Published:Updated:

நான் நடித்து, எனக்குள் தாக்கம் தந்த 3 படங்கள்!" - ஆண்ட்ரியா ஷேரிங்ஸ்

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

சினிமாப் பயணம் நல்லாவே இருக்கு. நான் பண்ணுற ஒவ்வொரு படமுமே என்னை நிறைய மாத்தியிருக்கு

ஆண்ட்ரியா... திறமையான நடிகை, தேன்குரல் பாடகி. லாக்டெளனில் இசையும் இன்ஸ்டாக்களுமாக இருந்தவரிடம் பேசினேன்.

'`சினிமாவுக்கு நடிக்க வந்து 13 வருஷங்கள் ஆகின்றன... எப்படி இருக்கு இந்தப் பயணம்?''

'`13 வருஷம் ஆகிடுச்சா? நீங்க சொல்லித்தான் தெரியுது. பழசையெல்லாம் நான் திரும்பிப் பார்க்கிறதே இல்லை. எப்பவும் முன்னோக்கித்தான் போய்ட்டிருக்கணும்னு நினைப்பேன். அப்படியே திரும்பிப் பார்த்தாலும் நான் பண்ணுன தப்புகளையெல்லாம் திரும்பச் செய்யக்கூடாது, அவற்றிலிருந்து என்ன நான் கத்துக்கிட்டேன்னுதான் பார்ப்பேன்.

சில நேரத்துல இதையெல்லாம் விட்டுட்டு எங்கேயாவது காட்டுக்குள்ள போய் வாழ்ந்திடலாம்னுகூட நினைச்சிருக்கேன். ஆனாலும், சினிமாப் பயணம் நல்லாவே இருக்கு. நான் பண்ணுற ஒவ்வொரு படமுமே என்னை நிறைய மாத்தியிருக்கு.”

'`என்ன மாதிரியான மாற்றங்கள்?''

``மாற்றங்கள்னு சொல்றதைவிட, எனக்குள்ள இருக்கிற நிறைய விஷயங்களை என்னுடைய எல்லாப் படங்களும் உணர வெச்சிருக்கு. குறிப்பிட்டுச் சொல்லணும்னா, 'அன்னையும் ரசூலும்', 'தரமணி', 'வடசென்னை' படங்களைச் சொல்லுவேன்.

அதுவும் 'வடசென்னை' சந்திரா எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நிஜத்துல ஆண்ட்ரியா, சந்திரா மாதிரி கிடையாது. ஆனா, சந்திரா கதாபாத்திரம் நடிக்கும்போது நான் தமிழ்ப்பொண்ணுங்கற உணர்வு எனக்குள்ள பயங்கரமா வந்தது. இந்த மாதிரி ஒவ்வொரு படமுமே எனக்குள்ள ஏதோவொரு தாக்கத்தை ஏற்படுத்திட்டுதான் இருக்கு.”

'`உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள், சர்ச்சைகளை எப்படி எடுத்துப்பீங்க?''

``ஆரம்பத்துல பயங்கரமா கோபப்படுவேன். ஆனா, இப்பெல்லாம் நோ ரியாக்‌ஷன். மனசு கஷ்டப்படும்தான், ஆனா அப்படியே விட்டுருவேன். ஏன்னா, நூறு பேர் நூறு விதமா பேசுவாங்க.

நான் நடித்து, எனக்குள் தாக்கம் தந்த 3 படங்கள்!" - ஆண்ட்ரியா ஷேரிங்ஸ்

ஆனா, எனக்குத்தான் என் வாழ்க்கையில என்ன நடந்தது, என்னச் சுத்தி என்ன நடக்குதுன்னு உண்மை தெரியும். உங்க வாழ்க்கைல உங்களைப் பத்தி யாருக்குத் தெரியுமோ அவங்க உங்களைப் புரிஞ்சுக்கிட்டா போதும். ஒவ்வொருத்தருக்கும் உங்களை விளக்கியே ஆகணும்னு எந்த அவசியமும் கிடையாது.”

- ஆனந்த விகடன் இதழுக்கு ஆண்ட்ரியா அளித்துள்ள சிறப்புப் பேட்டியை முழுமையாக வாசிக்க > “பயங்கர விஜய் ரசிகை ஆயிட்டேன்!” Click here https://bit.ly/2As1rTT

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு