Published:Updated:

``என் கண்கள் மலையாளத்தில் ரொம்ப ஃபேமஸ்; ஆனா, தமிழ்நாட்டில்...!" - பர்சனல் பகிரும் சாதனா

சாதனா

'Saturday night' என இப்போதைக்கு பெயர் வச்சிருக்கும் புதுப் படம் ஒன்றில் நிவின் பாலிக்கு அம்மாவாக நடிச்சிட்டு இருக்கேன். அவருடன் சேர்ந்து நடிக்கிறது ரொம்ப ஜாலியா இருக்கு.

``என் கண்கள் மலையாளத்தில் ரொம்ப ஃபேமஸ்; ஆனா, தமிழ்நாட்டில்...!" - பர்சனல் பகிரும் சாதனா

'Saturday night' என இப்போதைக்கு பெயர் வச்சிருக்கும் புதுப் படம் ஒன்றில் நிவின் பாலிக்கு அம்மாவாக நடிச்சிட்டு இருக்கேன். அவருடன் சேர்ந்து நடிக்கிறது ரொம்ப ஜாலியா இருக்கு.

Published:Updated:
சாதனா
சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலமான முகம் சாதனா. மலையாளத்தில் சாரி (shari) என்றால்தான் தெரியும். சமீபத்தில் வெளியான `ஜன கன மண' திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்ட நிலையில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.
சாதனா
சாதனா

இயக்குனர் பத்மராஜன் பற்றி தெரியுறதுக்கு முன்னாடியே தொடர்ந்து அவருடைய படங்களில் நடிச்சிருக்கேன். இயக்குனர் ஶ்ரீதரின் `உன்னைத் தேடி வருவேன்' படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானேன். அந்தப் படத்தில் தான் நளினி எனக்கு அறிமுகமானாங்க. அப்ப ஆரம்பிச்ச எங்களுடைய ஃப்ரெண்ட்ஷிப் இப்ப வரைக்கும் தொடர்ந்துட்டு இருக்கு. அவங்க இருந்தாலே அந்த இடம் அவ்வளவு பாசிட்டிவ் ஆக இருக்கும். நான் அவங்களை நீனின்னு கூப்பிடுவேன்.. அவங்க என்னை சாத்திம்மான்னு கூப்டுவாங்க. 'ஜன கன மண' படம் பார்த்துட்டு ஹே சாத்திம்மா உன் படம் சக்கை போடு போடுதுன்னு ஃபோன் பண்ணி பேசினாங்க. நான் பாப்பாவுக்காக பிரேக்ல இருந்தப்ப நீ ஏன் நடிக்க மாட்டேன்ற, நடின்னு உரிமையா கூப்பிட்டுச் சொல்லுவாங்க.

என் அப்பா தெலுங்கு, பாட்டி கன்னடம், எங்க வீடு பாரதவிலாஸ் மாதிரி இருக்கும். நாங்க கூட்டுக் குடும்பமா இருந்தோம். என்னோட பாட்டி பழைய நடிகை. பல கன்னடப் படங்களில் நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு பிறகு அம்மா இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கல. என்னை அந்த வாய்ப்பு தேடி வந்ததும் அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். என் பாட்டியோட செல்லப் பேத்திங்கிறதனால என்னை அவங்க தான் வளர்த்தாங்க. என் கூட ஷூட்டிங் வந்து எல்லாத்தையும் அவங்களே கவனிச்சிப்பாங்க.

சாதனா
சாதனா

எனக்கு சினிமா பார்க்க பிடிக்கும். அதைவிட சினிமா தியேட்டரில் விற்கக் கூடிய பாப்கார்ன் ரொம்பப் பிடிக்கும். அதுக்காக மட்டுமே தியேட்டருக்கு படம் பார்க்க போவேன். எத்தனை பாப்கார்ன் சாப்பிட்டாலும் சினிமா தியேட்டரில் விற்கக் கூடிய பாப்கார்னிற்கு ஈடு இணையே கிடையாது. சமீபத்தில் ஃபேமிலியுடன் விக்ரம் படம் பார்க்கப் போயிருந்தேன். அங்க போனதும் என் பொண்ணு என்ன பாப்கார்ன்தானே போங்க வாங்கிட்டு வரேன்னு சொல்லி வாங்கிட்டு வந்தா... ப்ப்பா என்ன படம் இது! ஹாலிவுட்டிற்கு நிகரா ஒரு தமிழ்ப்படம் எடுத்திருக்காங்கன்னு சந்தோஷமா இருந்துச்சு. கைத்தட்டி செமையா என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன். கமல் சாருக்கு ஜோடியாக நான் நடிக்கல.. ஆனா, அவருடைய படத்துல நடிச்சிருக்கேன் என்பதே அவ்வளவு பெருமையா இருக்கு.

'ஜன கன மண' இயக்குனர் டிஜோவாக இருக்கட்டும், இப்ப நிவின் பாலியுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன் அந்தப் படத்துடைய இயக்குநராக இருக்கட்டும் இப்ப இருக்கிற இளம் இயக்குநர்கள் எல்லாரும் அவங்களுக்கு என்ன வேணும் என்பதில் ரொம்பவே தெளிவா இருக்காங்க. 'ஜன கன மண' படத்தில் நடிக்கும்போது என் கேரக்டர் முஸ்லீம் கேரக்டர்னு தெரியும். கொச்சின்ல பிரமாண்டமா கோர்ட் செட் போட்டிருந்தாங்க. நான் எந்த மேக்கப்பும் போடாம உட்கார்ந்திருந்தேன். டிஜோவும், கேமரா மேனும் மானிட்டரில் பார்த்துட்டு திரையில் நான் ரொம்ப பளிச்னு தெரியுறதா சொன்னாங்க. நான் மேக்கப் எதுவும் போடலைன்னு சொன்னதும் இல்ல சேச்சி உங்க ஸ்கின் பிரைட் ஆக இருக்குன்னு சொன்னாங்க. அவர் மைண்ட்ல இந்தக் கேரக்டர் இப்படித்தான் இருக்கணும்னு ஒரு கற்பனை இருக்குன்னு புரிஞ்சது. மேக்கப் மேனை கூப்பிட்டு டல் மேக்கப் போட சொன்னாங்க. அவர் டல் பண்ண, பண்ண இன்னும் போடுங்கன்னு சொன்னாங்க. இறுதியில் பிளாக் ஸ்டிக் எதையோ எடுத்துட்டு வந்து முகம், கை, கால் எல்லாம் பூசினாங்க. பார்க்க பூதம் மாதிரி இருக்கேன்னு சொன்னேன். இல்லை சேச்சி இந்தக் கேரக்டர் நிச்சயம் ரீச் ஆகும்னு டிஜோ சொன்னார். அந்த மாதிரியே அந்த லுக் பலருக்கும் பிடிச்சிருந்தது. 'Saturday night' என இப்போதைக்கு பெயர் வச்சிருக்கும் புதுப் படம் ஒன்றில் நிவின் பாலிக்கு அம்மாவாக நடிச்சிட்டு இருக்கேன். அவருடன் சேர்ந்து நடிக்கிறது ரொம்ப ஜாலியா இருக்கு. அவர் பயங்கர ஸ்வீட் என்றவரிடம் சீரியல் குறித்துக் கேட்டோம்.

சாதனா
சாதனா

நல்ல, நல்ல கேரக்டர் ரோல் பண்ண சீரியலில் வாய்ப்பு கிடைச்சது. விகடன் புரொடக்‌ஷனில் 'அவர்கள்' சீரியல் பண்ணினேன். அதே மாதிரி 'தென்றல்' சீரியலும் எனக்கு பயங்கர ரீச் கொடுத்துச்சு. 'கல்யாணம் முதல் காதல் வரை' தொடரில் வேற லெவலில் பண்ணியிருப்போம். அந்த செட்டே ஜாலியா இருக்கும். பிரியா பவானி சங்கர் பயங்கர ஜாலியா இருப்பாங்க. இப்ப வேற லெவலில் போய் நிற்கிறாங்க. அப்போதிலிருந்து இப்ப வரைக்கும் அதே மாதிரி தான் இருக்காங்க. இப்ப கூட ஃபோன் பண்ணி பேசுவாங்க. இதுவரைக்கும் நாங்க டச்ல தான் இருக்கோம் என்றவரின் கண் குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.

எனக்கு மட்டும் ஏன்மா பூனைக்கண்ணுன்னு நண்பர்கள் கிண்டல் பண்ணும் போது அம்மாகிட்ட கேட்பேன். இந்தக் கண்ணு தமிழ்நாட்டுல ஃபேமஸ் ஆகல. ஆனா, மலையாளத்தில் என் கண்கள் தான் பயங்கர ஃபேமஸ். தமிழ்நாட்டுல அந்தக் கண்கள் கிளாமராகவும், நெகட்டிவ் ஆகவும் இருக்குன்னு பெரும்பாலும் லென்ஸ் பயன்படுத்தி தான் நடிச்சிருக்கேன்!' என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து நடிகை சாதனா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!