Published:Updated:

"அவளுக்கு எதை பொதுவெளியில் பேசணும்னு தெரியாது" - வீடியோ பதிவிட்ட நக்‌ஷத்ரா

நக்‌ஷத்ரா - ஶ்ரீநிதி

எங்கேயும் விடாம வச்சிருக்காங்க அப்படியெல்லாம் சொல்லிட்டு இருக்காங்க. நான் நல்லாதான் இருக்கேன்.

"அவளுக்கு எதை பொதுவெளியில் பேசணும்னு தெரியாது" - வீடியோ பதிவிட்ட நக்‌ஷத்ரா

எங்கேயும் விடாம வச்சிருக்காங்க அப்படியெல்லாம் சொல்லிட்டு இருக்காங்க. நான் நல்லாதான் இருக்கேன்.

Published:Updated:
நக்‌ஷத்ரா - ஶ்ரீநிதி

சமீபத்தில் நடிகை ஶ்ரீநிதி அவருடைய தோழி நக்‌ஷத்ரா குறித்து லைவ் வீடியோவில் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அதில், நக்‌ஷூ பாதுகாப்பாக இல்லை. அவள் காதலிப்பவர் குடும்பமே அவளை லாக் செய்து வைத்திருக்கிறது. நக்‌ஷூவை மீட்க உதவுங்கள் என பல விஷயங்களைப் பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று நக்‌ஷத்ரா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில்,

நக்‌ஷத்ரா - ஶ்ரீநிதி
நக்‌ஷத்ரா - ஶ்ரீநிதி

'ஒரு மூன்று, நான்கு நாட்களாக நான் ஏதோ பிரச்னையில் இருக்கேன்னு வதந்தி பரவிகிட்டு இருக்கு. என்னை யாரோ கட்டாயப்படுத்தி பிடிச்சு வச்சிருக்காங்க. எங்கேயும் விடாம வச்சிருக்காங்க அப்படியெல்லாம் சொல்லிட்டு இருக்காங்க. நான் நல்லாதான் இருக்கேன். தினமும் ஷூட்டிங் போயிட்டு வந்துட்டு தான் இருக்கேன். எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. இது தொடர்பா அன்னைக்கே வீடியோ பதிவிடணும்னு நினைச்சேன். ஶ்ரீநிதியை ஃபாலோ பண்றவங்களுக்கு நல்லாவே தெரியும்... அவள் ஏதோ சிறிய மன அழுத்தத்தில் இருக்கா, அதனால தான் நீங்க அதை பெருசா எடுத்துக்க மாட்டீங்கன்னு நானும் அப்படியே விட்டுட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனா, நீங்க எல்லாரும் என் மேல உள்ள அக்கறையில் எப்படி இருக்கேன்னு தொடர்ந்து கேட்டுட்டே இருந்தீங்க... நிஜமா எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. ரொம்ப பாதுகாப்பா சந்தோஷமா இருக்கேன். நிம்மதியா இருக்கேன். யாரும் இந்த செய்தியை ரொம்ப பெருசாக்காதீங்க. சின்ன விஷயம்தான்! அவளுக்கு எது பொது வெளியில் பேசணும்.. எது தனிப்பட்ட முறையில் பேசணும்னு தெரியாது! அவ ஏதேதோ பண்ணிட்டு இருக்கா. அதை நீங்க பெருசு பண்ணாதீங்க. விட்டுடுங்க! நிஜமா நான் சந்தோஷமா இருக்கேன்!' என கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism