Published:Updated:

`புயலால் சரிந்த மரத்தின் முன் போட்டோஷூட்டா?' - விமர்சனங்களுக்குள்ளான நடிகையின் இன்ஸ்டா பதிவு!

Deepika singh ( Photo: Instagram/deepikasingh150 )

இந்த மழையில் நடிகை தீபிகா சிங் எடுத்த போட்டோவும், அதுதொடர்பான இன்ஸ்டாகிராம் போஸ்ட்டும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

`புயலால் சரிந்த மரத்தின் முன் போட்டோஷூட்டா?' - விமர்சனங்களுக்குள்ளான நடிகையின் இன்ஸ்டா பதிவு!

இந்த மழையில் நடிகை தீபிகா சிங் எடுத்த போட்டோவும், அதுதொடர்பான இன்ஸ்டாகிராம் போஸ்ட்டும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

Published:Updated:
Deepika singh ( Photo: Instagram/deepikasingh150 )

குஜராத்தில் கரையைக் கடந்த `டவ்-தே' புயல் தற்போது வரை 13 உயிர்களைப் பறித்துள்ளது. 160 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் கிட்டத்தட்ட 16,000 வீடுகள் சேதமடைந்திருக் கின்றன. ஏறக்குறைய 40,000 மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்ததோடு மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததாலும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர் குஜராத் மக்கள். குஜராத் கடற்கரைப் பகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான டையூ பகுதிகள், `டவ்-தே' புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கொரோனா அச்சம் மிரட்டிக்கொண்டிருக்க, இச்சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான மீட்புப்பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, இந்த மழையில் நடிகை தீபிகா சிங் எடுத்த போட்டோவும், அதுதொடர்பான இன்ஸ்டாகிராம் போஸ்ட்டும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

தீபிகா சிங்
தீபிகா சிங்
Photo: Instagram/deepikasingh150

``வாழ்க்கை என்பது துயரங்கள் வந்தால் ஓய்ந்துவிடுவது அல்ல. புயலோ மழையோ எது வந்தாலும் அதையும் சந்தோஷமாக ஏற்று வாழப் பழகிக்கொள்வதே வாழ்க்கை" என்ற வரிகளுடன் மழையில் சாலையில் ஆடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் தீபிகா. இந்தப் பதிவு விரைவில் இணையத்தில் வைரலாகவே அதைத் தொடர்ந்து விமர்சனங்களும் எழத்தொடங்கின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பாசிட்டிவிட்டியை பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில், `புயலை ரசிக்கப் பழகுங்கள்' என்றது சரிதான். அதேவேளை, பலரையும் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கும் இந்தப் புயலின்போது இப்படி கொண்டாட்டமான மனநிலையோடு புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவது சரியானது அல்ல. கொரோனா மற்றும் புயலால் பலரும் இக்கட்டான சூழலில் உயிருக்காகப் பலர் போராடிக்கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற நிலையில் இப்படிப்பட்ட பதிவுகளை வெளியிடுவதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்" என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

``அதுவும் பிரபலமாக இருக்கும் ஒருவர் இப்படி புயலால் சாய்ந்த மரத்தின் முன்நின்று படம் எடுப்பதை ஊக்குவிக்கலாமா?" எனவும் கேள்வியெழுப்பினர். இந்நிலையில் இன்று இதுகுறித்து ஊடகங்களிடம் பேசியுள்ள தீபிகா, ``நாங்கள் ஒரு அபார்ட்மென்ட்டில் தரைதளத்தில் வசிக்கிறோம். அந்த மரத்தை பல வருடங்களுக்கு முன்பு நாங்கள்தான் நட்டோம். துரதிர்ஷ்ட வசமாக இந்தப் புயலில் அது வீழ்ந்துவிட்டது. அதுவும் எங்கள் காரின் மீது. எனவே நானும் என் கணவரும் அதை அப்புறப்படுத்துவதற்காக வெளியே வந்தோம். அப்போதுதான் என் கணவர் அந்த மழையில் சில புகைப்படங்கள் எடுக்க விரும்பினார். அவர் அதில் நிபுணரும்கூட. எனவே அப்படித்தான் அந்தப் படங்களை எடுத்தோம். எனவே, அந்த மரத்தின் முன் நின்று படம் எடுத்துக்கொண்டது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனமானது அல்ல; யாரையும் அப்படி செய்ய நான் ஊக்குவிக்கவும் மாட்டேன். புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது" என விளக்கமளித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism