Published:Updated:

"போக்சோ சட்டத்துக்கு இவ்வளவுதான் மதிப்பா?!" கொதித்துப் பேசும் நடிகை ரஞ்சனா நாச்சியார்! என்ன பிரச்னை?

ரஞ்சனா நாச்சியார்

"அவர் மேல நான் கம்ப்ளைன்ட் கொடுத்தப்ப அதை போலீஸ்காரங்க எடுத்துக்கல. ஏன் அவர் மீது எப்ஐஆர் போடலைன்னு கேட்டா, ஆல்ரெடி போக்சோ போட்டிருக்குன்னு பதில் சொல்றாங்க. ஏங்க ரெண்டுமே ஒரே வழக்கா என்ன?"

"போக்சோ சட்டத்துக்கு இவ்வளவுதான் மதிப்பா?!" கொதித்துப் பேசும் நடிகை ரஞ்சனா நாச்சியார்! என்ன பிரச்னை?

"அவர் மேல நான் கம்ப்ளைன்ட் கொடுத்தப்ப அதை போலீஸ்காரங்க எடுத்துக்கல. ஏன் அவர் மீது எப்ஐஆர் போடலைன்னு கேட்டா, ஆல்ரெடி போக்சோ போட்டிருக்குன்னு பதில் சொல்றாங்க. ஏங்க ரெண்டுமே ஒரே வழக்கா என்ன?"

Published:Updated:
ரஞ்சனா நாச்சியார்
"என் மாமனார் என்னை நிர்வாணப்படுத்தி அடித்துக் கொடுமைப்படுத்தினார்" என நடிகை ரஞ்சனா நாச்சியார் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். வெள்ளித்திரை, சின்னத்திரை என இவர் முகம் பரிச்சயம். தவிர இவர் பா.ஜ.க சார்பாக பல பணிகளில் கவனம் ஈர்த்தவர். நடிகையும், வக்கீலுமான இவர் அளித்த புகார் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை சந்தித்துப் பேசினோம்.

"எனக்கு திருமணமாகி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. என் மாமனார், மாமியார் ரெண்டு பேரும் நல்ல பெரிய அரசு வேலையில் இருந்தவங்க. அவங்க ரெண்டு பேருக்கும் நான் நடிக்கிறது சுத்தமா பிடிக்கல. வீட்டுக்குள்ளேயே அவங்களுக்கு அடிமையா இருக்கணும் என்பதுதான் அவங்களுடைய எண்ணம். என் கணவர் மனரீதியா கொஞ்சம் பாதிக்கப்பட்டிருப்பவர். அந்த விஷயத்தை என்கிட்ட இருந்து மறைச்சு எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அவரைப் பற்றித் தெரிஞ்சும் நான் அவரை விட்டுட்டு போகணும்னு நினைக்கல. எல்லாரும் சேர்ந்து வாழலாம்னுதான் நினைச்சேன்.

ரஞ்சனா நாச்சியார்
ரஞ்சனா நாச்சியார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க. அவங்களுக்காகவாச்சும் நான் சம்பாதிச்சுதானே ஆகணும்? கிட்டத்தட்ட 17 வருஷமா அவங்களுடைய திட்டு, அடி எல்லாத்தையும் பொறுத்துட்டுதான் குடும்பம் நடத்திட்டு இருந்தேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி திடீர்னு ஒருநாள் என் கணவரை காரில் எங்கோ கூட்டிட்டு போனாங்க. திரும்பி வரும்போது அவர் கூட வரல. என்னன்னு கேட்டதுக்கும் பதில் சொல்லல. பிறகு போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்த பிறகுதான் என் கணவரை ஒரு ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கிற விஷயமே எனக்குத் தெரிஞ்சது. இப்ப வரைக்கும் அவர் ஹாஸ்பிட்டலில்தான் இருக்கிறார். அப்பப்ப போய் அவரை பார்த்துட்டு வருவேன். அவர் அவங்க அப்பா, அம்மாவுக்கு ரொம்ப பயந்தவர். சின்ன வயசில இருந்து அவரை ரொம்ப அடிச்சுத் துன்புறுத்தியிருக்காங்க. அதோட விளைவுதான் இந்த அளவுக்கு இன்றைக்கு அவர் பாதிக்கப்பட்டு இருக்கார்.

