Published:Updated:

பாரதி கண்ணம்மா: `பீஸ்ட்' பட வில்லனோடு வந்த அந்த மீம் மட்டும் பார்த்தேன்! - நடிகர் லிங்கேஷ்

'பாரதி கண்ணம்மா' லிங்கேஷ்

சன் மியூசிக்கில் ஆங்கரிங் பண்ணும்போதே சீரியலில் நல்ல, நல்ல வாய்ப்புகள் வந்தது. அவ்வளவு ஏன் இப்பவரைக்குமே வாய்ப்புகள் வந்துட்டேதான் இருக்கு. ஆனா, சினிமா தான் என் கனவு. அதுக்காகத்தான் எல்லா வாய்ப்புகளையும் மறுத்தேன்! சீரியலில் சாதாரணமா கேஷூவலா நடிச்சா போதும்னுலாம் நான் நினைக்கல.

பாரதி கண்ணம்மா: `பீஸ்ட்' பட வில்லனோடு வந்த அந்த மீம் மட்டும் பார்த்தேன்! - நடிகர் லிங்கேஷ்

சன் மியூசிக்கில் ஆங்கரிங் பண்ணும்போதே சீரியலில் நல்ல, நல்ல வாய்ப்புகள் வந்தது. அவ்வளவு ஏன் இப்பவரைக்குமே வாய்ப்புகள் வந்துட்டேதான் இருக்கு. ஆனா, சினிமா தான் என் கனவு. அதுக்காகத்தான் எல்லா வாய்ப்புகளையும் மறுத்தேன்! சீரியலில் சாதாரணமா கேஷூவலா நடிச்சா போதும்னுலாம் நான் நினைக்கல.

Published:Updated:
'பாரதி கண்ணம்மா' லிங்கேஷ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'பாரதி கண்ணம்மா'. இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் தொடரில் தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் நுழைந்து விடுவது போன்ற காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் தீவிரவாதிகளின் தலைவனாக நடிகர் லிங்கேஷ் நடித்திருந்தார். சினிமாவில் பரிச்சயமான இவர் சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்திருப்பது குறித்துத் தெரிந்துகொள்ள அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

'பாரதி கண்ணம்மா' லிங்கேஷ்
'பாரதி கண்ணம்மா' லிங்கேஷ்

" 'பாரதி கண்ணம்மா' இயக்குனர் பிரவீன் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அவர் ராஜா ராணி ஆரம்பிக்கும்போதே என்னை அந்தத் தொடரில் நடிக்கக் கேட்டார். அப்போ, `இல்லை டார்லிங்... நான் வரல'ன்னு சொல்லிட்டேன். அடுத்து, 'பாரதி கண்ணம்மா' தொடரில் ஒரு ஸ்பெஷல் கேரக்டரை அறிமுகப்படுத்த இருக்கிறேன். அதுல நீ நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னார். அப்பவும் கோவிட் சூழலில் என்னால பண்ண முடியல. அடுத்து, இந்தக் கேரக்டருக்காக மூன்றாவது முறையாகக் கேட்டார். ஏற்கெனவே இரண்டு முறை வரலைன்னு சொல்லிட்டதால இந்த முறையும் அப்படி சொல்ல முடியாதுன்னு அவருக்காகப் பண்ணலாம்னு ஓகே சொல்லிட்டேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர் 10 நாள் ஷூட்டிங். பெருசா பண்ண பிளான் பண்ணியிருக்கோம்னு சொன்னார். நான் காஸ்டியூம் மட்டும் நல்லா இருக்கணும் டார்லிங்னு சொல்லிட்டேன். அவர் கெஸ்ட் ரோல்னு சொன்னப்ப கூட நான் இந்தக் கேரக்டரில் எப்படி நடிக்கிறதுன்னுலாம் யோசிக்கவே இல்ல.. எந்தக் கேரக்டராக இருந்தாலும் அதை பெஸ்ட் ஆக பண்ணனும் என்பது மட்டும்தான் எனக்குள்ள ஓடிட்டு இருந்துச்சு. சினிமாவில் தான் சூப்பரா நடிக்கணும்... சீரியலில் சாதாரணமா கேஷூவலா நடிச்சா போதும்னுலாம் நான் நினைக்கல. என்ன பிளாட்பார்ம் ஆக இருந்தாலும் அதுல என் பெஸ்டைக் கொடுக்கணும் என்பதில் ரொம்பவே உறுதியா இருந்தேன். 

'பாரதி கண்ணம்மா' லிங்கேஷ்
'பாரதி கண்ணம்மா' லிங்கேஷ்

அதே மாதிரி நடிச்சிட்டு வந்தேன். இப்ப சீரியலில் இந்த அளவுக்கு அதுல ரெஸ்பான்ஸ் இருக்கும்னுலாம் நான் எதிர்பார்க்கவே இல்ல. பிரவீன் ஃபோன் பண்ணி செம ரெஸ்பான்ஸ் டார்லிங்.. நான் பயங்கர ஹாப்பின்னு சொன்னார். அவர் ஹாப்பியாக இருக்கிறதனால எனக்கும் திருப்தியா இருக்கு. சினிமாவில் இருந்து யாரும் இது குறித்து குறிப்பிட்டு என்கிட்ட பேசல!"

பீஸ்ட் படத்தோட பாரதி கண்ணம்மா சீரியலை கம்பேர் பண்றாங்க.. தொடர்ந்து டிரோல் பண்றாங்களே அதெல்லாம் கவனிச்சீங்களா? எனக் கேட்டோம்.

" நான் சோசியல் மீடியாவில் ஒரு மீம் பார்த்தேன். அதுல பீஸ்ட் பட வில்லன் ஃபோட்டோவையும், என் ஃபோட்டோவையும் போட்டு அந்த வில்லனை விட இந்த வில்லன் நல்லா இருக்கான்னு எழுதியிருந்தாங்க. அந்த ஒரு மீம் மட்டும் சரியா என் கண்ணுல பட்டுச்சு. ரொம்ப ஹாப்பியா இருந்துச்சு. செட்ல எல்லாரும் பயங்கர ரெஸ்பான்ஸ்னு சொன்னாங்க. ஆனா, இந்த அளவுக்கு இதுக்கு வரவேற்பு கிடைக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. 

'பாரதி கண்ணம்மா' லிங்கேஷ்
'பாரதி கண்ணம்மா' லிங்கேஷ்

பொதுவா சினிமாவில் நடிக்கிறவங்க சீரியலில் நடிக்கத் தயங்குவாங்க. ஆனா, உண்மையில் அப்படியில்லை. பணத்துக்காகன்னு இல்லாம சீரியலில் நல்ல கேரக்டரில் ஒரு பத்து நாள் ஷூட்டிங்னா தாராளமா நடிக்கலாம். சினிமாவையும், சீரியலையும் பேலன்ஸ் பண்ற பக்குவம் அதுக்கு இருந்தா போதும்! 5 நாள், 10 நாளில் நல்ல கதைக்களம் கிடைச்சா சீரியலில் நடிக்கலாம் அதுல எந்தத் தப்பும் இல்லை என்கிற நோக்கில் டிரை பண்ணி பார்க்கலாம்னு தான் நான் இதுல நடிச்சேன். நாம ஏன்? சினிமாவில் இருந்தா சீரியலில் நடிக்கக் கூடாது என்கிற எண்ணத்தை பிரேக் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு. அதுக்காகவும்தான் இந்தத் தொடரில் நடிச்சேன் என்றவரிடம் தொடர்ந்து சீரியலில் எதிர்பார்க்கலாமா எனக் கேட்டோம்.

சன் மியூசிக்கில் ஆங்கரிங் பண்ணும்போதே சீரியலில் நல்ல, நல்ல வாய்ப்புகள் வந்தது. அவ்வளவு ஏன் இப்பவரைக்குமே ஆஃபர் வந்துட்டேதான் இருக்கு. ஆனா, சினிமா தான் என் கனவு. அதுக்காகத்தான் எல்லா வாய்ப்புகளையும் மறுத்தேன். கெஸ்ட் ரோல் பண்றதுங்கிறது வேற! பிரவீன் கேட்டதால மட்டும்தான் இது பண்ணினேன். என்னோட கவனம் முழுக்க சினிமாவில் தான் என்றவரிடம் வெயிட் லாஸ் குறித்துக் கேட்டோம்.

'பாரதி கண்ணம்மா' லிங்கேஷ்
'பாரதி கண்ணம்மா' லிங்கேஷ்

என்னோட முதல் படத்துக்காக வெயிட் லாஸ் பண்ண வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 30கிலோ வரையில் அதுக்காக எடையை குறைச்சேன். தொடர்ந்து அதே எடையில் வேணும்னு டைரக்டர்ஸ் கேட்டதால அதையே இப்ப மெயிண்டெயின் பண்ணிட்டு இருக்கேன். இப்ப மூணு படத்துல ஹீரோவாக நடிச்சிருக்கேன். அந்தப் படங்கள் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நாலாவது படத்தோட ஷூட் இப்ப போயிட்டு இருக்கு!" எனப் புன்னகைத்தவரிடம் வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.