Published:Updated:

"சேது படத்துக்காக நிறைய கஷ்டப்பட்டேன்; பாலா சார் அவாய்டு பண்ணினதுக்கு என்ன காரணம்னு தெரில"- அபிதா

'திருமதி செல்வம்' அபிதா

எங்க வீட்ல என்னை ஜெனின்னு கூப்பிடுவாங்க. படத்துக்காக அபிதான்னு மாத்தினாங்க. திருமதி செல்வம் சீரியலுக்கு பிறகு எல்லாரும் அர்ச்சனான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. இப்பவரைக்கும் அர்ச்சனாவை யாரும் மறக்கல!

"சேது படத்துக்காக நிறைய கஷ்டப்பட்டேன்; பாலா சார் அவாய்டு பண்ணினதுக்கு என்ன காரணம்னு தெரில"- அபிதா

எங்க வீட்ல என்னை ஜெனின்னு கூப்பிடுவாங்க. படத்துக்காக அபிதான்னு மாத்தினாங்க. திருமதி செல்வம் சீரியலுக்கு பிறகு எல்லாரும் அர்ச்சனான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. இப்பவரைக்கும் அர்ச்சனாவை யாரும் மறக்கல!

Published:Updated:
'திருமதி செல்வம்' அபிதா
'திருமதி செல்வம்' தொடர் என்றால் அபிதா தான் சட்டென நினைவுக்கு வருவார். வெள்ளித்திரை, சின்னத்திரை என பயணித்துக் கொண்டிருந்தவர் கொரோனா லாக்டவுன் சமயத்தில் நடிப்பிற்கு குட்டி பிரேக் எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வந்தார். இந்நிலையில், ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'மாரி' தொடரின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் அவரை சந்தித்துப் பேசினோம்.
அபிதா
அபிதா

ஏற்கெனவே ரெண்டு சீரியல்களில் கேட்டாங்க. அப்போதெல்லாம் வேண்டாம்னு மறுத்துட்டேன். இப்போதைக்கு வேண்டாம் என்கிற ஐடியாவில்தான் இருந்தேன். இந்த சீரியலின் புரொடக்‌ஷன் தரப்பில் உள்ளவங்க பர்சனலா எனக்குத் தெரியும் என்பதால் மறுப்பு சொல்ல முடியல. அதுமட்டுமில்லாம இந்தக் கேரக்டர் என் நிஜ கேரக்டருடன் பொருந்தும்படி இருக்கிறதால உடனே சம்மதிச்சிட்டேன் என்பவரிடம் 'திருமதி செல்வம்' அர்ச்சனா குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேது படத்தில் விக்ரமுடன் அபிதா
சேது படத்தில் விக்ரமுடன் அபிதா

எங்க வீட்ல என்னை ஜெனின்னு கூப்பிடுவாங்க. படத்துக்காக அபிதான்னு மாத்தினாங்க. `திருமதி செல்வம்' சீரியலுக்குப் பிறகு எல்லாரும் அர்ச்சனான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. இப்பவரைக்கும் அர்ச்சனாவை யாரும் மறக்கல. இங்கே ஷூட் பார்க்க வந்தவங்க எல்லாரும் அர்ச்சனா வந்திருக்காங்கன்னுதான் சொல்றாங்க. அந்த அளவுக்கு இன்னும் மக்கள் மனசுல இருக்கேன்னு ரொம்பவே சந்தோஷம் என்றவர் `சேது' பட அனுபவம் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.

சேது படத்துல நடிக்கிறதுக்கு முதலில் என்னை செலக்ட் பண்ணவே இல்ல. அந்தப் படத்துக்கு முன்னாடி நான் சீரியலிலும், சில படங்களில் 2-வது ஹீரோயினாகவும் நடிச்சிட்டு இருந்தேன். அவர் அந்தப் படத்துக்கு புதுமுகமாக இருக்கணும்னுதான் ரொம்ப தேடியிருக்கார். பலரை ஆடிஷன் பண்ணி பார்த்திருக்கிறார். அவருக்கு யாரும் செட்டாகலைன்னு கடைசியா என்னையே அந்தக் கேரக்டரில் நடிக்கச் சொன்னார். எனக்கு டான்ஸ் எல்லாம் சுத்தமா ஆடத் தெரியாது. நான் நல்லா பண்ணலைன்னு எல்லார் முன்னாடியும் திட்டிட்டாரு. அம்மாக்கிட்ட இங்க இருக்கிறதுக்கே பிடிக்கல. விட்டுட்டு போயிடலாம்னு சொல்லி ரொம்ப அழுதேன். அன்னைக்கு முழுக்க பாலா சார் திட்டினதை நினைச்சு சாப்பிடாம அழுதுட்டே இருந்தேன். என் சிஸ்டர் போன் பண்ணி படம்னா இப்படித்தான் இருக்கும். பாரதிராஜா சாரெல்லாம் ஆர்ட்டிஸ்ட்டை அடிச்சிடுவாரு. இவர் திட்ட தானே செய்தார்னு அட்வைஸ் பண்ணினாங்க. நான் அழுதுட்டே இருந்ததால அன்னைக்கு என் ஷாட் எதுவுமே எடுக்க முடியல. மறுநாள் சார்கிட்ட போய் சாரி கேட்டேன். அவர் நீங்க நல்லா நடிக்கணும்னு தானே நான் திட்டினேன்னு சொன்னார். அதுக்குப் பிறகு ரொம்ப கவனமா நடிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு சீன் நடிச்சு முடிச்சதும் அவர்கிட்ட சரியா பண்ணியிருக்கேனான்னு கேட்டுட்டே இருந்தேன்.

