Published:Updated:

"ஓவியா என் டார்லிங்... ஜூலி இன்னும் கத்துக்கணும்!" 'சரவணன் மீனாட்சி' ரக்‌ஷிதா

"ஓவியா என் டார்லிங்... ஜூலி இன்னும் கத்துக்கணும்!"  'சரவணன் மீனாட்சி' ரக்‌ஷிதா
"ஓவியா என் டார்லிங்... ஜூலி இன்னும் கத்துக்கணும்!" 'சரவணன் மீனாட்சி' ரக்‌ஷிதா

"ஓவியா என் டார்லிங்... ஜூலி இன்னும் கத்துக்கணும்!" 'சரவணன் மீனாட்சி' ரக்‌ஷிதா

'பிக் பாஸ்... பிக் பாஸ்... பிக் பாஸ்.... தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் இந்த வார்த்தைதான். 'சரவணன் மீனாட்சி' புகழ், ரக்ஷிதாவும் ஃபேஸ்புக் லைவில், காயத்ரியையும் ஜூலியையும் விமர்சித்து லைக் அள்ளியிருக்கிறார். அவரிடம் தொலைபேசியில் பேசினோம். 

“நான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பிச்சபோதே அதைப் பத்தி ஃபேஸ்புக் லைவ்ல பேசணும்னு நினைச்சேன். ஆனா, மக்களுக்கு அந்த நிகழ்ச்சி புரிபடுறதுக்குள்ள அதைப் பத்தி பேசினா நல்லா இருக்காதேனு கொஞ்சநாள் தள்ளிப்போட்டேன். இப்ப பிக் பாஸ் ஃபீவர் நாட்டையே ட்ரெண்டாக்கிட்டு வருது.

அதனால என்னோட ஒப்பீனியனை ஃபேஸ்புக் லைவ்ல விட்டேன்" என்ற 'சரவணன் மீனாட்சி' சீரியல் புகழ் ரக்‌ஷிதாவின் வீடியோ செம வைரல்.

''கன்னடத்தில் நடந்த பிக் பாஸோட நாலு சீசனுக்கும் என்னைக் கூப்பிட்டாங்க. என்னாலதான் போக முடியலை. தமிழ் பிக் பாஸுக்குக் கூட கூப்பிட்டாங்க. அந்த நேரம் 'சரவணன் மீனாட்சி' போய்ட்டு இருந்ததால 'நோ' சொல்லிட்டேன். ஆனா, இப்ப ஒரே ஒரு சான்ஸ் கிடைச்சு எனக்கு அட்லீஸ்ட் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகுற சான்ஸ் கிடைச்சா ஓடிப்போய் ஓவியாவை கட்டிப்புடிச்சுப்பேன்'' என்று வார்த்தைகளில் குஷி காட்டுகிறார் ரக்‌ஷிதா.

 ''ஓவியாவை அவ்ளோ புடிக்குமா? அப்போ, காயத்ரியையும் ஜூலியையும் பிடிக்காதா?'' 

“அய்யோ... அப்படியெல்லாம் இல்லைங்க. நம்ம எல்லாருக்குள்ளேயும் நல்லது கெட்டது ஒளிஞ்சுட்டுதான இருக்குது. நம்ம குடும்பத்துலேயே ஒரு சிலரோட கேரக்டர், நடவடிக்கையோட நம்மால ஒத்துப் போக முடியலை. அப்படியிருக்கிறப்ப, யாருனே தெரியாத செலிபிரெட்டிகளை எல்லாம் ஓர் இடத்துல குடும்பம் நடத்தச் சொன்னா பிரச்னை வராம என்ன செய்யும் சொல்லுங்க?

பிக் பாஸ் வீட்டுல இருக்கிறவங்க எல்லாரும், அங்க தனக்கு செட்டாகாத ஒருசிலரோட நடவடிக்கை பிடிக்காம, பல்லைக் கடிச்சுகிட்டு பொறுத்துகிறாங்க. அதையும் மீறி, அவங்க பொறுமை எல்லை மீறினது ஜூலியாலதான். தனக்கு நடக்காத ஒண்ணை நடந்ததா சொல்லி ஓவியாவை கார்னர் பண்ண நினைச்ச சம்பவத்தை நினைச்சு அத்தனை பேரும் ஜெர்க் அடிச்சுப் போயிட்டாங்கனு அவங்க முக ரியாக்‌ஷன்ல தெரிஞ்சது.