எப்ப நான் ஷூட்டிங் போயிட்டு வந்தாலும் என்கிட்ட பிரச்னை பண்ணுவாங்க. என்னைத் தேடி என் அசிஸ்டென்ட் யாராச்சும் வீட்டுக்கு வந்தா கூட அவங்களைக் கொல்றதுக்காக நான் ஆள் வர வச்சிருக்கேன்னு சொல்லுவாங்க. ரூம்ல என் பசங்க கூட சேர்ந்து காமெடி பார்த்து சிரிச்சா கூட யாரை ரகசியமா ரூமுக்குள் கூட்டிட்டு வந்திருக்கன்னு கேட்பாங்க. என்னை கண்காணிக்கிறதுக்காகவே வீடு முழுக்க சிசிடிவி கேமரா வச்சிருக்காங்க. அன்றைக்கும் நான் ஷூட்டிங் போயிட்டு வீட்டுக்கு வந்தேன். என் மாமனார் பாலியல் ரீதியா என் பொண்ணை கஷ்டப்படுத்தியிருக்கார்ன்னு தெரிஞ்சு அது பற்றி கேட்டேன். எப்பவும் என்னை திட்டி அடிப்பார். அன்றைக்கும் அடிச்சார். நான் அவரை திருப்பி கூட அடிக்கல. அடிக்கிறதை தடுக்கதான் முயற்சி பண்ணினேன். தொடர்ந்து அடிச்சவர் திடீர்னு ஒரு கட்டையை எடுத்துட்டு வந்து சரமாரியா அடிச்சார். அடிச்சிட்டு இருக்கும்போதே என்னை நிர்வாணப்படுத்தி கடுமையா அடிச்சார்.

ரஞ்சனா நாச்சியார்
ரஞ்சனா நாச்சியார்

இத்தனை வருஷமா அவர் என்னை அடிச்சதை சகிச்சிட்டு இருந்துட்டேன். ஆனா, இதுக்கு மேல சகிச்சிட்டு இருக்க முடியாதுன்னுதான் அவர் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனா, அவருடைய அதிகார பலத்தைப் பயன்படுத்தி யாரும் அந்த கம்ப்ளைன்டிற்கு ரெஸ்பான்ஸ் கூட பண்ணல. என் பொண்ணு குழந்தை நல வாரியத்தில் புகார் கொடுக்கவும் அவர் மேல போக்சோ சட்டம் போட்டாங்க. நம்ம நாட்டிலேயே போக்சோதான் மிகப்பெரிய சட்டம்னு சொல்லுவாங்க. அந்தச் சட்டம் ரொம்ப கடுமையானது அப்படின்னும் சொல்லுவாங்க. ஆனா, என் மாமனார் போலீஸ் ஸ்டேஷனிலோ, கோர்ட்டிலோ ஆஜர் ஆகாமலேயே அவருடைய பலத்தைப் பயன்படுத்தி இன்றைக்கு பெயில் வாங்கிட்டு எங்கேயோ தலைமறைவா இருக்கிறார். இவ்வளவுதானா போக்சோ? நம்ம நாட்டோட சட்ட ஒழுங்கு எங்க போயிட்டு இருக்குன்னே தெரியல?

என்னைத் துன்புறுத்தியதற்காக அவர் மேல நான் கம்ப்ளைன்ட் கொடுத்தப்ப அதை போலீஸ்காரங்க எடுத்துக்கல. ஏன் அவர் மீது எப்ஐஆர் போடலைன்னு கேட்டா, ஆல்ரெடி போக்சோ போட்டிருக்குன்னு பதில் சொல்றாங்க. ஏங்க ரெண்டுமே ஒரே வழக்கா என்ன? என் பொண்ணைத் துன்புறுத்துனதுக்கு என் பொண்ணு கொடுத்த புகாருக்கு நீங்க போக்சோ போட்டுருக்கீங்க. நான் என்னை அவர் அடிச்சு என் மீது நிகழ்த்தின வன்முறைக்காக கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன். அதுக்கு எந்த ஸ்டெப்பும் எடுக்காம அதான் ஆல்ரெடி கேஸ் போட்டாச்சேன்னு சொல்றது எப்படி சரியா இருக்கும்?

ரஞ்சனா நாச்சியார்
ரஞ்சனா நாச்சியார்

என் பர்சனல் விஷயத்தைக் கட்சிக்கோ, மீடியாவுக்கோ எடுத்துட்டு போக வேண்டாம் என்கிற நோக்கத்தில்தான் இத்தனை நாள் அமைதியா இருந்தேன். கம்ப்ளைன்ட் எடுக்கிறதுக்கு நாங்க வழிவகை செய்வோம்னு மீடியா கொடுத்த நம்பிக்கையில்தான் இந்தப் பிரச்னை குறித்து எல்லார்கிட்டயும் பேச சம்மதிச்சேன்" என்றவர் பல விஷயங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!