நடிகர்கள் எல்லாரும் சந்திக்கிறோம்னு சொன்னப்பவே ரொம்ப ஆசையோடு காத்திருந்தேன். அது ரொம்ப ஸ்பெஷலான தருணம். அந்தக் காலம் கோல்டன் பீரியட்! இன்றைக்கு பலரும் மெகா சீரியல்னு சொல்றாங்க. ஆனா, உண்மையில் மெகா என்கிற கான்செப்ட்டே எங்க காலத்தில்தான் வந்தது.

சீரியல் கெட் டு கெதர்
சீரியல் கெட் டு கெதர்

சிலர் இன்னும் மீடியாவில் இருக்காங்க. சிலர் தொடர்பிலேயே இல்லாமப்போயிட்டாங்க. ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்காத பலரையும் நேரில் சந்திக்கப் போகிறோம்னு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. மலரும் நினைவுகள் பல நினைவுக்கு வந்து போச்சு. எங்க யாருக்குள்ளேயும் போட்டி, பொறாமை கிடையாது. அதே மாதிரி எங்களுக்குள் ஈகோவும் கிடையாது. ரொம்ப ஜாலியா ஒவ்வொரு தருணத்தையும் என்ஜாய் பண்ணினோம். அந்த நினைவுகள் எல்லாத்தையும் ரீவைண்ட் பண்ணின மாதிரி இருந்துச்சு.

சீரியல் கெட் டு கெதர்
சீரியல் கெட் டு கெதர்

உண்மையான நட்பு எங்க எல்லாருக்குள்ளேயும் இருந்துச்சு. எல்லாரையும் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனாலும் நிறைய பேரால வர முடியல. அவங்க எல்லாரையும் மிஸ் பண்ணினேன். ஸ்பாட்டிற்கு நான்தான் முதல் ஆளா போனேன். அடுத்து யார் வரப் போறாங்கன்னு ஒவ்வொருத்தரையும் எதிர்பார்ப்போடு நான்தான் வரவேற்றேன். ஃபேமிலி கெட் டு கெதர் மாதிரியான உணர்வுதான் எல்லாருக்குள்ளேயும் இருந்தது. எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருந்தோம்” என்றார்.