தனக்குப் பிடிக்காதவங்களை வார்த்தைகளால எப்படிக் காயப்படுத்தலாம்னு காயத்ரியைப் பார்த்து தெரிஞ்சுகிட்டேன். டான்ஸ் மாஸ்டரா, தனக்குக் கீழே இருக்கிறவங்களை காயத்ரி எப்படி வேணும்னாலும் பேசி வேலை வாங்கலாம். ஆனா அதே வார்த்தையை வீட்டுக்குள்ள பிரயோகிச்சா என்ன ஆகும்ன்றதுதான் பிக்பாஸ் வீட்டுல களேபரமா நடக்குது. ஓவியாவை அவங்க அடக்க நினைக்கிறதும், அதுலிருந்து ஓவியா சாமர்த்தியமா விலகுறதும்னு பார்க்கிற ஆடியன்ஸ் பல்ஸ் நல்லாவே எகிறது.  

ஓவியா என் டார்லிங். இந்த 'பிக் பாஸ்' ஷோவில் மட்டுமில்லே; வெளியிலும் அவங்க அப்படித்தான். வெகுளியான கேரக்டர். நார்மல் லைஃப்ல அவங்களை மாதிரியானவங்களைப் பார்க்கிறது கஷ்டம்.  ஜூலி இந்த அளவுக்கு ஓவியாவை டார்ச்சர் பண்றதை என்னால் ஏத்துக்கவே முடியாது. ஆனாலும், அவரும் ஒரு பெண்தான். ஜூலி கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்திருக்காங்க. இப்போ நாம பண்றது நம்ம ஃபியூச்சரை பாதிக்கும்னு அவளுக்குத் தெரியலை. அதுக்காக, ஆடியன்ஸ் பண்றதும் ரொம்ப பெரிய தப்பு. ஜூலி என்ன கொலையா பண்ணிட்டா. அந்தப் பொண்ணை ஏன் இந்த அளவுக்குக் கடுமையா விமர்சிக்கணும். எனக்கு நம்பிக்கை இருக்கு. ஓவியாவைப் பார்த்து நிச்சயமா ஜூலி திருந்திடுவா. வெளியில் வரும்போது ஒரு புது மனுஷியா வரலாம். அதேபோல, நாம ஜூலிக்கு வேணா அட்வைஸ் பண்ண முடியும். ஆனா, காயத்ரி மாஸ்டருக்கு சொல்றதுக்கு எதுவுமே இல்லை. நமீதா வெளியில் வந்து வீடியோக்களைப் பார்த்து உண்மை நிலையைப் புரிஞ்சுட்டு இருப்பாங்க. அதேமாதிரி மத்தவங்களும் வெளியில வந்து புரிஞ்சுப்பாங்க. அதுவரை நாம வெயிட் பண்ணுவோம். தேவையில்லாமல் வார்த்தைகளை விட வேண்டாமே” என்று பேசிக்கொண்டே இருந்தவர் திடீரென சிரித்தார். சில நொடிகள் இடைவெளிவிட்டு சொன்னார்... 

“நல்லவேளை... ஆரம்பத்தில் 'அடடா... நானும் பிக் பாஸ் போய் இருக்கலாமோ?'னு ரொம்ப ஃபீல் பண்ணினேன். இனி வருத்தப்படமாட்டேன். நாம நினைக்கிற அளவுக்கு 'பிக் பாஸ்' அவ்ளோ ஒர்த் இல்லீங்க. இன்னும் 70 நாள் இருக்கு. இனி வரப்போகும் வாரங்களில் நம் ஒப்பீனியன் எப்படி வேணா மாறலாம். அதனால், இந்த நிகழ்ச்சியை ஒரு ஷோவா மட்டும் பாருங்க” என்றார் பக்குவமான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு