Published:Updated:

``கல்யாணம் பத்தி சிம்புவோட ஆசை இதுதான்!" - மஹத் ஷேரிங்க்ஸ்

மஹத் - பிராச்சி தம்பதி
மஹத் - பிராச்சி தம்பதி

பிராச்சியின் கர்ப்ப கால அனுபவங்களையும், அப்பாவாகப் போகும் சந்தோஷங்களையும் கேட்பதற்காக மஹத்திடம் பேசினோம்...

நடிகரும் `பிக்பாஸ் தமிழ்' பிரபலமுமான மஹத்துக்கும் அவரின் காதலியும் பிரபல மாடலுமான பிராச்சி மிஸ்ராவுக்கும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தான் ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராமில் போட்டோவுடன் பகிர்ந்திருக்கிறார் பிராச்சி.

Prachi Mishra
Prachi Mishra

அதில், ``இப்போது ஏழாவது மாதம். வயிறு பெரிதாகிக்கொண்டே இருப்பதால் ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்படுமோ என்று பயமாக இருக்கிறது. ஸ்ட்ரெச் மார்க்ஸ் கர்ப்ப காலப் போராட்டங்களின் புண்கள் என்று கூற விரும்புகிறேன். அதற்காக நான் பெருமையும் படுகிறேன். அவை சிறிதளவு மட்டுமே ஏற்படும் என்று நம்புகிறேன்." என்று தெரிவித்திருக்கிறார். கர்ப்பமானது முதலே தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார் பிராச்சி.

பிராச்சியின் கர்ப்ப கால அனுபவங்களையும், அப்பாவாகப் போகும் சந்தோஷங்களையும் கேட்பதற்காக மஹத்திடம் பேசினோம்...

``ரொம்ப சந்தோஷமா இருக்கு. யாரு இந்த இடத்துல இருந்தாலும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அப்பாவாகப் போறேன்னதும் விளையாட்டுத்தனம் மாறி பொறுப்புணர்வு அதிகமாயிருக்கு. கல்யாணம் ஆன போதே கொஞ்சம் ரெஸ்பான்ஸிபிலிட்டி வந்திருச்சு. கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்குள்ளேயே குழந்தைங்கிறபோது அந்தப் பொறுப்பு இன்னும் அதிகமாயிருக்கு.

Mahat - Prachi
Mahat - Prachi

குழந்தைங்கிறது வாழ்க்கையிலே ஓர் அழகான தருணம்னு நினைக்கிறேன். எல்லாருமே இந்த மொமன்ட்டை அனுபவிக்கணும். குழந்தை பிறந்த பிறகு எங்களோட சந்தோஷம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்னு நம்புறேன். என்னோட அப்பா, அம்மா கூட இருக்கிறதாலே கொஞ்சம் கம்ஃபர்ட்டபிளா இருக்கு" என்றார்.

``மனைவிக்கு இந்த நேரத்துல ஏதாவது உதவி பண்றீங்களா?" என்றதற்கு

``என்னால முடிஞ்ச அளவு ஹெல்ப் பண்றேன். அவங்களை பத்திரமா பாத்துக்கிறேன். ஆனா அவங்களும் தொந்தரவு குடுக்கிற ஆள் கிடையாது. செல்ஃப் மேடான நபர்தான். எந்த சிச்சுவேஷனையும் தைரியமா ஹேண்டில் பண்ணுவாங்க. என் மனைவியும் ரொம்ப சந்தோஷமா இந்த நாள்களைக் கடந்து வர்றாங்க.

Mahat - Prachi
Mahat - Prachi

லாக்டௌன்ல சமைச்ச மாதிரி, இப்போவும் ரெண்டு பேரும் அடிக்கடி சேர்ந்து சமைக்கிறோம். அந்த அழகான தருணம் எங்களோட காதலை இன்னும் அழகாக்குது" என்றார்.

``உங்கள் நெருங்கிய நண்பர் நடிகர் சிம்பு இந்த நேரத்தில் ஏதாவது அட்வைஸ் செய்தாரா?" என்றோம்.

``நான் அப்பாவாகப் போற விஷயத்தைக் கேள்விப்பட்டபோது சிம்பு ரொம்பவே சந்தோஷப்பட்டாரு. ஷூட் முடிச்சிட்டு எப்படியும் வாரத்துல 3, 4 நாளு டின்னருக்கு வீட்டுக்கு வந்திடுவாரு. பெரும்பாலான நாள்கள் எங்களைப் பார்க்க வந்திடுவாரு.

Actor Simbu
Actor Simbu

எங்ககூட சாப்பிட்டுட்டு, சில மணி நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டுதான் போவாரு. ``இந்த நேரத்துல உன் வொயிஃபை பத்திரமா பாத்துக்கோ. எந்தக் கஷ்டமும் கொடுக்காம சந்தோஷமா வெச்சிக்கோ"ன்னு சீரியஸா அட்வைஸும் பண்ணினாரு" என்றவரிடம்.

``அவர் அட்வைஸ நீங்க கேக்குறீங்க, கல்யாணம் பத்தி அவருக்கு நீங்க அட்வைஸ் பண்ணியிருக்கீங்களா?" என்றோம்.

``இந்த விஷயத்துல அவருக்கு அட்வைஸ் பண்ணணும்னெல்லாம் இல்ல. அவருக்கும் கல்யாணம் பண்ணிக்க ஆசை இருக்கு.

Simbu with Mahat & Prachi
Simbu with Mahat & Prachi
"கல்யாணமா... அட போங்க ஆன்ட்டி!" - சர்ப்ரைஸ் கேக் வெட்டிய சிம்பு

புடிச்ச பொண்ணு வாழ்க்கையில வரணும்ல. சிம்புன்னு இல்ல, யாரா இருந்தாலும் அவங்களுக்குப் புடிச்ச பொண்ணோ பையனோ கிடைச்சாதான் கல்யாணம் பண்ணிப்பாங்க. சிம்பு மனசுக்குப் புடிச்ச பொண்ணு சீக்கிரம் கிடைப்பாங்க. சிம்புவுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!" பாசிட்டிவ் மோடில் முடித்தார் மஹத்.

அடுத்த கட்டுரைக்கு