என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சேட்டை பண்ணின கதைகள் -`மேயாத மான்’ இந்துஜா

இந்துஜா
News
இந்துஜா

ஐவர்

நடிகை இந்துஜா தன் வாழ்க்கையின் முக்கியமான ஐந்து நபர்கள் பற்றிப் பகிர்கிறார் இங்கே...

நண்பர்கள்

என் வாழ்க்கையில் எப்போதும் நண்பர்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. காலேஜ் தோழி பூரணியும், சினிமா தோழி அதுல்யாவும் ரொம்ப நெருக்கம். இவங்க ரெண்டு பேர்கிட்டயும் எல்லா விஷயங்களையும் ஷேர் பண்ணிக்குவேன். என்னுடைய பெஸ்ட்டை வெளிக்கொண்டு வந்ததுல முக்கியமான நபர் பூரணிதான்!

தோழியுடன்...
தோழியுடன்...

அம்மா கீதா

அம்மா, எனக்கு மட்டுமில்ல... எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அவங்க தனக்குன்னு செஞ்சுகிட்டதைவிட, எங்களுக்காக செஞ்சதுதான் அதிகம். அம்மாங்கிற ஒரு விஷயமே போதும், அவங்க எனக்கு எவ்வளவு முக்கியம் என்கிறதைச் சொல்ல.

தாத்தா ஆனந்தன்

இந்துஜா
இந்துஜா

என்னுடைய நல்ல குணங்கள் எல்லாமே தாத்தாகிட்ட இருந்து வந்ததுதான். என்னுடைய படம், பேட்டி, நிகழ்ச்சி எது வந்தாலும் டி.வில பார்க்கிறது, நியூஸ்பேப்பர் கட்டிங் எடுத்து வைக்கிறதுன்னு தாத்தா விடாமல் பண்ணுவார்.

அவருக்கு நான் ரொம்ப செல்லம். சின்ன வயசுல என்னை ஸ்கூலுக்குக் கொண்டுபோய் விடும்போது தாத்தாவை விட்டுட்டுப் போறோமேன்னு பயங்கரமா அழுது சேட்டை பண்ணின கதைகள் நிறைய இருக்கு!

அண்ணா கெளதம்

அண்ணனுடன் இந்துஜா...
அண்ணனுடன் இந்துஜா...

என் அண்ணாவும் நானும் டாம் அண்டு ஜெர்ரி மாதிரிதான். பயங்கரமா சண்டை போட்டுக்குவோம். ரொம்ப சரியா சொல்லணும்னா, ‘மேயாத மான்’ படத்துல வர்ற அண்ணன் - தங்கச்சி போலவே நாங்க ரியல் லைஃப்லயும். ஆனாலும், ஒருத்தருக்கொருத்தர் விட்டுகொடுக்க மாட்டோம்.

வீட்டுல என்னை சினிமாவுக்குள் அனுமதிச்சதுக்கு முக்கியமான காரணம் என் அண்ணா இருக்கற தைரியம்தான். எனக்கான தேவைகள் எல்லாமே அவன்தான் பார்த்துப்பான். எனக்குச் சாப்பாடுன்னா ரொம்பவே பிடிக்கும். ஆனா, நான் டயட்ல இருந்தே ஆகணும்னு சாப்பிடக்கூட விடாத பாசக்கார அண்ணன், அவன்!

இயக்குநர் ரத்னகுமார்

இயக்குநர் ரத்னகுமார் இந்துஜா
இயக்குநர் ரத்னகுமார் இந்துஜா

சினிமாவில் மறக்கமுடியாத முக்கியமான நபர் ‘மேயாத மான்’ படத்தின் இயக்குநர் ரத்னகுமார். அந்தப் படத்துல கேரக்டர் செலக்‌ஷனுக்காக போயிருந்த போது, அங்கே இருந்த டிஷ்யூல ஏதோ ஓவியம் மாதிரி கிறுக்கி வெச்சிருந்தேன். அதைப் பத்திரமா வெச்சிருந்து படம் ரிலீஸ் ஆன பிறகு எனக்கு போட்டோ எடுத்து அனுப்பியிருந்தார். ஸ்வீட் சர்ப்ரைஸ் அது!

இதேபோல என்னுடைய ஒவ்வொரு பட இயக்குநரும் ரொம்ப முக்கியமானவங்க. எனக்குள் இருந்த நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வந்த குருநாதர்கள் அவங்கதானே!