சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“நடிக்கிறதுக்கு எது தேவை தெரியுமா?”

ஆறுமுகவேல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆறுமுகவேல்

ஆறுமுகவேல் பேட்டி

‘அட்ட கத்தி’யில் உதார் விட்டு வாழைமரத்தை வெட்டப்போகும் அப்பா, ‘மகாமுனி’யில் ஆணவக் கொலைக்கு உதவும் கொடூர மனிதர் என, சின்னச் சின்ன கேரக்டர்களிலும் தன்னைக் கவனிக்கவைக்கிறவர் ஆறுமுகவேல். நவீன நாடகங்களில் நடித்து சினிமாவுக்கு வந்தவர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள காம்ப்ளக்ஸ் ஒன்றின் குறுகலான மாடிப்படிகளுக்கருகில் சிறிய அறையில் ஆறுமுகவேலைச் சந்தித்தேன்.

“சென்னை ஓவியக் கல்லூரியில் படிச்சப்போ நவீன இலக்கியம், நவீன நாடகங்களின் அறிமுகம் ஏற்பட்டது. 80-களின் இறுதிக்காலத்தில், கூத்துப்பட்டறை ஆரம்பித்த புதிதில் கருணா பிரசாத் போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. பரீக்‌ஷா, மூன்றாம் அரங்கு உள்ளிட்ட பல நாடகக்குழுக்களில் நடித்தி ருக்கிறேன். அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற நாடகம், கணேசனை ‘சிவாஜி’ கணேசன் ஆக்கிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்’ நாடகம். அதைப் பலவருடங்களுக்குப் பிறகு ‘பரீக்‌ஷா’ ஞாநி மீண்டும் மேடையேற்றியபோது சிவாஜியாக நடித்தேன். இடைப்பட்ட கொஞ்ச காலம் விளம்பரத்துறையில் டிசைனராக, ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்தி ருக்கிறேன். ‘ஆவின்’ பாலின் லோகோவை நான்தான் டிசைன் செய்தேன்” என்று தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தவர், தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த கதையைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.

“நடிக்கிறதுக்கு எது தேவை தெரியுமா?”

“கல்லூரி முடித்த நாள்களில் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தேன். இயக்குநர் சரண் என் கல்லூரி நண்பன். அவர் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிறிய ரோலில் நான் நடிப்பதற்கு உதவினார். அதுதான் என் முதல் திரைப்பட அனுபவம். இடையில் விளம்பரத்துறை வேலை. அதன்பின், நாசர் இயக்கிய ஒரு ஆவணப்படத்தில் அசிஸ்டென்ட்டாக வேலை செய்தேன். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ஷமிதான் ‘ரௌத்திரம்’ படத்தின் கேமராமேன். அவர் மூலம் ரௌத்திரம் படத்தில் கராத்தே மாஸ்டராக ஒரு சிறிய ரோலில் அறிமுகமானேன். தொடர்ந்து ‘அட்ட கத்தி’, ‘காலா’ படங்களில் நடித்தேன். சின்னச் சின்ன கேரக்டர்களில் இதுவரை நடித்தி ருந்தாலும் ‘மகாமுனி’ எனக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இன்னும் நல்ல வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன்.”

“நடிக்கிறதுக்கு எது தேவை தெரியுமா?”

“நாடகம், கூத்துப்பட்டறை இவையெல்லாம் சினிமாவில் உங்களுக்கு எந்த அளவில் பயனுள்ளதாக இருந்தன?”

“அங்கு கற்றுத்தருகிற நடிப்பு நாடகத்துக்கானது என அவர்களே சொல்லி விடுவார்கள். அந்த நடிப்பு சினிமாவுக்கு ஒத்துவராது. ஆனால், நடிப்பு பற்றிய ஆழமான பார்வை, கதாபாத்திரங்களின் தன்மை குறித்து நுட்பமான அணுகுமுறை போன்றவற்றுக்கு அது பெரும்பயனளித்தது.”

“சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காதது குறித்த வருத்தம் உண்டா?’’

“கறுப்பாக, வழுக்கைத் தலையுடன், சராசரியான உயரமுடைவன் நான். குடிகாரனாக ‘அட்ட கத்தி’ படத்தில் நடித்தபிறகு அதே மாதிரியான குடிகார ரோல்கள் நிறைய வந்தன. ஆனால், அதேபோல நடிக்க எனக்கு விருப்பமில்லை. ‘மகாமுனி’ படத்தைப் போல சில காட்சிகளில் நடிப்பதாக இருந்தால்கூட, நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துவிடவேண்டும் என்பதுதான் ஆசை. ஒரு தடவை நாசர் சார்கிட்ட, ‘சினிமாவுல நடிக்கிறதுக்கு எது தேவை’ன்னு கேட்டேன். அவரு `புத்திசாலித்தனம்’னு பதில் சொன்னாரு. உங்களுக்குத் திறமையிருந்தாலும் புத்திசாலித்தனம் இருந்தாதான் உங்களால் ஜெயிக்க முடியும். யோசிச்சுப்பார்த்தா நாம நல்ல நடிகர்கள்னு சொல்றவங்க நிறைய பேர் புத்திசாலித்தமான உடல்மொழி, புத்திசாலித்தனமான பார்வை, புத்திசாலித்தன மான செயல்கள் கொண்ட வங்களா இருப்பாங்க. ‘புத்திசாலித்தனம்’கிற வார்த்தைக்கு அவ்வளவு அர்த்தமும் மதிப்பும் இருக்கு.”