அபிதா
அபிதா

என்னை கடத்திட்டு போகிற மாதிரி ஒரு சீன் வரும். அந்த சீனில் என்னை தள்ளி விடுற மாதிரி காட்சிகள் இருக்கும். நிஜமாகவே என்னை தள்ளி விடுங்கன்னு சொன்னேன். அப்படி அந்தக் கேரக்டருக்காக என் பக்கத்துல இருந்து ரொம்பவே உழைச்சேன். அந்த சீன் முடிச்சிட்டு எப்படி பண்ணியிருக்கேன்னு கேட்டப்ப, `சாவித்திரியே தோத்துட்டாங்க போ!. அவ்வளவு நல்லா பண்ணியிருக்க'ன்னு சொன்னார். அவர் வாயிலயிருந்து அப்படி ஒரு வார்த்தை வர்றதெல்லாம் என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய விஷயம். படம் நடிச்சு முடிச்ச பிறகு பல போராட்டத்துக்கு அப்புறமாகத்தான் படமே ரிலீஸ் ஆச்சு. நிறைய பேர் கிளைமாக்ஸ் மாத்தணும்னு சொன்னாங்க. ஆனா, டைரக்டர் இதுதான் என் கிளைமாக்ஸ்னு உறுதியா இருந்தார். அதே மாதிரி படமும் மிகப்பெரிய ஹிட் ஆச்சு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

படம் நடிச்ச பிறகு எந்த பிரஸ்மீட்டிற்கும் என்னை கூப்பிடவே இல்ல. எனக்கு இளையராஜா சாரை ரொம்பப் பிடிக்கும். அவர்கிட்ட ப்ரிவ்யூ காட்டும்போதும் என்னை கூப்பிடவே இல்ல. எனக்கு அந்த சமயம் ஃபேமிலியை மெயின்டெயின் பண்ணனும் என்கிற சூழல் இருந்தது. பாலா சார் எந்த புராஜக்ட்டும் பண்ண வேண்டாம்னு சொன்னார். என் சூழ்நிலைக்காக நான் அடுத்து படங்களில் நடிச்சேன். அது அவருக்கு பிடிக்கலையான்னு தெரியல. என்னை எதுக்குமே கூப்பிடல. ஆனா, இந்தப் படத்துக்காக நானும் நிறைய ஹார்ட் ஒர்க் பண்ணியிருக்கேன். இதுவரைக்கும் என்னை அவாய்டு பண்ணினதுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியல.. நானும், அதை பெருசா எடுத்துக்கல. பிறகு தான் எனக்கு சினிமாவைவிட சீரியலே பெட்டர்னு தோணுச்சு. அதனால சீரியலில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன் என்றவரிடம் விக்ரம் குறித்துக் கேட்டோம். விக்ரம் சார் நல்ல நடிகர். எந்தக் கேரக்டரில் நடிக்கிறாரோ அந்தக் கேரக்டராகவே வாழணும்னு நினைப்பாரு. கருப்பா தெரியணும்னு 15 நாட்களுக்கும் மேலாக வெயிலிலேயே உட்கார்ந்துட்டு இருந்தார். மேக்கப் எதுவும் இல்லாம ரியலா அந்த லுக் வரணும்னு மெனக்கிட்டார் என்றவர் 'திருமதி செல்வம்' குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அபிதா
அபிதா

நடிப்புத்துறையை விட்டுட்டு கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிடலாம் என்கிற முடிவுடன் இருந்தப்ப தான் டைரக்டர் குமரன் சாரும், ராதா மேமும் என்னை சந்திச்சு 'திருமதி செல்வம்' தொடர் பற்றி சொன்னாங்க. அவங்க என்னை செலக்ட் பண்ணிடக் கூடாதுங்கிற எண்ணத்துல தலைக்கு எண்ணெய் வச்சு ஜடை பின்னி உட்கார்ந்திருந்தேன். அவங்க கதையெல்லாம் சொல்லிட்டு நாளையில் இருந்து ஷூட்டிங் வந்துடுங்கன்னு சொல்லிட்டாங்க. இப்ப எப்படியான லுக்கில் இருக்கீங்களோ அதே லுக்ல அப்படியே வாங்கன்னு சொல்லிட்டாங்க. அப்படித்தான் அந்தத் தொடரில் நடிச்சேன். என் திருமணத்துக்கு முன்னாடி நடிக்க ஆரம்பிச்ச சீரியலில் எனக்கு குழந்தை பிறக்கும் வரைக்கும் நடிச்சது எப்பவும் மறக்க முடியாத ஸ்பெஷல் தருணம்! எனக்கு 6 வருஷம் ஒரு நல்ல புராஜக்ட் கொடுத்ததால தான் என் வீட்டுக்கடனை என்னால அடைக்க முடிஞ்சது. என்றைக்குமே நான் விகடனிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!' என நெகிழ்ச்சியுடன் பேசினார்.