Published:Updated:

``சூர்ய வம்சம் படத்துல வர்ற அந்தக் குழந்தையே நான்தான்!" - நிவாஷினி திவ்யா

நிவாஷினி திவ்யா

நானே நக்‌ஷத்ராகிட்ட நீங்க யாரையும் தப்பா பேச வேண்டாம் ஆனா நீங்க நல்லா இருக்கிறதை உங்க ரசிகர்கள்கிட்ட சொல்லுங்கன்னு சொன்னேன்! - நிவாஷினி திவ்யா

``சூர்ய வம்சம் படத்துல வர்ற அந்தக் குழந்தையே நான்தான்!" - நிவாஷினி திவ்யா

நானே நக்‌ஷத்ராகிட்ட நீங்க யாரையும் தப்பா பேச வேண்டாம் ஆனா நீங்க நல்லா இருக்கிறதை உங்க ரசிகர்கள்கிட்ட சொல்லுங்கன்னு சொன்னேன்! - நிவாஷினி திவ்யா

Published:Updated:
நிவாஷினி திவ்யா
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர் `புதுப்புது அர்த்தங்கள்'. இந்தத் தொடரின் நடிகை, தயாரிப்பாளர் நிவாஷினி திவ்யா. பரபரப்பான ஷூட்டிங் இடைவேளையில் அவரைச் சந்தித்தோம்.
நிவாஷினி திவ்யா
நிவாஷினி திவ்யா

சின்ன வயசில இருந்தே மீடியா எனக்கு பரிச்சயமாகிடுச்சு. என் வாழ்க்கையில் எதார்த்தமா அமைஞ்சதுதான் இந்தத் துறை. குழந்தை நட்சத்திரமா கிட்டத்தட்ட 50 படங்களில் நடிச்சிருக்கேன். `சூர்யவம்சம்' படத்தில் வருகிற குழந்தை நான் தான். அப்படி மீடியாவிலேயே இருந்ததனால வளர்ந்த பிறகும் அதிலேயே கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன்.

படிப்பு முடிஞ்சதும் பல சீரியல்களில் நடிச்சுகிட்டு இருந்தேன். ஒரு ஆறு வருஷம் கடினமா முயற்சி பண்ணி ஜீ தமிழில் தயாரிப்பாளராக `நீதானே என் பொன் வசந்தம்' தொடர் மூலம் அறிமுகமானேன். என் அப்பாவும், அம்மாவும் என் மிகப்பெரிய பலம். எனக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணன். அக்கா வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டில் ஆகிட்டாங்க. அண்ணன் விஷ்வா அவர் பார்த்துட்டு இருந்த வேலையை விட்டுட்டு எனக்கு உதவியா இருக்கணும்னு மீடியாக்கு வந்துட்டான். ஆரம்பத்தில் மீடியா பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாது. இப்ப என்னைவிட அதிகமா இதில் உள்ள நுணுக்கங்கள் எல்லாம் அவனுக்கு தெரியும்னா பார்த்துக்கோங்க! அந்த அளவுக்கு அவனே தன்னை அப்டேட் பண்ணிக்கிட்டான். ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனாலும், என் அண்ணன் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்!

நிவாஷினி திவ்யா
நிவாஷினி திவ்யா

புரொடியூசரான பிறகு பலரும் நான் வேற சீரியல்களில் நடிக்க மாட்டேன்னு தவறா புரிஞ்சுகிட்டு இருக்காங்க. உண்மையில அப்படியெல்லாம் இல்லைங்க... எனக்கு புரொடெக்‌ஷன் பிடிக்கும்தான்... ஆனாலும், அதைவிட நடிக்கிறது ரொம்பப் பிடிக்கும். நான் யார்கிட்டேயும் இனி நான் தயாரிக்கிற தொடரைத் தவிர வேற தொடரில் நடிக்க மாட்டேன்னுலாம் சொல்லலை. அவங்களாகவே தவறா புரிஞ்சுக்கிட்டிருக்காங்க. வாய்ப்பு வந்தால் நடிக்கிறதுக்கு நிச்சயம் நான் தயார்! என்றவரிடம் நக்‌ஷத்ரா குறித்துக் கேட்டோம்.

நானும், நக்‌ஷத்ராவும் ஒரே சீரியலில் நடிச்சதில்லை. ஆனால் ரியாலிட்டி ஷோவில் அவங்களைப் பார்த்திருக்கேன். அவங்க எப்பவும் அவங்க ஃப்ரெண்ட்ஸ்கூட ஏதாச்சும் பேசி, சிரிச்சிட்டு இருப்பாங்க. பிரைம் டைம் தொடரின் ஹீரோயின். அவங்களை பார்க்கும்போது ரொம்ப ஆட்டிட்யூட் இருக்கும்னு நினைச்சேன். ஆனா, பழக ஆரம்பிச்ச பிறகுதான் அவங்க ரொம்ப ஸ்வீட் என்கிற விஷயமே தெரிஞ்சது. அவங்களுடைய நண்பர்களுக்கு அவங்க கொடுக்கிற முக்கியத்துவம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றவரிடம் நக்‌ஷத்ராவின் தோழி ஶ்ரீநிதி பேசிய வீடியோ பற்றிக் கேட்டோம்.

நிவாஷினி திவ்யா
நிவாஷினி திவ்யா

அவங்க லைவ் பார்த்தவுடன் நக்‌ஷத்ராவுக்கு போன் பண்ணி பேசினேன். `அவ ஏன் இப்படி பேசினான்னே தெரியலைன்னு' சொன்னாங்க. அவங்ககிட்ட நீங்க ஃப்ரீயா விடுங்கன்னு சொல்லி அவங்களைச் சமாதானம் பண்ணிட்டேன். ஆனா, அந்த நியூஸ் ரொம்ப தப்பா பரவ ஆரம்பிச்சதும் நானே நக்‌ஷத்ராகிட்ட நீங்க யாரையும் தப்பா பேச வேண்டாம். ஆனா நீங்க நல்லா இருக்கிறதை உங்க ரசிகர்கள்கிட்ட சொல்லுங்கன்னு சொன்னேன். சித்துவோட அவங்களை கம்பேர் பண்ணி ஶ்ரீநிதி பேசினது அவங்களை ரொம்பவே காயப்படுத்திடுச்சு.

அதே மாதிரி, பிரிட்டோ சார் எங்களுடைய சீரியல் புரொடியூசர். அவர் எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட். அவ்வளவு தானே தவிர அவருக்கும், இந்தப் பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதனால அவங்க விஜய் சாரை எல்லாம் இந்தப் பிரச்னைக்கு இழுத்தாங்கன்னு எங்களுக்கே தெரியல. நான் விஜய் சாருடைய தீவிர ரசிகை. அதனால அந்த மாதிரி செய்தி பார்த்தப்ப எனக்கே வருத்தமா இருந்துச்சு. இது நக்‌ஷத்ராவுடைய பர்சனல் விஷயம்.

அவங்க எப்ப அதைப் பற்றி பேசணும்னு விரும்புறாங்களோ அப்ப அவங்களே அதைப் பற்றி பேசுவாங்க. அதுக்குள்ள நாம ஏன் தவறா ஏதேதோ பேசணும்? என்றவரிடம் அவருடைய நெருங்கிய தோழி 'பாண்டவர் பூமி' ஷமிதா குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.

ஷமிதாவுடன் நிவாஷினி திவ்யா
ஷமிதாவுடன் நிவாஷினி திவ்யா

அவங்க என் ஃப்ரெண்ட்னு சொல்றதை விட என் அக்கான்னு சொல்லலாம். என் அம்மாகிட்ட அவங்க யாருன்னு கேட்டா மூத்தப் பொண்ணுன்னு சொல்லுவாங்க. எங்க வீட்ல அவங்க தான் ஃபர்ஸ்ட். அதுக்கப்புறம் தான் என் அக்காவே! அந்த அளவுக்கு ரொம்ப நெருக்கமானவங்க ஷமிதா. நல்லது, கெட்டது எல்லாமே எனக்கு சொல்லிக் கொடுத்ததும் அவங்க தான்! அவங்க அளவுக்கு யாராலும் அத்தனை அக்கறை காட்டிட முடியாது! என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து நிவாஷினி திவ்யா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!