பாரதிராஜாவின் பழைய படங்களில் காந்திமதியோ வடிவுக்கரசியோ ஒவ்வொரு காட்சியிலும் பல பழமொழி களையும் சொலவடை களையும் பொழிந்து தள்ளுவதைப் பார்த்திருப்போம். ஆனால், கிராமத்திலிருந்து நகரத்துக்கு நாம் நகர நகர நம்மிடமிருந்து பழமொழிகளும் சொலவடை களும் விடைபெற்றுவிட்டன. சென்ற தலைமுறைக்காரர்களே இப்போது பழமொழிகளையும் சொலவடைகளையும் சொல்வது அரிதாகிவிட்டது. ஆனால், ஒன்று... நன்றாகக் கவனித்துப்பாருங்கள், எல்லோருமே அன்றாட வாழ்க்கையில் ஒருநாளில் ஒருமுறையாவது வடிவேலுவின் வசனத்தை உச்சரித்துவிடுகிறோம்.

‘வர்ரும் ஆனா வராது’, ‘வடை போச்சே...’, ‘இப்பவே கண்ணைக் கட்டுதே’ என்று வடிவேலுவின் வசனங்கள் பழமொழிகள், சொலவடைகளின் இடங்களை நிரப்பி விட்டன. பழமொழிகளும் சொலவடைகளும் மொழிக்களஞ்சியம் என்றால் வடிவேலுவின் வசனங்களும் இப்போது நம் மொழிக் களஞ்சியமாக, பண்பாட்டின் அங்கமாக மாறிவிட்டன. நம் வாழ்க்கையின் எல்லாச் சூழலுக்கும் ஒரு வடிவேலு வசனம் இருக்கிறது. மீம்கள் ஆரம்பித்து நகைச்சுவை சேனல்கள் வரை அத்தனையையும் ஆக்கிரமித்திருக்கிறார் வடிவேலு. மொத்தத்தில் வடிவேலு நம் பண்பாட்டின் அடையாளமாக மாறியிருக் கிறார்.

இத்தனைக்கும் வடிவேலு அதிகப் படங்களில் நடித்து பல ஆண்டுகள் ஆகின்றன. அதற்குப் பிறகு சந்தானம், சூரி, சதீஷ், கருணாகரன், முனீஷ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகிபாபு என்று ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வந்துவிட்டார்கள். ஆனாலும், தமிழர்கள் மற்ற நடிகர்களை ரசித்தாலும் சகித்தாலும் வடிவேலுவுக்குத் தந்த இடத்தை யாருக்கும் தரத் தயாராக இல்லை. அந்த இம்சை அரசனின் ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர நாற்காலி காலியாகத்தான் இருக்கிறது. (ராஜ குலோத்துங்கனை விட்டுவிட்டேன் மன்னா!)

1988-ல் டி.ராஜேந்தரின் ‘என் தங்கை கல்யாணி’ படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகம். ராஜ்கிரணின் ‘என் ராசாவின் மனசிலே’, ஆர்.வி.உதயகுமாரின் ‘சின்னக் கவுண்டர்’ ஆகியவற்றில் வடிவேலுவின் முகம் ஓரளவுக்குத் தமிழ் சினிமா பார்வை யாளர்கள் மனதில் பதிந்தது. ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’ என்று பல படங்களிலும் அவ்வப்போது தன் தனி முத்திரையைப் பதித்தார் வடிவேலு. ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் நடிக்கும்போது ‘கறுப்பு நாகேஷ்’ என்று பட்டம் தந்தார் பாரதிராஜா. ஆனால், சேரனின் ‘பாரதி கண்ணம்மா’வில் தான் வடிவேலுவின் தனித்துவம் மிளிரத் தொடங்கியது எனலாம்.

பார்த்திபன் - வடிவேலுவின் ‘குண்டக்க மண்டக்க’ கூட்டணி, வழக்கில் புழங்கப்படும் வார்த்தை களைப் பிரித்து மேய்ந்து கிச்சுக்கிச்சு மூட்டியது. இப்படி படிப்படியாக வளர்ந்து மக்கள் மனதில் இடம்பிடித்த வடிவேலு, ‘வின்னர்’ படத்துக்குப் பிறகுதான் உச்சம்பெற்றார். அதற்குப் பிறகு அவருடைய ராஜாங்கம்தான். தொடக்ககால ‘என் ராசாவின் மனசிலே’, ‘கிழக்குச்சீமையிலே’ வடிவேலுவுக்கும் ‘வின்னர்’ வடிவேலு வுக்கும் இடையிலான உடல்மொழி யில்தான் எத்தனை மாற்றங்கள்!

தமிழ் சினிமாவில் சாதனையாளர் களைப் பட்டியலிட்டால் 50 பேராவது வருவார்கள். அந்தப் பட்டியலில் வடிவேலுவுக்கும் முக்கியமான இடமுண்டு. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், நோயாளிகள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று வடிவேலுவை ரசிக்காத தமிழர்களே கிடையாது. சரியாகச் சொல்லப்போனால் இளையராஜா வுக்குப் பிறகு எல்லாத்தரப்பு தமிழர்களாலும் கொண்டாடப்பட்ட ஆளுமை வடிவேலு.

இதற்கு முன்பும் நகைச்சுவை நடிகர்கள் செல்வாக்கு பெற்று விளங்கினார்கள். ஒரு படத்தை எடுத்து முடித்தபிறகு, ‘இது ஓடுமா, ஓடாதா’ என்று சந்தேகம் வந்தால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் காமெடி டிராக்கைத் தனியாக எடுத்து சேர்த்தது உண்டு. சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு என்று சிறந்த நகைச்சுவை நடிகர்கள் தமிழில் உண்டு. 80-90-களில் தமிழ் சினிமாவில் கவுண்டமணி - செந்தில் ராஜ்ஜியம்தான். கவுண்டமணியும் தனித்துவமான கலைஞர் என்பதிலும் இன்றைக்கும் கவுண்டமணி நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கத்தக் கவை என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், அடித்து உதைப்பது என்பதே அவருடைய நகைச்சுவையின் முதன்மை அம்சம். அதைவிட முக்கியமானது நிறத்தையும் தலை வழுக்கையையும் அவரது பல நகைச்சுவைகள் இழிவுபடுத்தின. செந்திலின் நிறத்தையும் வழுக்கைத் தலையையும் கவுண்டமணி விதவிதமாக வர்ணித்திருக்கிறார். இதில் சுவாரஸ்யமான முரண், கவுண்டமணியின் நிறமும் கறுப்பு; அவர் தலையும் வழுக்கை.

வடிவேலுவின் நகைச்சுவையில் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அவரது நகைச்சுவை, அதற்கு முன்பான தமிழ் சினிமா நகைச் சுவையிலிருந்து தனித்துவம் அடைந்தது, சுய பகடிதான். எல்லா மனிதர்களுக்கும் அவரவர்கள்தான் ஹீரோ; சாகச நாயகர்கள். ஆனால், வெளியில் ஆயிரம் உதார் வீரம் காட்டினாலும் உள்ளுக்குள் அவர்கள் யார் என்பது அவர்களுக்கே தெரியும். இதைக் காட்சிப்படுத்தியதுதான் வடிவேலு நகைச்சுவையின் வெற்றி. அவர் தன்னைத்தானே கிண்டலடித்துக்கொண்டார் சார்லி சாப்ளினைப்போல. ஆனால், அது பார்வையாளர்களுக்கான சுயவிமர்சனமாக அமைந்தது.

எல்லா மனிதர்களும் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், நிறத்தின் பெயரால், பால் அடையாளத் தின் பெயரால், அரசியலின் பெயரால், பார்க்கும் வேலையின் பெயரால், பதவியின் பெயரால் அதிகாரம் செய்ய ஆசைப்படுகிறோம். ஆனால், அத்தனையும் உதார் வீரம் என்பதை வெளிப்படையாகப் போட்டுடைத்தன வடிவேலுவின் காமெடிகள். கைப்புள்ள, பேக்கரி வீரபாகு, படித்துறை பாண்டி, நாய் சேகர் முதல் இம்சை அரசன் வரை இந்த உதார் வீரத்தைக் கிண்டலடித்தன. இது பார்வையாளர்களான தங்களையும் சேர்த்தே கிண்டலடிக்கின்றன என்று தெரிந்துதான் தமிழர்கள் ஆரவாரமாக ரசித்தார்கள்.

வடிவேலு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதைவிடவும் முதலில் அவர் நல்ல நடிகர். சில நகைச்சுவை நடிகர்கள் வசனங்களால் அசத்து வார்கள். சிலருக்கு உடல்மொழி; சிலருக்கு முகபாவனைகள். ஆனால் வசனம், உடல்மொழி, முகபாவனை என அத்தனையிலும் அசத்திய நகைச்சுவைக் கலைஞர் என்றால் அது வடிவேலுதான். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வொருவிதமான தோற்றம்; ஒவ்வொருவிதமான முகபாவனை; ஒவ்வொரு விதமான உடல்மொழி எனத் தனித்துவம் பேணியதில் வடிவேலு கிட்டத்தட்ட சிவாஜிக்கு இணையானவர். வெறும் நடிப்பு மட்டுமல்லாமல் சந்திரபாபு, ஆச்சி மனோரமாவுக்கு அடுத்த படியாக நடனத்திலும் பாடுவதிலும் அசத்தியவர் வடிவேலு.

வெளியில் ஆயிரம் உதார் வீரம் காட்டினாலும் உள்ளுக்குள் அவர்கள் யார் என்பது அவர்களுக்கே தெரியும். இதைக் காட்சிப்படுத்தியது தான் வடிவேலு நகைச்சுவையின் வெற்றி.

பல திறமையான நகைச்சுவைக் கலைஞர்கள் உணர்ச்சிமயமான காட்சிகளில் நடிக்கத் தடுமாறுவார்கள். ஆனால், வடிவேலு இரண்டிலும் அசகாய சூரர். ‘தேவர் மகன்’, ‘எம்டன் மகன்’, ‘சங்கமம்’ என அவரது குணச்சித்திரக்காட்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ‘பொற்காலம்’ படத்தில் வாய் பேசாத தன் தங்கைக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று வருந்தும் முரளியிடம், “ஊரெல்லாம் மாப்பிள்ளை தேடினியே, ‘என் தங்கச்சியைக் கட்டிக்கிறியா?’ன்னு என்கிட்ட கேட்க உனக்குத் தோணுச்சா?” என்று வடிவேலு கேட்கும் ஓர் இடம் போதும், அவரது நடிப்புத்திறமையைச் சொல்ல.

பல நகைச்சுவை நடிகர்கள் சீரியஸான வேடங்கள் ஏற்று நடிக்கும் போது நம்மையறியாமல் சிரிப்பு வந்துவிடும். ஆனால் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’யில் இம்சை அரசனாக மட்டுமல்லாமல் புரட்சியாளன் உக்கிரபுத்தன் வேடத்திலும் வடிவேலு நடித்திருப்பார். நாம் ஓரிடத்தில்கூட சீரியஸ்தன்மை குன்றியிருக்க மாட்டோம். ‘நாடோடி மன்ன’னில் எம்.ஜி.ஆரும் ‘உத்தமபுத்திர’னில் சிவாஜியும் ஏற்று நடித்த பாத்திரங்கள் அவை. ஆனால், திறமையாகக் கையாண்டிருப்பார் வடிவேலு. எல்லாவகையான பாத்திரங்களிலும் இயல்பான நடிப்பைத் தர முடியும் என்பது வடிவேலுவின் தனிச்சிறப்பு.

“அது போனமாசம். நான் சொல்றது இந்த மாசம்” என்று வார்த்தைகளுக்குள் இருந்த அர்த்தங்களைக் கலைத்து விளையாடியவை வடிவேலுவின் நகைச்சுவைகள்.

அதேபோல் வடிவேலு நகைச் சுவையின் இன்னொரு தனித்துவமான அம்சம், அவர் மொழியை ஒரு விளையாட்டுக் கருவியாக மாற்றியது. ‘வர்ரும் ஆனா வராது’, ‘ஏன்ன்ன்?’, ‘ரொம்ப்ப நல்லவன்னு சொல்லிட் டாங்கம்மா’

“எனக்குக் கோபம் வராது....”

“வந்தா என்ன பண்ணுவே?”

“அதான் வராதுங்கிறேன்ல, அதை ஏன்யா எதிர்பார்க்கிறீங்க?”

“இதுவரைக்கும் என்னை யாரும் தொட்டதில்லை”

“போனமாசம்தானே அடிச்சேன்”

“அது போனமாசம். நான் சொல்றது இந்த மாசம்” என்று வார்த்தைகளுக்குள் இருந்த அர்த்தங் களைக் கலைத்து விளையாடியவை வடிவேலுவின் நகைச்சுவைகள். ‘அடிச்சுக்கூட கேட்பாய்ங்க, அப்பக்கூட சொல்லிடாதீங்க’ என்பதிலும் ‘இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்’ என்பதிலும் கடைசிவரை எதைச் சொல்கிறார்கள் என்று சொல்லாத, நவீனக் கவிதை போன்ற நகைச்சுவைக் காட்சிகள்தாம்.

மொழி, உச்சரிப்பு, முகபாவனை, உடல்மொழி என்று தலை முதல் கால்வரை ஒவ்வொன்றையும் ரசனைக்குரியதாக மாற்றிய வடிவேலு எப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களின் நினைவிலிருந்து அகல மாட்டார். ஏனென்றால் புயலே, உங்க பில்டிங் மட்டுமல்ல; பேஸ்மென்ட்டும் எப்பவுமே ஸ்ட்ராங்குதான்!